முரன் திரைப்படம் எப்படியிருக்கின்றது?
>> Tuesday, October 11, 2011
"யு"டிவி யின் தயாரிப்பில் ராஜன்மாதவ் என்பவர் இயக்கியுள்ளார், இது ஒரு "ஆங்கிலப்படத்தின் "தழுவல்" என்பது இணையத்தில் உலவும் செய்தி அதைப்பற்றி எந்த அறிவிப்பும் திரைப்படத்தில் இல்லை!
நிறைய இயக்குனர்கள் இந்த தவறைச்செய்கின்றார்கள் இயக்குனர் "மகேந்திரனை" விட மனித உணர்வுகளை வெளிப்படுத்தியவர்கள் யாரேனும் உண்டா?அவர் ஒரு சிறந்த இயக்குனர் என்பதில் எள்ளவும் சந்தேகமுண்டா? இல்லை ஆனால் அவர் பெரும்பாலான திரைப்படங்கள் ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர்கதைகளை இயக்கியிருப்பார் அதற்க்கான அறிவிப்பை வெளியிடுவார் அது அவருடைய நேர்மைக்கு ஒரு சான்று, அதனால் அவர் ஒன்றும் குறைந்துவிடவில்லை, பிறகு ஏன்? எந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்டது, சிறு கருவானாலும் அறிவிப்பது ஒரு படைப்பாளிக்கு அழகு, ஆனால் பத்திரிக்கை மற்றும் இனையதள நண்பர்களுக்கும் நன்றி என்று டைட்டிலில் போடுகிறார்கள் வரவேற்க்ககூடியது.
இந்த படத்தின் கதையை கூறிவிட்டால் படம் பார்ப்பது சுவையில்லாமல் செய்துவிடும், அதனால் படம் எப்படிப்பட்டது என்பதைப்பற்றிமட்டும் அலசுவோம், இரண்டு முரன்பாடான குணமுடைய இருவர் பிரசன்னா மற்றும் சேரன், சேரன் மற்றும் நிகிதா, பிரசன்னா மற்றும் ஜெய்பிரகாஷ் இவர்கள் தான் கதைக்கான அடித்தளம்.
கருத்துக்கள் ஒத்தவர்களோடு நட்பு கொள்வதும் காதல் கொள்வதும்தான் இனிமை தரக்கூடியது இல்லையென்றால் நரகம்தான் அப்படியொரு நரகத்தில் வாழ்பவர்தான் சேரன் அவரின் மனைவியான நிகிதா சேரனை பிடிக்காமல் வேண்டாவெறுப்பாக வாழ்பவர் இசையை மருந்தளவு கூட ரசிக்காத மனைவி கிதார் இசைக்கலைஞர் சேரன் அவருடைய வாழ்வில் ஒரு மயிலிறகைப்போல் மனதை வருடும் தோழி ஹரிப்பிரியா அவர்களின் காட்சியமைப்பை இயக்குனர் மழைச்சாரலில் நனைந்து கொண்டே செல்லும் கார் பயணத்தைப்போல் அழகாக செதுக்கியுள்ளார்
பணக்கார இளைஞனாக வரும் பிரசன்னா தமிழ் சினிமாவின் காட்டுகத்தல் கண்கள் சிவக்க வசனம் பேசும் வில்லன்களுக்கு மத்தியில் ஒரு சாக்லெட் வில்லன் பிருதிவிராஜ் கனாக்கண்டேனில் இது போன்று செய்திருந்தார் இயக்குனர் முறையாக பயன்படுத்தியுள்ளார் பிரசன்னா வில்லன் என்றால் சேரன் ஹீரோ என கற்பித்துக்கொள்ளமுடியாது உண்மையில் படத்தின் ஹீரோ திரைக்கதைதான் இடைவேளை வரை ரிலாக்சாக செல்லும் கதை பிறகு சேரன் கொலை செய்வாரா?மாட்டாரா
என்னும் எதிர்பார்ப்பை இயக்குனர் ஆடியன்ஸ்க்கு கொடுப்பதில் வல்லவராக இருக்கிறார்
சேரன் பாடிலாங்வேஜ் இந்த பாத்திரத்திற்க்கு ஒத்துப்போகின்றது உதட்டை பிதுக்கிவைத்துக் கொண்டு ஒருமாதிரி நடிப்பவர் சேரன் மாயக்கண்ணாடி பார்த்திருந்தால் தெரியும் இதில் அந்த கொடுமையெல்லாம் இல்லை நடித்திருக்கிறார் சேரனின் பாத்திரத்தை பரிதாபப்படவைப்பதில் நிகிதா பாத்திரம் துணைநிற்கின்றது
நான் தாலிகட்டுன புருசன் தொடக்கூடாதா...
தாலிமட்டும் கட்டிட்டா போதும்மா...
நைட் நீ என்ன நிலைமையில வந்த தெரியுமா? அப்பவே கேட்டுருப்ப கேட்கர நிலமையில நீயில்லை
இங்க பாரு என்னை நீ கேள்வி கேட்க கூடாது என்னோட வருமானத்துல பத்து சதவீதம்தான் உன் வருமானம்
இதை போன்ற வசனங்கள் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றது பரிதாபப்படவைக்கின்றது, நிறைய திருப்பங்களை கொண்ட திரைக்கதையை மிக நேர்த்தியாக எங்கேயும் சலிப்படைய வைக்காமலும் கொண்டு சென்றதில் இயக்குனர் சபாஷ் பெறுகின்றார், திரில் கதையில் ஓவர் கவர்ச்சியிருக்கும், குடும்பத்தோடு பார்க்க முடியாது இந்த படத்தை குடும்பத்தோடு பார்க்கும் அளவு டீஸன்டாக எடுத்த இயக்குனரையும் தயாரிப்பாளரையும் நினைத்தால் வியப்பாகத்தான் இருக்கிறது..!
5 comments:
விமர்சனம் நல்லா இருக்குங்கோ!
ரொம்ப நன்றிங்கண்ணா....
இனிய காலை வணக்கம் பாஸ்,
வித்தியாசமான முறையில் முரண் படம் பற்றிய விமர்சனப் பகிர்வினைத் தந்திருக்கிறீங்க.
ரசித்தேன்.
அசத்தலான விமர்சனம்
முரண் முற்றிலும் மாறுபட்ட விமர்சனம்
Post a Comment