மழைக்காதலி(கவிதை)
>> Friday, October 28, 2011
ஒரு மழைக்காலத்தின்
பின் பொழுதில்
பேருந்துகள் ஏதும் ஓடாத
ஒரு நாளில் வழியின்றி
நின்றுருந்த அவளை
என் வாகனத்தில் ஏற்றி
அவளில்லம் சேர்த்தேன்
அன்றிலிருந்து...
எதிர்ப்படும்போது
ஒரு புன்னகை!
கொஞ்சம் வெட்டிப்பேச்சு!
செல்பேசி எண்ணின்
பன்டமுறைமாற்றலில்
நிறையப்பேச்சு...
என நட்பு வளர்ந்தது...
பின்னொரு
மழைக்காலத்தில் நட்பு
காதலானது
கரங்கள் கோர்த்து
கடல்கரை மணலில்
கால் பதித்து நடந்து
கதை பேசினோம்
காரணங்கள் இல்லாமல்
சிரித்து மகிழ்ந்தோம்...
அதேபோல்
ஒருமழைகாலத்தில்
முறிந்து போய் சாலையில்
கிடக்கும் மரம்போல்
எங்கள் காதலும்
முறிந்து போனது
தொழில்நுட்பம் அறிந்த
எனக்கு பணநுட்பம்
அறியாததால்
பகுத்தறிவு அறிந்த
எனக்கு பெண்ணறிவு
குறைவுதான்
வேறொறுவனுக்கு
நிச்சயம் செய்யப்பட்டாள்
நான் எச்சில் இலையாக்கப்பட்டேன்
காதலின் சோகம்
மனதையழுத்த
சாலையின் ஓரம்
நடந்து வந்துகொண்டிருந்தேன்
மழை ஆரம்பித்தது
வெய்யிலின் சூடு
பொறுத்தவர்கள்
மழையின் குளுமை
பொறுப்பதில்லை ஏனோ...?
ஓட்டுக்குள் பதுங்கிய
நத்தையாய் பதுங்குகின்ற
மனிதர்கள்...
ஒருவரும் சாலையில் இல்லை
நான் மழைக்காதலன்தான்
ஆனாலும்
காதலியின் பிரிவின் துயரத்தால்
மழையின் சுகம் தெரியவில்லை..!
என்னை நொந்து
நடந்து சென்ற என்னை
தடுத்து நிறுத்தியது
ஒரு பெண் குரல்
அழகான
ஒரு தேவதை
இருட்டாயிருந்த
தெருவை காண்பித்து
என்னை என் வீடு வரை
கொண்டு விட முடியுமா
பயமாயிருக்கு
என்று கெஞ்சியது
வீடுவரை
விட்டு வந்தேன்
அவள் பெயர்,
வேலை, ஊர்
எல்லாம் கேட்டேன்
திரும்பி வந்த
என்னுள்...
ஏனோ..! அவள் முகம்
நிலலாடிக் கொண்டேயிருக்கின்றது...
இன்னோறு மழைக்காதலி
கிடைத்துவிட்டாளா...!
11 comments:
ஒரு முறை சறுக்கினாலும் மீண்டும் தவறு செய்யும் பிழை தான் காதலோ
///ஒரு முறை சறுக்கினாலும் மீண்டும் தவறு செய்யும் பிழை தான் காதலோ///
''முயற்சி திருவினை ஆகும்''
சூடுகண்ட பூனை அடுப்படியை நாடாது என்ற பழமொழியெல்லாம் காதலில் செல்லுபடியாகாது போலிருக்கே
அந்த ஓவியம் அருமை
நீங்கள் வரைந்ததா
கவிதை அருமை சகோ
மதுரன் அவர்களுக்கு வணக்கம்
ஆம் நான் வரைந்ததுதான் வருகைக்கு நன்றி
//
என்னை நொந்து
நடந்து சென்ற என்னை
தடுத்து நிறுத்தியது
ஒரு பெண் குரல்
அழகான
ஒரு தேவதை
இருட்டாயிருந்த
தெருவை காண்பித்து
என்னை என் வீடு வரை
கொண்டு விட முடியுமா
பயமாயிருக்கு
என்று கெஞ்சியது
//
அழகான வரிகள்
ஓவியம் அருமை
"கழுதை போனால் குதிரை " அப்படின்னு என நண்பன் அடிக்கடி சொல்லுவான் ... அதுவா இது .....?
ஆஹா.
மழைக் காலத்தில் காதலில் விழுந்து, மழைக் காலத்தில் பிரிந்து,
பின்னர் மீண்டும் ஓர் மழைக் காலத்தில் புதிய காதலைப் பெற்ற கவிஞனின் உணர்வுகளை இக் கவிதை சொல்லி நிற்கிறது.
Post a Comment