கணக்கு போடுங்க....கணக்கு பண்ணாதிங்க.....
>> Friday, November 25, 2011
வெளியூரில் இருந்து மூன்று நண்பர்கள் ஒரு கல்லூரியில் படிக்க வருகிறார்கள், ஒரு வீடு எடுத்து மூவரும் தங்கிக்கொள்ளலாம், வாடகையை மூன்றாக பங்கிட்டுக்கொள்ளலாம்..' என ஒரு புரோக்கரை பார்க்கின்றார்கள் அவரும் ஒரு வீட்டைக்காட்டுகிறார், வீடு மூவருக்கும் பிடித்து போக.. முன்பணமாக ஆளுக்கு 100 போட்டு, ரூ300 தருகிறார்கள்.
புரோக்கரும் வீட்டுஉரிமையாளரிடம் சென்று முன்பணத்தைக் கொடுக்கிறார் அவர் 50 ரூபாய் வைத்துக்கொள் 250 மட்டும் போதும் என கொடுக்கின்றார், புரோக்கர் திரும்பி வந்து இந்தாங்க வீட்டு உரிமையாளர் 250 மட்டும் போதும் என கூறிவிட்டார் மீதியை கொடுக்கின்றார், மிகவும் நன்றி வீடு பிடித்துக் கொடுத்தமைக்கு என்று அவருக்கு 20.00 ரூபாய் தருகிறார்கள், மீதி 30 ரூபாயை மூன்று பேரும் பிரித்து ஆளுக்கு 10 ரூபாயாக வைத்துக் கொள்கிறார்கள்.
கணக்கு எழுதும் போது குழப்பம் வருகிறது எப்படி? ஆளுக்கு 90.00ரூபாய் செலவு மூன்று பேருக்கு சேர்த்து 270.00 ரூபாய் புரோக்கருக்கு 20.00ரூபாய் மொத்தம் 270+20=290 மீதி 10.00 ரூபாய் எங்கே?
5 comments:
கணக்கு தப்பு சாமியோ...
அந்த ப்ரோக்கருக்கு கொடுத்த இருபது ரூபாயும் ஏற்கனவே அந்த 270 இல் வந்து விட்ட பிறகு மீண்டும் அதை சேர்ப்பது குழப்ப தானே...
ஐம்பது ரூபாய் திரும்ப கொடுத்த உடனேயே, முன்ணூறு என்ற எண் இல்லவே இல்லை.
இங்கு இருப்பதே இருநூற்று ஐம்பது மற்றும் இருபது மட்டுமே.
இல்லாத ஒரு எண்ணுடன் சமன் செய்ய முற்படுவதால் தான் இந்த குழப்பம்.
ஏற்கனவே ரெண்டு நண்பர்கள் விளக்கம் சொல்லி விட்டதால் ஸ் ஸ் அபா நான் தப்பிச்சேன் ஹிஹி!
Earkanave atha 20rupai searthu than 270 nga...thambi theeya vealai seiyanumunga...
Post a Comment