வேலாயுதம் தீபாவளி பேன்சிவெடி

>> Saturday, October 29, 2011



சும்மாவே நா.. காட்டுகாட்டுன்னுகாட்டுவேன்...காட்டு...காட்டுன்னா...

படத்தில் வரும் பஞ்ச் டயலாக் விஜய்க்கு பொருந்துகின்றதோ இல்லையோ? அவருடைய ரசிகர்களுக்குப் பொருந்தும், ஏழாம்அறிவு, வேலாயுதம் என இரண்டு படமும் வெளியிட்ட "மல்ட்டிகாம்ளக்ஸ்" தியேட்டரில் இந்தப்படம் பார்த்தேன், வேலாயுதத்திற்க்கு நின்ற கூட்டம் ஏழாம்அறிவைவிட "பத்து மடங்கு" அதிகம் விஜய் ஒரு மாஸ் ஹீரோ என்பதில் சந்தேகம் இல்லையென்றாலும் தீபாவளிக்கு ஏனோ? இரண்டு படம் மட்டுமே வெளியிட்டிருக்கின்ற பட்சத்தில் இரண்டின் வெற்றியை தடுக்கமுடியாது 

இயக்குனர் "ராஜா"வைப்பற்றி சொல்லவேண்டியது என்றால் திறமைசாலி என்பதைவிட! புத்திசாலி... எடிட்டர் மோகனின் வாரிசான வர் சினிமாவுக்கு வந்தமுறை எப்படியென்றால்? "எடிட்டர்மோகன்" தெலுங்கில் தயாரித்த படம் ஒன்று படுதோல்வியை சந்தித்து, இருக்கும் சொத்தயெல்லாம் விற்று கடனை அடைத்தார் மிகவும் சிரமமான நிலையில் அப்பாவின் சிரமத்தை தீர்க்க இயக்குனராவது என முடிவெடுத்து குடும்ப நண்பர் "சங்கிலிமுருகனிடம்" ஆலோசனை கேட்க்கும் பொருட்டு ஒரு திரைக்கதையை கொடுத்தார்,

அதை தூக்கியெரிந்த சங்கிலிமுருகன் ஒரு தெலுங்கு பட டிவிடியை கொடுத்து இதை தமிழ்ல எடுக்கலாம் நல்லா படத்தைப்பார்த்து திரைக்கதை ரெடி பண்ணு நானே தயாரிக்கிறேன் என்று சொல்லவும் குடும்பமே உக்கார்ந்து ஒரு மாதத்தில் சிறந்த திரைக்கதையை தயாரித்து.

தயாரித்து வெளியிட்ட ஜெயம் மாபெரும் வெற்றி பெறவில்லையென்றாலும் பொருளை ஈட்டித்தந்தது குடும்ப சிரமத்தை சீரமைத்தது அப்படி சிரமப்பட்டு திரையுலகில் காலடியெடுத்து வைத்தவர்  தம்பி ரவியை ஹீரோ இல்லாமல் விஜயைவைத்து தெலுங்குபடமான ஆசாத்தை தமிழுக்காக மெருகேற்றியிருக்கிறார் முக்கியமான காமடி என்னவென்றால் ஆசாத் நம்ம "திருப்பாச்சி" பேட்டனில் உருவானதுதான்.

படத்தின் கதை "தங்கையின்" திருமணத்திக்காக நகை வாங்க சென்னை வரும் ஹீரோ ஜெனிலியாவின் கற்பனை பாத்திரமான வேலாயுதமாக
தன்னையறியாமல் உருவாகிறார் சென்னையில் குண்டு வைக்க வரும் தீவிரவாதிகளை மற்றும் தீவிரவாதிகளுக்கு உதவி செய்யும் ஹோம் மினிஸ்டர் ஆகியோரது சதிகளை முறியடிக்கிறார் இடையில் ஹன்சிகா.ஜெனிலியாவுடன் டூயட் பாடுகிறார் இவ்வளவுதான்

படத்தின் சிறப்பு வசனம், இடைவேளை வரை கலகலப்பாக செல்கின்றது உதாரணத்திற்க்கு சில...

கோழியை துரத்திச்செல்லும் விஜய் கல்லக்காதலனனுடன் உல்லாசமாக இருக்கும் பெண்ணின் வீட்டுக்குள் நுளைந்து விடுகிறார்..

அக்கா..யாரு அது..

விருந்தாளி

ஓ...விருந்தோம்பலா...நடக்கட்டும் நடக்கட்டும் ..

வெளியே வரும் விஜய் பெண்ணின் கணவனை பார்க்கிறார்

எண்ணண்னே...எங்க போய்ட்டு வர்ரீங்க

விளக்கு ரிப்பேர் பண்ணபோனேன் கையில் உள்ள விளக்கை தூக்கி காண்பிக்கிறார்

அப்ப சீக்கிரம் போய் புடிங்கன்னே...

தியேட்டரே அதிர்ந்து விட்டது

பிறகு சந்தானம் திருடதெரியாத திருடன் செம காமடி பண்ணுகிறார்

மானமுள்ளவனா இருந்தா 
நடுஹால்ல தூக்கு மாட்டி சாகனும்யா நீ...

உம் பொண்ணு சிக்ஸர் அடிக்கவா போறா வேல... கரைட் பண்ணபோறா நீ யெல்லாம் அப்பனா

இல்லை மாமன்

என்னது...

யோவ் வேலாயுதத்துக்கு மாமன்

படத்தை தூக்கி நிருத்துவது சந்தானம் காமடியும் வசனம் மட்டுமே

ஹன்சிகா தொப்புளை காட்டி கவர்ச்சி காட்டுவதும் விஜய்யை ஜொள்ளிட்டு சுற்றுவதும் என வழக்கமான வேலையை செய்திருக்கிறார் சொல்லும்படி ஒன்றும் இல்லை

ஜெனிலியாவை தேவையில்லாமல் விஜய்யை காதலிக்க வைத்து ஒரு டூயட்டுக்காக ஒப்பேற்றியிருக்கிறார்கள் விஜய்ய காதலிப்பது போன்று இல்லாமல் இருந்தால் கேரக்டர்க்கு ஒரு வெயிட் இருந்திருக்கும்

சரண்யாமோகன் விஜய்க்கு தங்கையாக வருகிறார் முகவெட்டு இருவருக்கும் பொருந்துவதால் விஜயின் தங்கையாக மிக கச்சிதமாக பொருந்துகிறார் நன்றாக நடித்திருக்கிறார் ஆனால் நிறைய படத்தில் அண்ணன் தங்கை சென்டிமென்ட் பார்த்ததால் ஈர்ப்பு இல்லை



ரயில் கெமிக்கல் பேக்டரியில் உள்ள டேங்க் மீது மோதும் காட்சியில் கிராபிக்ஸ் கலைஞர்கள் உழைத்திருக்கிறார்கள், ஆனால் லாஜிக் ஓட்டையால் வீணாகிவிட்டது எந்த கெமிக்கல் பேக்டரியில் தண்டவாளத்தின் நடுவில் கொண்டுபோய் அபாயகரமான கெமிக்கல் உள்ள டேங்க்கை வைப்பார்கள் கொஞ்சமாவது சிந்திங்கப்பா...


சரி குறை சொல்லிக்கொண்டு போனால் நிறைய சொல்லலாம்... இந்த மாதிரி லாஜிக் ஓட்டையுள்ள எத்தனையோ படங்கள் நன்றாக ஓடியுள்ளது... இதுவும் ஓடும்... 

பாடல்கள் கேட்கின்றபோதுள்ள இனிமை திரையில் இல்லை சுமார்தான்

வேலாயுதம் ஒரு பொழுதுபோக்குக்காக பார்க்கலாம் போரடிக்காது, பார்க்கலாம் தவறில்லை ஆனால் நண்பர் நிருபன் அவர்கள் கூறியது உண்மைதான் வன்முறை சண்டைக்காட்சிகளில் ஏன் இவ்வளவு கொடூரம் விஜய் படத்தினை குழந்தைகள், பெண்கள் அதிகம் விரும்புவார்கள் என விஜய் அறிந்துகொள்ளவேண்டும்..!





10 comments:

கோகுல் 11:12:00 PM  

எப்படியோ வேலாயுதம் கரை சேர்ந்தாச்சு!

இராஜராஜேஸ்வரி 11:44:00 PM  

"வேலாயுதம் தீபாவளி பேன்சிவெடி"

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

rajamelaiyur 12:04:00 AM  

ஜாலியா படம் பாக்கலாம்

Unknown 10:38:00 PM  

காசு கொடுத்து பாத்ததுக்கு ஒர்தா இல்லையா சொல்லும்யா மாப்ள!

Unknown 11:15:00 PM  

தனிப்பட்ட முறையில் விஜய்யை எனக்கு புடிக்கும் ஆனாலும் விமர்சனம் நடுநிலையா இல்லையா நீங்களே சொல்லுங்க

Unknown 11:19:00 PM  

கோகுல், ராஜராஜேஸ்வரி, ராஜபாட்டை ராஜா , விக்கி அனைவருக்கும் நன்றி

சக்தி கல்வி மையம் 12:56:00 AM  

அப்ப ஒரு ஜாலியான படம்னு சொல்றீங்க..

saro 3:52:00 AM  

உங்கள் பதிவு மிகவும் நன்றாக இருந்தது. தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன் வாழ்த்துக்கள்


Hot tamil actresses

நிரூபன் 12:34:00 AM  

தல விமர்சனம் பின்னி எடுத்திருக்கிறீங்க.
நடு நிலமையான பார்வையில் விமர்சனம் அசத்தல்.

சண்டைக் காட்சிகளில் ஆளை ரெண்டு துண்டாக வெட்டுவதெல்லாம் ஹாலிவூட் கொடூரப் படங்களில் வருபவை..
உதாரணம் ஹனிபாலிசம் பற்றி பேசும் படங்கள்
அதனால் தான் விஜய் படம் குழந்தைகளுக்கு உகந்தது அல்ல என்று எழுதியிருந்தேன்.

singam 4:55:00 AM  

nadu nilaya illai

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP