ஒரு ஊமையின் அறிவிப்பு(கவிதை)
>> Sunday, October 2, 2011
எல்லா பூக்களும்
உன் கூந்தல் தேசத்தை
முடிசூடிக் கொள்ளவே!
விரும்புகின்றன...
உன்னால்
முணுமுணுக்கும் பாடல்
"ஆஸ்க்கருக்காக"
எல்லா பாடல்களும்
"தமிழ்பதிவர்கள்" போல்
அடிதடியிட்டுக்கொள்கின்றன...
நீ.. கட்டிக்கெள்ளும்
சாதாரன பஞ்சு புடவையை
பார்த்து..பார்த்து...
பட்டுப்புடவை
பொறாமை கொள்கின்றது...
உன்னை தொட்டு செல்லும்
காற்று கூட மழையை!
அறிவிக்கின்றன..
நீ குடை கொண்டு மறுத்தால்
கண்ணீர் போராட்டம்
தீவிரமாக நடத்துகின்றன...
உன் இருதயம்
லேசானது என்றறிந்த
பறவையினங்கள்
தங்களின் "இறகுகளை"
உனக்கு பரிசளிக்கின்றது...
நீ.. நடக்கும் போது எழும்
கொலுசொலி...இசையை
என்ன ராகம், என்ன தாளம் என
சுவர்கள் கிசுகிசுப்பாய்
பட்டிமன்றம் நடத்துகின்றன..
"பிரபஞ்சமே" உனக்கடிமையாக
இருக்கும் போது,
என் முக்கலும்,
முனகலும்
உனக்கெப்படி தெரியும்...?
தயவுசெய்து யாராவது
இந்த "கவிதையை"
அவளுக்கு வாசித்துக்காட்டி விட்டு
செல்லுங்கள்...
1 comments:
கவிதையிலேயே வம்பு!!!!
Post a Comment