என்னை கண்காணிப்பவன்....(‘சவால் சிறுகதை-2011’)

>> Thursday, October 6, 2011


அன்பின் உடன்பிறாவாத... என் சகோதர....சகோதரிகளே...தாய் தந்தையரே அனைவருக்கும் வணக்கம் நானும் கிறுக்க சுவர்(blog) கிடைத்த காரணத்தினால் என் கிறுக்கல்களுக்கும் ஒரு சில திட்டும் குட்டும் நிறைய பாராட்டும்(தெரியாம பாராட்டிட்டோம்ன்னு சொல்றது காதுல விழுது)கொடுத்து உற்சாகப்படுத்திய அனைவருக்கும் நன்றி...

இந்த சிறுகதையை எழுதியுள்ளேன் என்னை மேலும் உங்கள் கைகளால் குட்டியும் திட்டியும் பாராட்டியும் மறக்காம ஓட்டும் போட்டு என்னை உற்சாகப்படுத்துவீர்கள் என நம்புகிறேன்...




என்னை கண்காணிப்பவன்....(‘சவால் சிறுகதை-2011’)

மாலை நேர கடமையை முடித்துக்கொண்டு "கதிரவன்" மெல்ல தன் வீட்டுக்கு சென்றிருந்தது ஜான் தன்னுடைய யமாஹா100ஐ வேகமாக விரட்டினான் ஜான் மாஜிஅமைச்சர் ராஜநாயகத்தின் வலதுகரம், இடதுகரம் எல்லாம் அவன்தான் தீவிரவிசுவாசி. ஆறுஅடி உயரம், கருப்புநிறம், தீவிர உடல்பயிற்சி காரணமாக காட்டெருமை மாதிரி மாதிரியிருந்தான், இடுப்பில் எப்போதும் குடியிருக்கும் "ஜெர்மன்" மேக் பிஸ்டல் இக்கம் என்பதை அறியாதது....

நகரின் ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் இரவு நேரங்களில் அமைச்சர் தாகசாந்தி செய்வார், பெரும்பாலும் அங்கே யாரும் போகமாட்டார்கள், ஜான் மற்றும் நம்பிக்கையான ஒரு சிலர் மட்டும் செல்வார்கள், அமைச்சர் போன்...! செய்து உடனே தோட்டம் வா! என்றவுடன் உடனே புறப்பட்டு செல்கின்றான் ஜான் சில மணிகளை தின்று பண்ணை வீட்டை அடைந்தான் ஜான்.

நடு தோட்டத்தில் அமைந்திருந்த பங்களாவின் போர்டிகோவில் வெள்ளை நிற மஹிந்திராவின் "வெரிடோ" பெமரோனியன் மாதிரி நின்றிருந்தது அதன் பக்கத்தில் யமஹாவை நிறுத்தி விட்டு சுற்றும் ஒரு முறை பார்த்தான் ஜான், ஒரு பெரிய கூண்டுகளில் அல்ஷேசன், புல்டாக் வகையறா நாய்கள் உருமிக்கொண்டுருந்தது, பைக் சாவியை சுழற்றிக்கொண்டே பங்களாவிற்க்குள் நுளைந்தான் ஜான். 

எதிரே ஜானைக்கண்ட பண்ணையை பார்க்கும் "ராசன்" ஜான்அண்ணே... அண்ணன் உங்களுக்காக மாடியில காத்துட்டு இருக்கிறார் போங்க என்றான், ஹாலில் இருந்து மாடிக்கு பிரவுன் கலர் மார்பிள் பதிக்கப்பட்ட சுழன்று...சுழன்று... செல்லும் படிக்கெட்டில் ஏறி மாடியை அடைந்தான் ஜான்.

மாடியில் தென்னைமரத்தின் குளிச்சியான காற்று உடலை இதமாக வருடியது, நடுநயமாக போடப்பட்ட வெல்வெட் சோபாவில் காதல் தண்டபாணி சாயலில் கோல்டு பிரேம் பவர் கண்ணாடியில் பனியன்,லுங்கியில் சாய்ந்து உக்கார்ந்திருந்தார் இராஜநாயகம், எதிரே இருந்த மேஜையில் ஃபாரின் பிராந்தி புல் பாட்டிலில் பாதி காலியாக இருந்தது வறுத்து வைத்திருந்த சிக்கன் மசாலாவில் குளித்துக்கொண்டுருந்தது கண்ணாடி டம்ளரில் மீண்டும் சரக்கை ஊற்றிய அமைச்சர் ஜஸ் க்யூப் போட்டு வைத்திருந்த பிளாஸ்க்கில் இருந்து இடுக்கியில் எடுத்து உள்ளே போட்டார் ஜஸ் கரைந்த பின் உள்ளே தள்ளி ஒரு சிக்கன் துண்டை எடுத்து வாயில் போட்டு மென்றார்...

