ஒப்பிட முடியாதவள்(கவிதை)

>> Saturday, September 3, 2011



அவளை 
மலரோடு 
ஒப்பிட முடியாது....
ஏன் என்றால் ?
மலரை விட மென்மையானவள்!

வானோடு
ஒப்பிட முடியாது....
ஏன் என்றால்?
வானை விட
உயர்வானவள்!

மானோடு 
ஒப்பிட முடியாது....
ஏன் என்றால்?
அதை 
விட சாதுவானவள் 

அவளின் 
அழகை,குணத்தை,பண்பை 
அற்றினை உயர்திணை 
எதோடும் ஒப்பிடமுடியாது 
அவளை அவளோடு மட்டும்தான் 
ஒப்பிடமுடியும் 



10 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // 7:04:00 AM  

காதல் படுத்துமட் பாடு...
இப்படித்தான் இருக்கும்...

அழகு கவிதை
வாழ்த்துக்கள்...

rajamelaiyur 7:39:00 AM  

ஒப்பிடமுடியாத கவிதை

Unknown 7:40:00 AM  

உங்கள் கருத்துக்கு நன்றி....

Unknown 7:43:00 AM  

"ராஜ பாட்டை" அவர்களுக்கு நன்றி

முனைவர் இரா.குணசீலன் 8:01:00 AM  

இந்தக் காதல் வந்துவிட்டாலே இப்படித்தான்..

முனைவர் இரா.குணசீலன் 8:04:00 AM  

இதோ பாருங்கள் ஒரு பெண் தன் காதலின்...

உயரம்
அகலம்
ஆழம்

கூறுகிறாள்.

http://gunathamizh.blogspot.com/2009/06/blog-post_05.html

Unknown 10:01:00 PM  

நம் பல பாடல்கள் காதலியை ஒன்றோடு உவமை கூறியே இயற்றியுள்ளார்கள் நீங்கள் குறுந்தொகையில் கூறியுள்ளதும்
காதலின் அகலம் நிலத்தின் அளவு.
காதலின் உயரம் வானத்தின் அளவு.
காதலின் ஆழம் கடலின் அளவு.
இவ்வாறாக உள்ளது
நான் என் காதலியை எதோடும் உவமை கூற முடியாதவள்
என்று என் காதலை வெளிபடுத்தியுள்ளேன்
அதுபோல் காதலை நட்பு போல் சுட்டி காட்டப்பட்டுள்ளது
சிறந்த நட்பு மட்டுமே காதலாய் மலரும்
திடீரென்று தோன்றாது அது திரைப்படத்தில் மட்டுமே சாத்தியம்
உங்கள் கருத்துக்கு என் சிரம் தாழ்ந்த நன்றி
குறுந்தொகை விளக்கம் அருமை

அம்பாளடியாள் 3:03:00 PM  

அருமையான கவிதை வாழ்த்துக்கள் .......

Unknown 8:30:00 PM  

கருத்துக்கு நன்றி........

cheena (சீனா) 11:28:00 PM  

அன்பின் சுரேஷ் குமார் - காதலில் காதலியை இவ்வாறெல்லாம் வர்ணிப்பது இயல்பு - நீள அகல உயரம் - என்று எதனையும் உவமைகாட்ட இயலாத அவளின் அழகு, குணம், பண்பு ஆகியவற்றைக் கவிதையாக வடித்தமை நன்று. விரைவில் திருமணம் நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP