தமிழர்களாகிய நாம் பதிவு போட வேண்டுமா...

>> Wednesday, October 19, 2011


என்னடா இந்த பன்னாடை jiiiigh அப்படின்னு போட்டு ஒரு போஸ்ட்டை போட்டுருக்கறானே இவன் என்ன மென்டலா அப்படின்னு பாக்கறீங்க என்ன பன்றது பிரதர் நாடு போடுற சீ...சீ....உலகம் போறத பார்த்தா இனிமே நாம முக்கியமா பதிவு போடக்கூடாது என்ன சார் பின்ன

சூர்யஜீவா அண்ணாச்சி கமெண்ட் போட்டிருக்கிறார்

"நல்லா தான்யா போடுறீங்க பதிவு...
தம்பி டீ இன்னும் வரல"

அண்ணனுக்கு வணக்கம் நான் நேற்றைக்கு ஒரு நியூஸ் படிச்சேன் மலையாளத்தில நண்பன் படிச்சு சொன்னது அவன் சொன்னான் கொய்யால என்னடா பதிவு போடுறீங்க எங்காளு(மலையாளி) ஒருத்தன் பன்னியிருக்கான் பாரு "யூ-டுயூப்ல" நாக்க புடுங்கிட்டு சாகுங்கடா...! என்றான் எனக்கு வந்ததே கோபம், தமிழ் ரத்தம் கொதித்தது, தமிழ்ல எவ்வளவு "நல்ல" விசயத்தை எழுதறாங்க இப்படி சொல்லிட்டானே என்னடா குறையை கண்டுட்டே "பந்தரன்ரை" என்று கேட்டேன்

நீயும் கவிதை எழுதர விமர்சனம் போடுற கட்டுரை எழுதர உனக்கு கூகுல்ல இருந்து பத்து பைசா வாங்கியிருக்கியா? ங்ஙே என முழித்தேன் இல்லையே.... என்றேன் தமிழுக்கு விளம்பரம் கூட கிடைக்கிறதுல்லை என்றேன் ஈனஸ்வரத்தில்
அப்ப நான் படிச்ச நியூஸ்சைக்கேளு என்றான் அது

சந்தோஸ்பண்டிட் அப்படிங்கர அண்ணன் மகா.....மொக்கையா மொக்கையினா மொக்கை அப்படி ஒரு மொக்கையா ஒரு ஆல்பம் ரெடி பண்ணினாரு அவரே டைரக்சன் அவரே இசை அவரே நடிகர் கதாநாயகி ஒரு அட்டுன்னா...அட்டு...அப்படியொரு..அட்டு..! கொல்லங்குடி கருப்பாயி ரேஞ்சுல நம்ம பங்காளி சுற்றியுள்ள நண்பர்களுக்கு "சிடி" கொடுத்திருக்கிறார் அதோட அவர் பிரண்ட்சிப்பே வேண்டாம் என ஓடி விட்டார்களாம். 

நல்லா விட்டத்தை பார்த்து ரோசனை பண்ணின தலைவர் யூடுயூப்ல போட்டுட்டார் உலகத்தில் உள்ள கெட்டவார்த்தையெல்லாம் போட்டு படிக்கவே கண்,காது,மூக்கு, இன்னபிற சமாச்சரமெல்லாம் கூசரமாதிரி திட்டி கமெண்ட் போட்டிருக்காங்க என்னடா இப்படி திட்டுறாங்கன்னு சேட்டன் தூக்கிட்டாரு..! விட்டாங்களா நம்ம ஆளுங்க டவுன்லோடு பண்ணி மறுபடியும் யாரோ? போட்டுட்டாங்க...! 

என்னடா... இந்த ஆள இப்படி திட்டுறாங்கன்னு (ஒன்று இரண்டு இல்லை மொத்தம் 82000 கமெண்ட்ஸ்)பார்த்தவங்க 25லட்சத்திற்கு மேல் கூகுல் அண்ணாச்சிக கூப்பிட்டு பாராட்டி அண்ணனுக்கு லம்பா ஒரு அமெவுண்ட் கொடுத்துட்டாங்க வாங்கிய சந்தோஸ் என்ன செய்ய போறாரு தெரியுமா? (யோவ் கூகுல் கமெண்ட் ஹிட்சை பார்த்து ஏமாந்துட்டியே பக்கி எல்லாம் வெளிநாட்டு பக்கிகளா இருக்கு என்ன பன்றது)

படம் எடுக்கபோறாரு படத்து பேரு "கிருஷ்ணன்ராதை"டைரக்சன்,கதை,வசனம்,இசை,சண்டை,பாடல்,கலை,எடிட்டிங், பிண்ணனியிசை,எபக்ட்,உடைகள்,டைட்டில் கிராபிக்ஸ்,தயாரிப்பு, ஸ்.....அப்பா எல்லா சேட்டன்தான் கேமரா மட்டும் வேற

இன்னோரு முக்கிய செய்தி படத்தை மூனு மொழியில தயாரிக்கிறார் அதை லிம்கால பதிவுபண்ண போறாங்களாமா...அதுல நம்ம தமிழும் ஜெண்டில்மேன்(சிபி மாட்டுனீங்க ஐ..ஐ...ஐ)கண்டிப்பாக பெண்கள் இந்த லிங்க கிளிக் பண்ணாதீங்க அப்படியே பார்க்க ஆசைப்பட்டாலும் கமெண்ட்டை படிக்காதிங்க
என்ன சூர்யஜீவா அண்ணாச்சி டீ வந்திருச்சா....

9 comments:

suryajeeva 11:34:00 PM  

தம்பி இது டீ இல்ல, டீ கிளாஸ் கழுவின தண்ணி...
வடை போகல தான...
வடை எனக்கே...
முத்த முறையா வடை கமெண்ட் போட்டிருக்கேன்...

Yoga.S.FR 2:00:00 AM  

நம்மூரு எம்.சி.யார மிஞ்சிட்டார் போலருக்கே?சூரியஜீவாக்கு வடைன்னா,எனக்கு டீ!!!!

DrPKandaswamyPhD 5:51:00 PM  

ரொம்பதான் பில்டப் கொடுக்கறீங்க. 26 ஆயிரம் பேர்தான் பாத்திருக்காங்க. 1400 கமென்ட்ஸ்தான் வந்திருக்கு.

veedu 9:20:00 PM  

அய்யா நாங்கள் பில்டப் கொடுக்கவில்லை சந்தோஷ் இண்டர்வியூ பார்த்தீர்களா?நான் கொடுத்த லிங்கில் உள்ள வீடியோ மட்டும் 268,161 பேர் பார்த்து இருக்காங்க அது மாதிரி ஏகப்பட்ட வீடியோ இருக்கு அவருடைய வீடியோ வை download செய்து தன்னுடைய கணக்குல போட்டவங்க ஏகப்பட்டவங்க நிறைய பிளாக்ல இந்த நியுஸ் இருக்கு அதுல நானும் ஒருத்தன் அந்தாளு ராசிகாரப்பய போல அய்யா முதன்முறையா எனக்கு கமெண்ட் போட்டிருக்கிறார் நன்றிங்கய்யா...

veedu 9:27:00 PM  

வீடு ஆதாரமில்லாமல் எந்த தகவலையும் தரமாட்டோம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்
ஏசியா நெட் நியூஸ் லிங்க்

http://www.youtube.com/watch?v=6PEbPKZc5eY&feature=related

DrPKandaswamyPhD 11:49:00 PM  

நான் கொஞ்சம் கணக்கில வீக்தானுங்க. நீங்க சொல்றது கரெக்ட்டுங்க.

நிரூபன் 8:18:00 AM  

என்னய்யா அந்தாளோட வீடியோவில சிறுவர் துஷ்பிரயோகம்,
Santhosh child abuser என்று போட்டு திட்டியிருக்காங்க.

veedu 8:24:00 AM  

"கதாநாயகி குழந்தையாம்"
அம்மணி இப்ப கன்னடத்தில குத்தாட்டம் போடுதுதாம் Latest news

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP