குழந்தை தொழிலாளி
>> Thursday, November 10, 2011
[சில குழந்தை தொழிலாளிகளை தொண்டுநிறுவனம் மீட்கசென்றபோது சில
சிறுவர்களின் நிலைமை கொடுமையானது அவர்களின் வருமானத்தில்தான்
குடும்பமே மூன்று வேளை உண்கிறார்கள் தந்தையிழந்த நோய்வாய்ப்பட்ட
தாயிக்கு பதிலாக பணிக்கு வந்த குழந்தைகள் என மனதை உருக்குவதாய்
இருந்தது]
thank you google |
சிறுவர் தொழிலாளியை
ஒழிப்போம் என்பதைவிட
அவர்களுக்கு பனிநேரம்
முடிந்தபின் பாடம் கற்பிப்போம்
ஆசிரியரை அந்த முதலாளியை
அமர்த்தச்செய்வோம்
அவனுக்கு புதிய தொழில்
முறைகளை புரிய வைப்போம்
கருத்திற்கு "காரல்மார்க்ஸையும்"
அகிம்சைக்கு "காந்தியடிகளையும்"
வீரத்திற்கு "பகத்சிங்கயும்"
புரியவைப்போம்
புன்னகைக்கும் கள்ளமில்லா
சிரிப்பில் "ஜாதியில்லா"
கல்வி கற்க வைப்போம்
புத்தன்,ஏசுவும்,முகமதுநபியும்
அன்பையே போதித்தார்கள்
மதவேற்றுமை வேண்டாமென
பிஞ்சு நெஞ்சில் பதியவைப்போம்
அவன் சமூகத்தில் மனிதனாய்
போற்றப்படவேண்டும்
சமூகவிரோதியாய்
தூற்றப்படக்கூடாது
இவர்கள் நம் நாட்டின்
வருங்காலத்தூன்கள்
அவை மன்னால் அல்ல
எஃகால் அமைக்கப்படவேண்டும்...
[இன்று குழந்தை தொழிலார்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டது
நான் சொல்வது திருப்பூரில்,இந்த கவிதை முதலாளிகளுக்கு ஆதரவாக
இருப்பதாக தோழர்கள் கூறினார்கள்]
8 comments:
ஒரு வகையில் நீங்கள் பார்த்தால் நியாயம், ஒரு வகையில் பார்த்தால் தவறு... எங்கோ நடந்த ஒரு உதாரணத்தை வைத்து கொண்டு நீங்கள் கவிதை சமைத்து உள்ளீர்கள்... ஆனால் இது ஊதியம் குறைவாக கொடுத்து லாபத்தை அதிகரிக்கும் முதலாளிக்கு சாதகமே... வேண்டுமானால் ஒன்று செய்யலாம், குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கான ஊதியம் கொடுக்கலாம் என்று வேண்டுமானால் வகைப் படுத்தலாம்...
மேலும் வேலை செய்து ஓய்ந்த பின் படிக்க மனம் வருமா என்பதும் சந்தேகமே...
பெரியவர்களான நமக்கே கொஞ்சம் வேளை செய்தாலே எப்படா ஓயவெடுப்போம் என நினைக்கும் போது பிஞ்சு மனம் எப்படி கற்க நினைக்கும்?
சூர்யா ஜீவா & கோகுல் கருத்துக்கு நன்றி அந்த நேர உணர்ச்சி வசத்தில் எழுதப்பட்டது பணியை முடித்துக்குக் கொண்டு படிப்பது இயலாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது
மாப்ள குழந்தைகளை வேலைக்கு செல்ல சொல்வது மிகப்பெரிய அநியாயம்....அதே நேரத்தில் ஏழை குடும்பங்களுக்கு.....தக்காளி ஒவ்வொரு அரசியல்வாதியும் பத்து குடும்பங்கள தத்து எடுத்து பராமரிக்க சொல்லி சட்டம் போடணும்!
அப்படி பண்ணினா நல்லாத்தான் இருக்கும் அட பத்து குழந்தைகளை படிக்க வைக்கலாம் செஞ்ச பாவம் தீரும்
மாம்ஸ் வருக்கைக்கு நன்றி
திருடன் கையில் சாவி... என்பது போல இதற்க்கு முதலாளிகளின் கையில் தான் தீர்வு உள்ளது...
தங்களின் பதிவு(News Letter) மின் அஞ்சலுக்கு தொடர்பு(Link) இல்லாமல் வருவதால் பதிவுக்கு வர சற்று சிரமமாக உள்ளது... நண்பா...
உடனடியாக வர முடிய வில்லை...
அதை கொஞ்சம் சரி பார்க்கவும்... நண்பா...
வேலை அதிகம் இருப்பதால் அவசரத்தில் லிங்க் கொடுக்க மறந்து விட்டேன் மன்னிக்கவும்
Post a Comment