முதல் காதல்
>> Friday, November 11, 2011
பதினெட்டு வயது இளமீசை துளிரும்
இனிய வசந்த கால வயது
இதில் இடம் மாறினால்
இருண்ட பள்ளத்தாக்கில்
இடரும் அபாயம் அதிகம்
இருந்தும் இடம் மாறினேன்
அது இனிமையான விபத்து
அதுதான் காதல்...
காதல்... என்கிற வார்த்தையை
உச்சரித்துப்பாருங்கள்
இந்தவயதில் தேனாய் இனிக்கும்
தவறு என சொல்லும்
மற்றவரை எரிச்சலோடு எரிக்கும்..!
எனக்கு வயது இருபது!
அவளுக்கு வயது பதினாறு!
எனக்கு பக்கத்து வீடு
என் வாலிபவயதில்
காதல் விதை தூவிய
"தேவலோக தேவதை"
முதன்முதலாய் "பாலகுமாரனின்"
தண்ணீர்துறையுள்ளதா? என்றாள்
என்னிடம் இருந்தது எடுத்துக்கொடுத்தேன்
மிகவும் நன்றி இதைத்தான்
தேடினேன் கிடைத்து விட்டது
இனி அடிக்கடி புத்தகம்
வாங்க வருவேன் என்றாள்
என் பெயரைக்கேட்டாள்
பற்றி எரியும் "பாஸ்பரஸாய்"
இருந்த என் மனதை
அவள் உரசிய வார்த்தையில்
பற்றி எரிந்தது நிசம்
பிரபஞ்சனையும், வைரமுத்துவையும்,
மு.மேத்தாவையும் அலசினோம்
நான் எழுதிய கவிதை
கவிதையாய்! இல்லையென்றாலும்
பொய்யாய் நிறைகூறி
ஊக்கப்படுத்தினாள்
அந்த தேவதை
என் படுக்கையில்
"நெருஞ்சி" முட்களாய்
அவள் நினைவுகள்
குத்திக்கெண்டிருந்தன
அவளை சிந்திப்பதிலே
பொழுதும் போயிற்று....
காதல் அர்த்தம் என்ன?-நான்
அது நான்காவது வேதம்-அவள்
அதன் பலன் என்ன?-நான்
இரு மனங்களின் வேள்வி-அவள்
கேள்வியை நிறுத்திவிட்டு
அவள் கண்களைப்பார்த்தேன்
என்க்குள்ளே ஒரு வேள்வி எரிகிறது
உனக்கு தெரியுமா?
எரிகிறது சுட்டெறிக்கின்றது
அதை அறியாதவளா நான்...
அந்த சந்தன சிலை
என் மார்பில் சாய்ந்தது
இருவர் மனம் காற்றில்
லேசாகி மிதந்தது
நாங்கள் சுற்றாத இடமில்லை
பேசாத வார்த்தைகளில்லை
என்னை கடைசிவரை
காப்பாற்றுவாயா என்றாள்
இறந்தும் உன் பின்னே
வருவேன் என்றேன்
பச்சமலை அடிவாரத்தில்
அவள் வச்சதிருநீர் என்
கண்ணில் விழ துடைத்து விட
வந்தவளின் பெண் வாசம்
என்னை மயக்க இருக
அனைத்து கொடுத்த
முத்தம் முன்னூறு ஜென்மம்
எடுத்தாலும் மறக்காது
உடல் நலம் சீர்கெட்டு
படுக்கையில் நானிருந்தபோது
என்னருகிலமர்ந்து கண்ணீர்
விட்டாள் என் கண்மணி
அதன் சக்தியால்தான்
மீண்டுவந்தேன்
எங்களூர் ஆற்றங்கரையின்
ஈரக்காற்றில் அவள் மடியில்
நான் அவள் முகமோ என்னருகில்
முத்தங்கள் பறிமாறிக் கொண்டாலும்
காமத்துக்கு மட்டும் கடிவாளம்
போட்டுக் கொண்டோம்
என் திறமை
மத்தாப்பை பற்றவைத்த
தீக்குச்சி என் காதலி
அவள் கால் கொலுசு
சங்கீதம் கேட்காமல்
எனக்கு பொழுது
விடியாது...
என் காதல் ராணி
படிக்கவேண்டும்
என்பதற்க்காக பல
"பாக்கெட் நாவல்களை"
வாங்கி "பாக்கெட் மணி"
காலியானது
அவளுக்கு கவிதை
பிடிக்கின்றது என்பதக்காகவே..!
கவிதை எழுத கற்றுக்கோண்டேன்
எங்கள் காதல் விவகாரம்
கிசுகிசுவாய் கசிந்து
ஊர் வாய் மெல்ல
அவலாகி அரைத்து
அவள்வீட்டாரின் காதுக்கு
அவசரமாய் சென்றது
உறவினர் வீட்டுக்கு
அழைத்து செல்வது போல்
அவளை அழைத்துச்சென்றது
அன்போடு அல்ல
வெட்டகொண்டுசெல்லப்பட்ட
ஆடென அறிந்தாள்
அதிர்ந்தாள் அதிர்ந்துஎன்ன
செய்ய புலிகூட்டத்க்கு முன்
மான்னென்ன செய்யமுடியும்
மஞ்சள் பூசிய புதுத்தாலியுடன்
திரும்பி வந்தாள்
அவள் நினைவாக என்னிடம்
இருப்பது சில கவிதைகளும்
அவளின் முத்தங்களும்தான்
5 comments:
அட கடவுளே!
நிஜமா?கற்பனையா?
வருகைக்கு நன்றிங்க...
கற்பனை பாதி, உண்மை பாதி, முதல் காதல் வெற்றி பெற்றதாய்
நான் கேள்வி பட்டதில்லை!''
நல்ல கவிதை. சில கவிதைகளும், முத்தங்களும் ஆறா வடுக்களாய்.........
வலிகளை இந்த வடிவத்தில் எழுத முடியும் என்று இப்போதான் உணர்ந்தேன் ,,,
சுமையாகி போன அந்த சுகமான காலத்தை எண்ணி கவலை வேண்டாம் .. தோழமையே ,..
மேலும் சிறந்த படைப்புகளை எதிர்நோக்கி ....வாழ்த்துக்களுடன் .. அரசன் ..
என்னுடைய "மயில் அகவும் நேரம்" தொகுப்பு கட்டுரையில் வரும் "இரசித்த கவிதை" பகுதிக்கு தங்களின் இந்த கவிதையை பிரசுரிக்க அனுமதி கோருகிறேன்.. பதிலுக்காக காத்திருக்கிறேன்...
Post a Comment