உண்டபின் சிறிது ஜஸ் வாட்டரை குடித்துவிட்டு தொண்டையை செருமிக்கொண்டு வாடா உக்காரு... என்றார்,
ஜான் அவருக்கு எதிரில் பவ்யமாக தரையில் உக்கார்ந்தான், "தலைவரே என்ன விசயம் அவசரமா வரச்சொன்னீங்க..."
"முக்கியமான விசயம்தான் ஜான்... நம்ம ஆட்சி மாறினதால, இப்ப நம்ம கட்சி ஆளுகளை நோண்ட சொல்லி லஞ்ச ஒழிப்பு துறையை இந்த அரசு பிரசர் குடுக்குது, நம்பிக்கையான ஒரு ஆளு தகவல் குடுத்திருக்கிறான், இன்னும் ஓரிரு வாரத்தில ரெய்டு நடக்கலாம்...!



என்ன தலைவரே..! நாமதான் தேர்தலுக்கு முன்னேயே...எல்லாம் ரெடி பண்ணிட்டம்ல்ல ஆடிட்டர் கூட எந்த பிரச்சனையில்லைன்னு சொன்னார்...

டேய்..நீ.. முட்டாளா..? கடைசியா ஒரு லேண்டை முடிச்சுக்குடுத்தமே சேட்டுக்கு..' அவன் கொடுத்த கமிஷன் 12கோடிய தேர்ந்தல் முடிஞ்சு பார்த்துக்கலாம்ன்னு விட்டுட்டுடோம், நம்ம கட்சிதான் வரும்ன்னு கருத்துக்கணிப்பை நம்பினது தப்பாப்போச்சு...

அட..ஆமா இப்ப எண்ணன்னா பண்றது?ஆடிட்டர் கிட்ட கேட்டிங்களா...?

இப்ப ஒன்னும் பண்ண முடியாதுன்னு ஆடிட்டர் சொல்லிட்டார், ஏன்னா..' இப்ப என்னை சார்ந்தவங்க கணக்கை தீவிரமா வாட்ச் பண்றாங்க, நானும் மண்டையை போட்டு நசிக்கி பார்த்துட்டேன், நாலு லார்ஜ் உள்ள போனதுதான் மிச்சம்...' என்றபடி ஆகாயத்தைப் பார்த்தார் இராஜநாயகம்.

ஜான் சிறிது நேர யோசனைக்கு பின் "அண்ணா ஒரு யோசனை சரிவருமா பாருங்க" என்று தன் யோசனையை சொன்னான் கால் மணி நேரம் செலவிட்டு சொன்னதை செவிடுமடுத்து கேட்ட இராஜநாயகம் "சரியான யோசனைடா ஜான் அதுக்குத்தான் நீ.. வேனும்கறது சரி நீ என்னை காலைல பாரு என்றார்....' 
"இரவு மெல்ல...மெல்ல... உலகத்தின் மேல் கறுப்பு நிறத்தை அதிகப்படுத்திக்கொண்டது"

....................................................................................................................................................................

அதிகாலை சூரியன் தன் கதிர்களை புவியின் மேல் ஸ்கேன் செய்து பார்த்துக்கொண்டு இருந்தது, சுள்ளென்ற வெயில் முகத்தில் பட்டவுடன் மாடியில் படுத்திருந்த விஷ்ணு எழுந்து கண்களை கசக்கினான், இரவு குடித்த மட்டமான "டாஸ்மாக்" இப்போது வரை நாறியது, மாடியில் இருந்த பைப்பை திருகி முகத்தை கழுவினான், கையில் கட்டியிருந்த வாட்ச்..ஐ பார்த்தான் மணி 8.00AM என காட்டியது.

அவன் கிளம்பும் வரை அவனைப்பற்றி பார்ப்போம் B.sc வரை படித்த விஷ்னு ஒரு சேர் புரோக்கிங் அலுவலகத்தில் பணிபுரிகின்றான் மாதம் 7000 சம்பளம் அது அவன் குடிப்பதுக்கும் சாப்பிடுவதுக்கும் சரியாக இருக்கும் எந்த லட்சியமும் இல்லாத பயணம் அவனுடையது அவனுடைய அம்மாவும் அப்பாவும் ஓரு பேருந்து விபத்தில் இறந்த பிறகு எந்த சொந்தங்களுடன் ஒட்டாமல் தனியே வாழ்கிறான்.

விஷ்ணு குளித்து முடித்து அவசரஅவசரமாய் கீழேயுள்ள மெஸ்சில் நாலு இட்லியை விழுங்கிவிட்டு பேருந்து பிடித்து நகரத்தின் மத்தியில் உள்ள அலுவலகத்துக்கு சென்று தனக்கென ஒதுக்கப்பட்ட கணினியின் முன் அமர்ந்து அதில் மூழ்கினான் 10.00மணி இருக்கும் போது அவனுடைய சோனிஎரிக்சன் ரிங்டோனிட்டது எடுத்துப்பார்த்தான் நம்பர் மட்டும் இருந்தது யாராக இருக்கும் என்கின்ற யோசனையில் எடுத்து பேசினான்

ஹலோ...

யார் விஷ்ணுவா..?

ஆமா நீங்க யாரு?

உனக்கு தெரிஞ்சவர்தான் தம்பி எதிரே இருக்கற  விமலா காஃபி பார்க்கு வா உன்கூட பேசனும் 

போன் கட்டாகிவிட்டது யாராக இருக்கும் என்கின்ற சிந்தனையில் பர்மிஷன் கேட்டுவிட்டு காஃபி பார்க்கு சென்றான்

அங்கே சென்றவுடன் வா...விஷ்ணு என்றவரை பார்த்தவுடன் எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்று தன் மூளை ஹார்ட்டிஸ்க்கை சர்ச் செய்தான் விஷ்னு

என்னப்பா அடையாளம் தெரியிலையா? என்றார் அந்த நபர்

ஸாரி...ஸார் தெரியலை

ஓகே....ஓகே....ஓகே....நானே சொல்ர.. நான் APSபார்க்கு ஒரு நாள் குடிக்க வந்த ஓவராயி பிளாட் ஆயிட்ட நீதான் என்னை வீட்டுல விட்ட ஞாபகம் இருக்கா...?

ஆமா...ஆமா...ஆமா...சாரிண்ணே மப்புல இருந்ததால தெரியல உங்க...பேர் கூட...ஜான்னு சொன்னிங்க மினிஸ்டர் இராஜநாயகத்துகிட்ட வேலை செய்யறதா சொன்னீங்க

கரைக்ட் தம்பி உண்ணால எனக்கு ஒரு காரியம் ஆகனும் போய் ஒரு நாள் லீவு போட்டுட்டு வா...



என்னப்பா தயங்குற சேர் மார்க்கெட்ல அண்ண... முதலீடு செய்யற ஐடியாவுல இருக்கார் அதபத்தி கேட்டாரு எனக்கு தெரியல



அப்ப உன் ஞாபகம் வந்தது அன்னிக்கு என்னமோ உங்களுக்காக உயிரையே தருவன்னு சொன்னே மப்புல சொன்னியா சரி விருப்பம் இல்லைன்னா விட்டிரு நான் வேற ஆள் பாத்துக்கறேன்

அண்ணே தப்பா நினைச்சுக்காதிங்க இதோ இப்பவே ஆபிஸ்ல சொல்லிட்டு வருகிறேன் என்றான் விஷ்ணு.


அமைச்சர் இராஜநாயகம் முன் இருவரும் நின்று கொண்டுருந்தனர்

இராஜநாயகம் பேசினார் தம்பி விஷ்ணு சேர் மார்க்கெட் சந்தேகம் எல்லாம் கிடையாது நீ எனக்கு ஒரு உதவி பண்ணனும்... சும்மா வேண்டாம் உனக்கு இரண்டு லட்சம் தருகிறேன்.. அரசு வேலை வாங்கித்தருகிறேன்.. நீ...செய்யவேண்டியது சிம்பிளான வேலைதான்..!
ஏதாவது ஒரு பேங்கில உன் பேர்ல அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிக்க செக் புக் பாஸ் புக்கெல்லாம் எங்க கிட்ட குடுத்திரு எல்லா செக்-லயும் கையெழுத்து போட்டுக்கொடுத்திடு உன் அக்கவுண்ட்ல கொஞ்ச நாள் பணம் போடுவோம் அப்புறம்... பிரச்சனையெல்லாம் முடிஞ்சதும் பணத்தை எடுத்துக்குவோம் உனக்கு வேண்டியதை செஞ்சுதருகிறேன் என்ன சொல்லுற...

இதுனால எனக்கு பிரச்சனை ஏதும் வராதே...சார்

ஒன்னும் வராது எதாவது ஒரு வகையில் கணக்கு காட்டிவிடலாம் நீ..பயப்படாம இருந்தா போதும் சுளையா இரண்டு லட்சம் உன்னால உடனே சம்பாரிக்க முடியுமா?

அரைகுறை மனதுடன் தலையாட்டினான் விஷ்ணு


விஷ்னுவை அனுப்பிவிட்டு ஜான் மீண்டும் இராஜநாயகத்தின் அறைக்குள் நுழைந்தான் ஜான்

என்னடா...ஜான் பையன் ஒத்துவருவானா  ஏமாத்திரப்போறான் பார்த்துக்க என்றார் இராஜநாயகம்

பையன் சரிப்பட்டு வருவான் தலைவரே வரல்லையின்னா....

ஜான் சொன்னதை கேட்டதும் அடப்பாவி என்னை விட மோசமானவனா இருக்க...என்றார்

...................................................................................................................................................................


இரண்டு மாதமாக விஷ்ணு சரியாக வேலைக்கு போவதே இல்லை வங்கியில் கணக்கு தொடங்கியது முதல் ஜான் இவனிடம் கனிசமான பணத்ததைக் கொடுக்கவும் ஏதேதோ கையெழுத்து வாங்குவதும் தினம் குடிக்கவும் தூங்குவதும் பொழுதுபோக்கிக்கொண்டுருந்தான்

விஷ்ணு உன்னை மலேசியா கூட்டிட்டு போலாம்ன்னு இருக்கேன் என்று ஜான் கூறியிருந்தான் 
மாலை மசங்கும் நேரத்தில் ஒரு ஆட்டோபிடித்து வழக்கமாக தண்ணியடிக்கும் APS பார்க்கு வந்தான் விஷ்ணு பேரரிடம் ஆர்டர் செய்துவிட்டு பேரர் வைத்துவிட்டு போன ஸ்னாக்ஸ்ஐ எடுத்து கொரித்துக்கொண்டுடிருந்தான் எதிரே ஒருவர் வந்து அமர்ந்தார் நல்ல உயரம் சிகப்பு நிறம் முறுக்கியமீசை திடகாத்திரமான உடல் போலிஸ் மாதிரியிருந்தார்

கரகரப்பான குரலில்
உன் பெயர் விஷ்ணுதானே... என்றார் விஷ்ணுவின் வயிற்றில் யாரோ பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது மாதிரியானது 

சா..சா..ர்...நீங்...க...

போலிஸ்தான் தம்பி ஐயாம் கோகுல்IPS சூப்பிரண்ட் ஆப் போலிஸ்
விஷ்ணுவின் காலுக்கு கீழே பூமி நழுவியது

பயப்படாதே தம்பி உனக்கு உதவி செய்யத்தான் வந்திருக்கேன் பாருக்கு வெளியே கடைசியில் கிரேக்கலர் போர்டு பிக்கோ நிற்க்கும் அங்க வா...இங்கே பேசமுடியாது என்று கிசுகிசுப்பாய் கூறிவிட்டு சென்றுவிட்டார்
               
பிக்கோ காரை கண்டுபிடித்து உள்ளே அமர்ந்தவுடன் கார் கிளம்பியது காரை லாவகமாய் ஓட்டிக்கொண்டே பேசினார் கோகுல் விஷ்ணு உங்களை பயன்படுத்தி இராஜநாயகமும் ஜானும் பல கோடிகளை பதுக்கி வச்சிருக்கறாங்க உங்க பேர்ல எக்ஸ்போர்ட் பிசினஸ் ஆரம்பிச்சு CC அக்கவுண்ட் ஓப்பன் பன்னி அவங்க கருப்பு பணத்த வெள்ளையாக்கிட்டு இருக்காங்க அதுமட்டும் இல்லாம போதை பொருள் கடத்தறதுன்னு உங்களை பயன்படுத்தப் பேறாங்க மாட்டுனீங்கன்னா உங்களை இவனுங்க கொன்னுடுவாங்க எப்படி இவனுககிட்ட மாட்டுனிங்க...

சார்...எனக்கு இதெல்லாம் தெரியாது

கவலைப்படாதிங்க மிஸ்டர் விஷ்ணு இதிலிருந்து தப்பிக்கனும்னா ஒரே வழிதான் இருக்கு  அவங்க முழுசா உங்களை நம்பிட்டாங்க இராஜநாயகம் செல்போன் சர்க்யூட் போர்டுல நுணுக்கமா ஒரு பாஸ்வெர்டை எழுதி வச்சிருக்கு அதை நீ படிச்சு எனக்கு SMS அனுப்பு உன்னை எந்த கேசும் இல்லாம பண்றது மட்டும் இல்லாம உன் வாழ்க்கைக்கு தேவையான பணத்தை ஏற்பாடு பண்ணித்தரேன்

அது என்ன பாஸ்வேர்டு சார்?

இராஜநாயகத்தின் ரகசிய வியாபாரத்தின் தகவல் அனைத்தும் உள்ள ஒரு ஹார்டுடிஸ்க் எங்களுக்கு கிடைத்து உள்ளது அதனுடைய பாஸ்வேர்டு நாங்களும் என்னென்னவெல்லாம் செய்து பார்த்துட்டோம் ஓப்பன் செய்யமுடியல பாஸ்வேர்டு செல்போன் சர்க்யூட்ல இருக்கறதா நம்பிக்ககையான இடத்திலிருந்து தகவல் வந்தது உன்னை மூன்று மாதமாக கண்காணித்துக்கொண்டு இருக்கிறேன் இப்ப உன்னை பயன்படுத்திக்கொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறேன்

அவர் செல் போனை எப்படி சார் எடுக்கறது எப்பவும் கையில் வச்சிருப்பாரு?

பிளான் சரியா இருந்தா எதுவும் முடியும் இராஜநாயகத்தின் செல்போன் மாதிரியே ஒன்னு தாரேன், எப்பவும் மாலை நேரத்துல வீட்ல இருப்பார், அந்த நேரத்துல எதாவது காரணத்தை சொல்லி வீட்டுக்கு போ.. அவர் அசந்த நேரமா பார்த்து இந்த செல் போனை வச்சிட்டு அத எடுத்திட்டு வந்திரு, பதட்டபடாத பயப்படாத கேசுவலா போ... காரியத்தை முடி இதை அந்த ஆளுகிட்ட சொல்லி தப்பிச்சுக்கலாக்ன்னு நினைச்சே என்கவுண்டர்ல போட்டுருவோம் ஜாக்கிறதை
என்றபடி செல்போனை கொடுத்தார் எஸ்.பி.கோகுல் 
"எண்ணய்க்கும் தீயுக்கும் நடுவே இருக்கும் எறும்பாய் தவித்தான் விஷ்ணு" 

...................................................................................................................................................................

இராஜநாயகத்தின் வீட்டுக்கு அடிக்கடி செல்வதனால் நன்றாக அனைவரும் பழகியுருந்ததால் ஈசியாக அவர் வீட்டுக்கு சென்றான் விஷ்ணு

வாப்பா என்ன விசயம் என்றார்

ஒன்னுமில்லை சார் சும்மா பாக்க வந்தேன்...

என்ன பணம் எதாவது வேனுமா?

அ...அ..ஆமாம் ச..ச.சார்

அதுக்கு ஏம்ப்பா தயங்குற அண்ணன்கிட்ட தயங்காம கேளு...
இரு குளிச்சுட்டு வந்து தரன் நீ டிவி பார்த்துட்டு இரு என்று செல்போன் கண்ணாடியை டேபிள் மீது வைத்து விட்டு உள்ளே போனார் அப்பா வந்த வேலை ஈசியா முடிஞ்சுதே என்று செல்போனை மாற்றி வைத்துவிட்டு குளித்துவிட்டு வந்தவரிடம் கொஞ்சம் பணம் வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான் விஷ்ணு செல்போனை கழற்றி சர்க்யூட் போர்டில் இருந்த பாஸ்வேர்டை குறித்துக் கொண்டு SMS அனுப்பினான் இன்னோறுவருக்கும் அனுப்பினான்




சிபிசிஐடி ஏசிபி காரித்திகேயனின் கார் சைரன் ஒலித்தபடி சைபர் கிரைம் இன்வஸ்டிகேஷன் ஸ்பெசல் ஸ்குவாட் அலுவலகம் முன் நின்றது காரில் இருந்து இறங்கியவர் பாரா போலிஸ்சின் சல்யூட்டை பெற்றுக்கொண்டு சைபர்கிரைம் இன்ஸ்பெட்டரின் அறைக்குள் நுழைந்தார் விறைப்பாக சல்யூட்டைப்போட்ட இன்ஸ்பெக்டர் முன் அமர்ந்தார்

என்னய்யா கதிரேசன் சர்ச் செஞ்சயா?

செஞ்சாச்சுங்கய்யா இதை பாருங்க A4 சீட்ல பிரிண்ட் அவுட் எடுத்த துண்டுகளை காண்பித்தார்

இது எஸ்.பி.கோகுலுக்கு விஷ்ணு அனுப்பிய SMS

Mr,கோகுல்-
S W H2 6F - இதுதான் குறியீடு கவலை வேண்டாம்
-விஷ்ணு

இது விஷ்ணு உங்களுக்கு அனுப்பிய மெயில்

sir,
எஸ்.பி.கோகுலிடம் நான் தவறான
குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்.
கவலை வேண்டாம்
விஷ்ணு-


கோகுல் இப்படிப்பட்ட ஆள்ன்னு எனக்கு இப்பத்தான் தெரியுது...
இராஜநாயகத்தின் வெளிநாட்டு வங்கிகணக்கின் பாஸ்வேர்டை செல்போனின் சர்க்யூட் போர்டுல இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு அதே வங்கியில் கணக்கு ஒன்றை தன் வெளிநாட்டு நண்பர் மூலம் ஆரம்பித்து பாஸ்வேர்டை திருடி இராஜநயகத்தின் பணத்தை அந்த கணக்கில் மாற்றி விட திட்டம் போட்டுள்ளார், ஆனா..! விஷ்ணுவின் தகவலால் இப்ப மாட்டிக் கொண்டார்அதுமட்டுமல்ல இராஜநாயகத்துக்கும், ஜானுக்கும் விஷ்ணு ஒரு போலிஸ் இன்பார்மர் என்று தெரியாமல் தானே போய் வலையில் மாட்டிக்கொண்டனர் இப்ப ஜெயில்ல

அப்போது போன் அடித்தது தன்னுடைய ஐபோனை எடுத்துப் பார்த்தார் VISHNU INFORMAR என்று இருந்தது எடுத்து பேசினார்

சொல்லுங்க விஷ்ணு குட் ஜாப்

சார்.. போலிஸ் ஆகணும் என்பது என் லட்சியம் அது முடியல அதனால இப்படி போலிஸ் இன்பார்மரா இருக்கறதுல மனதிருப்தி 

கவலைப்படாதிங்க விஷ்ணு நீங்க இப்ப எங்க இருக்கீங்க 

ஹ..ஹ..ஹ..ஹ..சாரி சார் நானும் எத்தனை நாளுக்குத்தான் ஏழையாகவே இருக்கிறது.......

இராஜநாயகத்தோட வெளிநாட்டு வங்கி பணம் இப்ப என் கையில இப்ப வெளிநாட்ல இருக்கேன் இனிமே இந்த நெம்பர்ல இருந்து போன் வராது குட்பாய்.............

10 comments:

Rathna 11:00:00 AM  

எல்லோருமே திருடர்கள் தான் என்பதைத்தான் உங்கள் கதை சொல்கிறது.

IlayaDhasan 5:26:00 PM  

கதை நன்றாக இருந்தது , வாழ்த்துக்கள் நண்பரே! ஓட்டளித்து விட்டேன்.

சி.பி.செந்தில்குமார் 9:46:00 PM  

சினிமா ஸ்டில்ஸ் எல்லாம் போட்டு கதைக்கு ஒரு டெம்ப்போ ஏத்தப்பார்க்கறீங்க.. வெல் ட்ரை

Unknown 10:16:00 PM  

ரத்னா அவர்களுக்கும்,
இளயதாசன் அவர்களுக்கும் ,
சிபி செந்தில்குமார் அவர்களுக்கும்
நன்றி நன்றி

சக்தி கல்வி மையம் 3:07:00 AM  

அசத்தல்..
வாழ்த்துக்கள்..

Unknown 6:24:00 AM  

நண்பர்கள் கருண், கார்த்திக் பாலா அவர்களுக்கு நன்றி...

இராஜராஜேஸ்வரி 12:03:00 AM  

கதை நன்றாக இருந்தது , வாழ்த்துக்கள் ஓட்டளித்து விட்டேன்.

நம்பிக்கைபாண்டியன் 1:27:00 PM  

நல்லா எழுதியிருக்கீங்க, வாழ்த்துக்கள்

Madhavan Srinivasagopalan 8:45:00 AM  

//இந்த நெம்பர்ல இருந்து போன் வராது குட்பாய்......//

பேட்-பாய்..

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP