நட்பு
>> Tuesday, September 13, 2011
ஆற்றில் குளிக்கும் போது
மூழ்கி வந்து என் உள்ளாடை
அவிழ்த்தாய் கேவலமாய் திட்டினேன்
பதிலுக்கு நீ சிரித்தாய்...
கொடுத்த பணத்தை திருப்பி
கேட்ட போது நக்கல்
பேசியதால் மூன்று மாதம்
உன்னோடு பேசாமல் இருந்தேன்...
அடுத்தடுத்து எத்தனையோ முறை
சொல்லியும் என் பட்ட பெயரை
பலர் முன் உச்சரித்தாய்...
அதனால் கெட்ட வார்த்தையில்
நான் திட்டியதால் நீ என்னோடு பேசவில்லை...
விட்டு விட்டு நம் நட்பு
தொடர்ந்தாலும் தூங்கும் போது
ஒரே கட்டிலில் கட்டிப்பிடித்து
பல இரவு உறங்கியிருக்கின்றோம்
ஒரே குவளையில் இருவரும்
மது அருந்தியுள்ளோம்...
ஒரே தட்டில் உணவருந்தியுள்ளோம்...
உன் சட்டையை நானும்
என் சட்டையை நீயும்
மாற்றி போட்டு ஊர் சுற்றியிருக்கிறோம்
ஊடலும் கூடலும் காதலுக்கு
மட்டுமல்ல நட்புக்கும்தான்...
ஒரு மிதிவண்டியில் பல மைல்
தாண்டியுள்ள திரைஅரங்கிற்க்கு
உன்னை பின்னால் அமர வைத்து
நான் மிதித்த போது நீ கனக்கவில்லை
எதிர்பாராத விபத்தொன்றில்
காலன் உன்னை களவாடியபோது
நீ என்னோடு பழம் விட வரவேண்டாம்
சண்டையிட்டு காய் விடவாது வரமாட்டாய்
என நினைக்கும் போது உன் நினைவின்
கனம் தாங்க முடியவில்லை நண்பா...
4 comments:
அருமை அருமை, நட்பிற்கு ஒரு அழகிய சான்று இந்த கவிதை.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
நல்லது...
அன்பின் சுரேஷ் குமார் - நட்பு என்பது இதுதான் - ஊடலும் கூடலும் மாறி மாறி வருவதே நட்பு. காலன் கவர்ந்த பின்னர் - நட்பின் பிரிவு சொல்லாணாத் துயரத்தினை அளிக்கும். தாஙக் இயலாது ......... காலம் மனதை மாற்றும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment