ஜெயிச்சவங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவும்,தோத்தவங்களுக்கு ஆறுதல் சொல்றதுக்கு போன நம்ம சினிமா கமெடியன்கள்

>> Saturday, October 22, 2011




வாங்க நண்பர்களே இன்னிக்கு ஞாயித்துகிழமை லீவுநாளு உள்ளாட்சி தேர்தல் நன்றி தெரிவிப்பு கூட்டம் நடந்திட்டு இருக்கு ஜெயிச்சவங்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவும் தோத்தவங்களுக்கு ஆறுதல் சொல்றதுக்கு நம்ம சினிமா கமெடியன்ஸ் எல்லாம் 
போயிருக்காங்க எப்படின்னு மக்களுக்கு தெரியவேண்டாமா.....ஓரு கற்பனை

----------------------------------------------------------------------------------------------------------------

நம்ம கவுண்டமனி அண்ணன் அம்மாவுக்கு வாழ்த்து சொல்ல போறார் அங்க செந்தில் வரார்

அண்ணே......அண்ணே...... அண்ணே...... எங்க கட்சி ஜெயிருச்சுனே எதாவது வாழ்த்து சொல்லுங்கண்ணே....


டேய்...அரைடவுசர் தள்ளி உக்காரு பெட்ரோமாக்ஸ் பக்கத்துல உக்காராதே...


டேய்...... அரசியல்ல ஜெயிக்கறது பெட்ரோமாக்ஸ்க்கு உள்ள இருக்குற மேனல் மாதிரி அது உயிரோட இருக்கர வரைக்கும்தான் மவுசு... அதுக்கு எதாவது நல்லது பண்ணிட்டே இருக்கனும் அதாவது மண்ணெண்ணை ஊத்திக்கிட்டே இருக்கனும் இல்லைன்னா அட கென்னியா மக்கா கொடநாட்டுல கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....தான்


---------------------------------------------------------------------------------------

வடிவேலு கலைஞர்க்கு ஆறுதல் சொல்லப் போகிறார்

அய்யா....அய்யா....அய்யா....அய்யா....இப்படி பண்ணிபுட்டாங்களே அய்யா....ம்ம்ம்ம அதெல்லாம் சரி அய்யா நாங்க ஆட்சியில இருந்த போது உள்ளாட்சி தேர்ந்தல்ல ஜெயிச்சோம் இப்ப அதிமுக ஜெயிச்சிருச்சுன்னு சொல்றீங்க அய்யா...எந்த அர்த்தத்துல சொல்றீங்க அய்யா

நாம எட்டாவது பாஸ்..! ஆனா? பத்தாவுதல பெயில்ய்யா.....!


இது கூட தெரியாம சின்னபுள்ளையாவே இருக்கீங்க...வ்வூவூவூவூவூவூவூவூவூ........................


---------------------------------------------------------------------------------------

ஜனகராஜ் விஜயகாந்த்துக்கு ஆறுதல் சொல்லபோகிறார் புல்மப்புல.....

அண்ணே நான் தாயம்மா....அடச்சீ ஜனகராஜ் வந்திருக்கன்னே......


நீங்க பேசர்ரது உங்களுக்கே புரியலங்க.............மக்களுக்கு எப்புடி புரியுங்க.......(விஜயகாந்த் டெரர் ஆகுகிறார்)


அய்யோ உங்கள கவுத்துட்டானுவ.....இப்ப எதிர் கச்சி தலிவரு இல்லன்டானுவ என்னங்க பண்ண போரீங்க......


தொப் என்று கீழே விழுந்துவிடுகிறார்


மப்பு தெளிஞ்சா தானா வீட்டுக்கு போயிடுவார் என்று விஜயகாந்த் போக


ஜனகராஜ் எழுந்து கவுண்ட தண்ணியடிச்சதாவே நம்பிட்டா என்று 
எஸ்கேப்


---------------------------------------------------------------------------------------

காங்கிரஸ் தலைவர் தங்கபாலுக்கு ஆறுதல் சொல்ல வெண்ணிறஆடைமூர்த்தி போகிறார்

ப்ப்பப்பரக்கேன்னு........படுத்து கிடந்த காங்கரச தூக்கி நிறுத்தபேறீங்கன்னு வந்திங்க சட்டமன்றத்துல சாச்சுபுட்டிங்க 


தொளதொளன்னு இருக்கர கட்சிய பளபளன்னு ஆக்கபோறிங்கன்னு வந்திங்க ப்ப்ர்ர்ர்ர்ர்ர்.....கிழிச்சுட்டிங்க


அடுத்தது என்ன செய்ய போறீங்க....


தங்கபாலு விட்டார் ஜூட்....


--------------------------------------------------------------------------

விவேக் ஆறுதல் சொல்ல போகிறார் ராமதாஸ் வீட்டுக்கு

அய்யா உங்களுக்கு ஆறுதல் சொல்ல போகப்போறதில்லை ஒரு கவிதை சொல்லப்போறேன்...


ஒரு தமிழ் குடிதாங்கி


மருத்துவசிங்கம்


தேர்தல் பரிச்சையில


சைபர் வாங்கியுருக்கே ஒரு ஆச்சர்யக்குறி.....


கடுப்பான அய்யா சவுக்கை எடுத்துவர விடு ஓட்டம்
--------------------------------------------------------------------------
என்ன மக்களே சிரிச்சிங்களா? கடுப்பானிங்களா?எதானாலும் கருத்த போடுங்க 


தமிழர்களாகிய நாம் பதிவு போட வேண்டுமா?
படிச்சிருப்பிங்க...படிக்காதவங்க படிச்சிட்டு வாங்க 


படம் ரிலீஸ் ஆயிருச்சு.... அடிக்க வராதிங்க.. சொல்றதக்கேளுங்க.. திருச்சூர் "பிந்து" தியேட்டர் ங்கெய்யால கில்மா படமா போடக்கூடிய தியேட்டர் (வருசத்துல 365 நாளும் சகிலா படமா ஓடும்) அந்த தியேட்டர்ல ரிலீஸ், 1000 கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், என செமக்கூட்டம், இரண்டு மணிநேரம் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது திருச்சூர், படம் பார்க்கபோன மக்கள் செம ரகளை செய்ததால் தியேட்டரே நாஸ்தியானது 
அட... எங்க போறிங்க? இருங்க தமிழ் கூறும் நல்லுலகுக்கு சீக்கிரம் வரப்போகுது அப்புறம் பார்த்துக்கலாம்...!

தியேட்டர்ல நடந்த ரகளை கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் 





8 comments:

அம்பாளடியாள் 11:56:00 AM  

என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் உறவினர்களுக்கும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி
பகிர்வுக்கு ........

Unknown 9:06:00 PM  

மாப்ள எனக்கு மருந்து கொடுக்காத மருத்துவர்தான் பிடிச்சிருக்கு ஹிஹி!இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

முனைவர் இரா.குணசீலன் 4:23:00 AM  

நல்ல கற்பனை நண்பா..

இரசித்தேன்
சிரித்தேன்.

முனைவர் இரா.குணசீலன் 4:24:00 AM  

தங்கள் தள வடிவமைப்பும்

இனம் இனத்தோடு சேரும் என்ற வலைஇலக்கு மொழியும் அழகாகவுள்ளன நண்பா..

Anonymous,  6:54:00 AM  

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா...

Unknown 7:47:00 AM  

அண்ணன் சூர்யஜீவா,சகோ அம்பாளடியாள்,மாம்ஸ் விக்கி,முனைவர் அவர்கள்,அனைவருக்கும் நன்றி

நிரூபன் 12:45:00 AM  

வித்தியாசமான கற்பனையோடு, நம்ம கரசியல் காமெடியன்களையும், சினிமா காமெடியன்களையும் சேர்த்து கலாய்த்திருக்கிறீங்க.

ரசித்தேன்.

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP