ஏழாம்அறிவு ஒரு ஆய்வு

>> Friday, November 4, 2011



உதயநிதி ஸ்டாலினின் "ரெட்ஜெயன்ட்" மூவிஸ் தயாரிப்பில் சூர்யா மற்றும் கமலின் மகள் சுருதி ஹாசன், ஜானி டோ படங்களில் நடித்த மிகச்சிறந்த சண்டைக்கலைஞர் "ஜானி-ட்ரை-நுங்" ஆகியோர் நடித்து இயக்குனர் "முருகதாஸ்" அவர்களின் இயக்கத்தில் தீபாவளிக்கு வானவேடிக்கை காட்ட வந்த திரைப்படம் ஏழாம்அறிவு.

ஆறாம்நூற்றாண்டில் வாழ்ந்த களரி போன்ற சண்டைபயிற்சியிலும் சித்த மருத்துவத்திலும் ஹிப்னாடிசம் எனும் மனவசியகலைகளில் தேர்ந்த பல்லவ இளவரசனான "போதிதருமர்" என்கின்ற புத்ததுறவியை வைத்து ஓவர் பில்டப்போடு எடுக்கப்பட்ட எடுக்கப்பட்ட திரைப்படம்தான் ஏழாம்அறிவு

மறைக்கப்பட்ட தமிழன் போதிதருமர் என விளம்பரம் செய்யப்பட்டது வரலாறு மறைக்கப்பட்டதா?ஏன் என்கிற கேள்வி 

எழுகின்றது நமக்கு அதன் விடை கான சிறுமுயற்சியே இந்த விமர்சனம் 
புத்தமதத்தின் மீது கொண்ட பற்று காரணமாக இந்தியாவில் இருந்து மூன்று வருட குதிரை பயணத்தின் முடிவில் ஒரு சீன கிராமத்தை அடையும் போதிதருமர் கிராம மக்களால் விரட்டப்பட்டார் காரணம்?


"மங்கேலியர்களின்" முரட்டுத்தனமான தாக்குதல்களும் கடுமையான அம்மை நோய்த்தொற்றும் அக்காலத்து சீன மக்களை இம்சித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் மூடநம்பிக்கையில் திளைத்திருந்த அம்மக்களை யாரைக்கண்டாலும் அச்சம் கொள்ளச்செய்தது பிறகு அம்மக்கள் தீவிர அம்மை நோய்த்தாக்குதலுக்கு ஆளாகினார்கள், அவர்களை நம் இந்திய அருமருந்தான வேப்பிலை, மஞ்சள் கொண்டு குணப்படுத்தினார் போதிதருமர், அப்போது சீனாவில் வேப்பிலை மஞ்சள் புழக்கத்தில் இல்லை,அதுமட்டுமன்றி முரட்டுத்தனமான "மங்கோலியர்களை" தன் களரிப்பயிற்சி மூலம் விரட்டியடித்தார், அதனால் அம்மக்கள் அவரை கடவுளாக நினைத்து வணங்கினார்கள்.

"போதிதருமர்" மட்டுமல்ல இந்தியாவில் நாம் மறந்த எத்தனையோ இந்துமதத்தை சேர்ந்தவர்கள் என்பதைவிட ஆரியர்கள் வருவதற்க்கு முன்  சித்தர்கள் பல அற்புத சக்தி கொண்டவர்கள் சக்தி என்றால் மந்திரமாயமில்லை கண்களில் ஏற்படும் புரையை தங்கஊசியை பழுக்க காய்ச்சி கண்ணில் பட்டும்படாமல் காட்டி கரைத்து நோயினை குணப்படுத்தியவர்கள் நம் சித்தர்கள், அவர் பெயர் நினைவில்லை! தெரிந்தவர்கள் பிண்ணுட்டத்தில் தெரிவித்தால் நலம், அதுமட்டும்மில்லாமல் யோகாசனம் மூலம் மலக்குடலை வெளியேஎடுத்து சுத்தம் செய்யும் சித்தர்கள் இன்னும் வாழ்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன, மற்றும் கொடிய "பால்வினை" நோய்களுக்கு மூலிகை மூலம் சிகிச்சையளித்துள்ளார்கள் அந்த வகையில் போதிதருமரும் இந்தியமருத்துவத்தில் சிறந்தவர்தான்.

இளையவயதிலேயே சீனா சென்ற போதிதருமர் ஒரு சீனராகவே வாழ்ந்தார் சீன புத்ததுறவியாக வாழ்ந்தார் இறந்தபிறகு சீனமுறைப்படி அடக்கம் செய்யப்பட்டவர் என்பது உண்மை அவர் தமிழகத்திலோ இந்தியாவில் எங்கும் கடைசிவரை வரவி்ல்லை அதனால் மறைக்கப்பட்ட தமிழர் என்று கூறுவது பொருந்தாது, கடைசி மூச்சுவரை சீனத்தை சுவாசித்த பிறப்பால் தமிழர் என்பதைத்தவிர வேறொன்றுமில்லை சரி இனி படத்தை பார்ப்போம்.

முதல் இருபது நிமிட காட்சியில் ரவி கே சந்திரனின் ஒளிப்பதிவும், ராஜிவனின் கலையும், நம்மை ஆறாம் நூற்றாண்டுக்கு அழைத்துச்செல்லுகின்றது பின் வரும் ரிங்கா...ரிங்கா... பாடலுக்கு பிறகு படத்தில் சுவாரசியமில்லை சுருதிஹாசன் கமலின் மகள் என்கின்ற அடையாளத்தை தவிர வேறொன்றுமில்லை, பேசும் தமிழ் அதைவிடக்கொடுமை மராத்திக்காரி அஞ்சலி சரியாக தமிழ் பேசும்போது உங்களால் முடியாதா? சாதாரண மாடல் போல் இருக்கும் சுருதிக்கு இந்தப்படம் "குருவி தலையில் பனங்காய்" மாதிரிதான் வேறென்ன சொல்வது... நடிப்பிலும் ஜீரோதான் பெரிதாக எதிர்பார்த்து ஏமாந்ததுதான் போனோம்!

சூர்யா சுருதிக்கும் ஒரு பொருத்தமான ஜோடியாகத்தெரியவில்லை, மனதில் நிற்கவில்லை, பாடல் காட்சிகளில் மனம் இலயிக்கவில்லை, இடைவேளைக்குப்பிறகு ஜானி வந்தபிறகு படம் சூடுபிடிக்கின்றது. 
ஹிப்னாட்டிசத்தால் சூர்யா சுருதிமீது கார் மோதும் காட்சியில் டிராகுலா படக்காட்சிகள் நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியாது,

படத்தில் "சூர்யாவின்" பங்கு அபாரமானது போதிதருமராய் வரும் காட்சியில் கூர்மையான பார்வையும் ஒளிவீசும் முகமும் தியானம் செய்பவர் சூர்யா அதனால் இயல்பாய் அமைந்துவிட்டதோ...சர்க்கஸ் கலைஞராக வருமிடத்தில் நுனுக்கமாக சில கலைகளை கற்று தேர்ந்து நடித்திருக்கிறார் அருமை

பாடல்களை கேட்டு ரசிக்கலாம் படத்தில் ரிங்கா.... ரிங்கா.... இன்னும் என்ன தோழா....அருமை சோகப்பாடலில் அஞ்சலை டியூன் ஞாபகம் வருகிறது கஜினியில் வரும் ஒரு மாலை பொழுதை போன்று எதிர்பார்த்த நமக்கு ஏமாற்றமே...

தமிழன் எனும் உணர்வைத்தூண்டிவிட்டு கைதட்டல்களைப்பெருகின்ற விதத்தில் வசனமெழுதிய இயக்குனர் காட்சியமைப்பில் சரி, திரைக்கதையிலும் சரிவர செய்யவில்லை, ஆனால் சமூக அவலங்களையும் (மருத்துவமனைக்காட்சியில்) சீனாவின் இந்தியாவுக்கு எதிரான சைலண்ட் வார் மற்றும் யாருக்கும் தெரியாத ஒரு தமிழனை வெளியுலகிற்கு தெரியப்படுத்துகின்ற வகையில் படம் வெற்றி பெற்றிருக்கின்றது, ஆனால் பொழுதுபோக்கு அம்சங்கள் குறைந்த இந்த திரைப்படம் தமிழனை வசீகரிக்காது என்பது உண்மை.

(சைனா கேட் இந்தி திரைப்படத்திக்குப்பிறகு இந்த திரைப்படம் இல்லையென்றால் பாக் அல்லது அமெரிக்காவின் தலையை உருட்டியிருப்பார்கள்)

தமிழ் திரைப்படத்தினை உலகதிரைப்படங்களோடு போட்டி போடக்கூடிய முதல் அடியை முருகதாஸ் அவர்கள் நகர்த்தியுள்ளார், இன்னும் தன்னை பட்டைதீட்டி, சுயபரிசோதனை செய்து கொண்டால்! உலகமெங்கும் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி சினிமாவை நேசிக்கும் அனைவரது நெஞ்சில் குடியிருப்பார் என்பது உண்மை அதற்க்காக அவரை உற்சாகப்படுத்துவோம் தமிழர்களே....





4 comments:

உலக சினிமா ரசிகன் 5:01:00 PM  

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

கோகுல் 6:24:00 AM  

அப்ப சுருதி தேற மாட்டாருங்கரிங்க!

நல்ல விமர்சனம்!மன்னிக்கவும் ஆய்வு!

நிரூபன் 6:31:00 PM  

வணக்கம் பாஸ்,

விமர்சனம் நடு நிலமையாக அலசியிருக்கிறீங்க.

பதிவுக்கு லேபிள் போடும் போது சினிமாப் பதிவுகள் என்றால் திரைமணம், சினிமா என்று சேருங்க
அப்போது தான் உங்கள் பதிவு தமிழ்மணத்தின் திரைமணத்தில் சேர்க்கப்படும்.

பின்னர் அதிக வாசகர்கள் வருவார்கள்.

எனக்கு ஒரு மின்னஞ்சல் போடுங்கள்.

nirupan.bloggger@gmail.com

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP