ஆப்பிளின் புதிய IPHONE 4S அனைத்து போனுக்கும் ஆப்பா?

>> Thursday, November 3, 2011



சிரின்னா ஜோக்கு படிக்கனும் SIRI ன்னா புரியலையா? ஆப்பிள் நிறுவனம் புதிதாக மார்கெட்டில் விட்டிருக்கும் புதிய போன் SIRI IPHONE 4S மொத்தத்தில இந்த போனபத்தி சொல்லனும்னா அலாவுதீன் பூதம் மாதிரி

நடுவுல இருக்கிற பட்டனை தட்டி

"விக்கி" மாம்ஸ்க்கு mail அனுப்பு..

இன்னா கிழமை

வெள்ளிக்கிழமை

எத்தின மணிக்குன்னு

ஏழரைக்கு...

am ஆ.. pmஆ..

pm

சரி ஓகே

மெசேஜ் சொல்லு...சப்ஜெட் சொல்லு

சப்ஜெட்டு : நாளைக்கு மொக்கை,
மெசேஜ் : மாமா நாளைக்கு ஒரு பதிவு போடுற படிக்காத...வெறுத்துருவ

அம்புட்டுத்தானா

ஆங்...அம்புட்டுதான்

விக்கி மாம்ஸ் email ID யை எடுத்து சப்ஜெட் போட்டு மெசேஜ் எழுதி சென்ட் பட்டன் தானா அமுங்குது ஐய்யாடியோவ்...

அடுத்து சம்சாரம் ஊருல இல்லை சமையல் நாமதான் எடு சிரிய

சாம்பார் வைக்க இன்னாஇன்னா வேனும் சொல்லு பாப்பம்ன்னா...

கஸ்மாலம் இன்னா சாம்பார் வக்கிரதுக்கு சொல்லு

முருங்க்ககாய் சாம்பார்

என்ன முருங்கக்காய் கல்யாண முருங்கயா வகை சொல்லுடா பேமானி

அஅ...செட்டிநாடு முருங்கக்காய் சாம்பார்

google ஓப்பன் பண்ணுது search பண்ணுது கடைசியில ஒரு வெப் சைட்ட ஓப்பன் பண்ணுது அது ”செட்டிநாடு சாம்பார் வைப்பது” எப்படிங்கர நம்ம தமிழ் ஃபிளாக்...

இப்படியெல்லாம் நடக்கும் இந்த போன் இருந்தால் இது அனைத்து போன்களுக்கும் எதிரான வஜ்ராயுதம் என்கிறார்கள் மொபைல் விரும்பிகள், "சிரி" இந்திய சந்தைகளுக்கு விரைவில் வருமாம் வந்தால் இதுபோல் நடக்க வாய்ப்பிருக்கிறதா....
என காலம்தான் பதில் சொல்லும்...


4 comments:

SURYAJEEVA 9:15:00 PM  

சரியா போச்சு

வவ்வால் 1:18:00 PM  

ஹி..ஹி நீங்க கண்டிப்பா அயல் நாட்டுப்பதிவரா தான் இருக்கணும், இங்கே எல்லாம் ஆப்பில் சொன்னா கிலோ என்ன விலை தான் கேட்பாங்க?

இந்தியாவில ஆப்பிள் போன் என்பது பணக்காரர்கள் வாங்கி பயன்ப்படுத்துவது, அதுல கூட பேசுவது மட்டுமே செய்வாங்க, உண்மைல நீங்க சொன்ன வசதி என்ன பெருசா மாற்றம் கொண்டு வரப்போகுது, கூகிள் பண்ண தெரியாத சாம்பார் வேணா அதை பயன்ப்படுத்தலாம் :-))

நான் நிறைய பேர பார்த்து இருக்கேன் விலையுயர்ந்த ஸ்மார்ட் போன் வச்சு இருப்பான்ங்க அதுல இணையம் செயல்படுத்தாமலே, அதுக்கு அவங்க 1000 ரூபாக்கு போன் வாங்கி இருக்கலாம்!

ஆப்பிள் புராடக்ட் எல்லாம் மேலை நாடுகளுக்கு தான் சரி வரும் இங்கே எல்லாம் நாய் கூட கண்டுக்காது(நாய்க்கு போன் தேவை இல்லை)

Unknown 8:11:00 PM  

ஹஹஹ...
நான் அயல்நாட்டு பதிவெரல்லாம் இல்லை(சத்தியமா தென்னிந்தியாவை தாண்டியது கிடையாது)
என் நண்பர்களில் பாதிபேர் iphone வச்சிருக்காங்க பணக்காரங்க கிடையாது
நடுத்தர வர்க்கம்தான் 30,000 போன் வாங்குவது இந்தியாவில் பெரியவிசயம் கிடையாது
நீங்க எந்த காலத்தில இருக்கிறீங்க எல்லா போன் கம்பனியும் iphoneக்கு குறைந்த வட்டியில் கடன் தருகிறார்கள் சாதரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நண்பர் 1.5 லட்சத்தில் apple mak
system வாங்கியிருக்கார் நாய்கூட கண்டுக்காதுன்னு சொல்ரிங்க iphone வந்தப்ப திருப்பூர்ல உள்ள
பிரபல போன் கடையில ஒரே நாள்ள 10000 போன் சேல்ஸ் பண்ணிருக்காங்க வாங்கினவங்கள்ள பாதிபேர்
கம்பனியில் வேலை செய்பவர்கள் சும்மா YOUTUBE ல பார்த்தது கொஞ்சம் பில்டப்போடு எழுதின...
கருத்துக்கு நன்றி

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP