"புதிய இரட்டை அடுக்கு இரயில் வண்டி இந்தியாவில்"
>> Wednesday, October 5, 2011
இந்தியாவிலேயே முதன்முதலாக கொல்கத்தாவில் இரட்டை மாடி ரயில் வண்டி அறிமுகமாகியுள்ளது, இந்த வண்டி ஒன்பது பெட்டிகளைக்கொண்டது, இதில் ஆறு பெட்டிகள் குளிர்சாதன வசதி கொண்ட கார் போன்றது, மிஞ்சியுள்ள இரண்டு பெட்டிகள் ஜெனரேட்டர்களுக்காக பயன்படுகின்றது, முழுவதும் ஸ்டெயின்லெஸ் ஸடீல் பயன்படுத்தி பளபளவென்று வெளிநாட்டு இரயில் வண்டிகளைப்போல் தயாரித்துள்ளார்கள், அது அதிகபட்சமாக மணிக்கு 130கி.மீ.லிருந்து 160கி.மீட்டர் வரை வேகம் செல்லும், ஆனால் அனுமதியளித்திருப்பது 100லிருந்து 110வரைதான்...!
சாதரண பெட்டிகளில் 78 நபர்கள் வரை பயனிக்கலாம் ஆனால் இதில் 128 நபர் வரை பயனிக்கலாம் என்பது சிறப்பு, மற்றும் விமானத்தில் உள்ளது போல் (கன்ட்ரோல் டிஸ்ச்சார்ஜ்) கழிவறை பயன்படுத்தியுள்ளது கிழக்கிந்தியஇரயில்வே நிர்வாகம்.
இந்த இரயில் ஹவுராத்தில் இருந்து தன்பாத் வரை 207 கிலோமீட்டர் தூரம் வரை சனிக்கிழமையிலிருந்து நமது இரயில்வே அமைச்சர் தினேஷ்திரிவேதி அவர்களால் பச்சைக்கொடி காட்டி துவக்கிவைக்கப்பட்டுள்ளது.
அடுத்தது டில்லியிருந்து ஜெய்ப்பூர் வரை துவக்கப்பட்டுள்ளது அப்ப சரி எப்ப கொல்கத்தா போறீங்க?
4 comments:
நல்ல போஸ்ட்
இனிய இரவு வணக்கம் பாஸ்,
புத்தம் புதிய தகவலைத் தந்திருக்கிறீங்க,
நம்ம நாட்டுக்கும் இப்படி இரட்டை அடுக்கு ரயில் வந்தா எப்பூடி இருக்கும்?
நாடுன்னு சொல்றிங்க தமிழ்நாடா....வந்தா நல்ல இருக்கும் பாஸ்....
super
Post a Comment