கள்ளக்காதலால் ஒருவன் ஞானியாக முடியுமா?
>> Sunday, November 13, 2011
இது என்ன கேள்வி? கள்ளக்காதல் வைத்திருந்த திருவண்ணாமலை சாமியார் தெரியும் கள்ளக்காதலால் ஞானியானது யார்? கதை கேளுங்கள்
"உஜ்ஜைனி" என்கிற நாட்டை ஒரு அரசன் மிகச்சிறப்பாக ஆண்டுகொண்டிருந்தான் யார் கண்பட்டதோ தெரியவில்லை நல்ல அரசனான அவன் அடங்காப்பிடாரியான ராணியைக் கொண்டிருந்தான் அவள் பேரழகி கண்டவுடன் காமம் கொள்ளவைக்கும் அதரங்களையும் பெரியகண்களையும் இடை சிறுத்து சாமுத்திரிகா லட்சணம் பொருந்தியவள் புறத்தின் அழகால் வசீகரித்த இராணி அகத்தில் சிறந்தவள் அல்ல அழுக்கு நிறைந்தவள் அவளிடம் அடங்கியிருப்பவர்கள் வாழமுடியும் எதிர்ப்பவர்களின் தலை உடம்பில் இருக்காது அவள் இத்தனைக்கும் உயர்குடி பெண்ணும் அல்ல தாசிகுலத்தை சார்ந்தவள் காமத்தில் திளைக்க துணைதேடினான் அரசன்.." இல்லறத்தாளை தேடாமல் இழுத்தவுடன் படுக்கும் வேசியை இராணியாக்கியதின் விளைவு மக்களின் நிம்மதி போனது
மதியில்லாத மன்னனிடம் அறிவுரை கூறலாம்! மங்கையின் போதையில் இருப்பனிடம் எப்படி கூறுவது? அறிஞர்கள் தவித்தனர் அந்த சூழ்நிலையில்...
தென்னகத்திலிருந்து வந்தார் ஒரு சாமியார் கோவணம் கையில் கரும்பு உடலெங்கும் திருமன் திருவாயில் எப்பொழுதும் உச்சரிக்கும் நமச்சிவாயம் நமச்சிவாயம் என்கின்ற மந்திரம்.
அரசர் வருகிறார் அரசர் வருகிறார் என்று கூவிக்கொண்டு ஓடினான் சேவகன் மக்கள் ஒதுங்கி நின்றனர் நமச்சிவாயத்தை உச்சரிக்கும் அடியவருக்கு நிலையில்லா வாழ்வை கொண்ட மனிதனை மன்னனான அவனின் வருகை சலனப்படுத்தவில்லை சஞ்சலப்படுத்தவில்லை நடுரோட்டில் நடந்து வந்தார்
காவலர் பிடித்து தள்ளினர் அசையவில்லை அஞ்சவுமில்லை அரசன் பரதேசியைப்பார்த்தான் யார் நீ? வினவினான்
நீ...மானிடன் நான்...மானிடன் உமக்கு தெரியாதா? கண்களில் கோளாறா?
ஆத்திரம் தலைக்கேற எங்கிருந்து வருகிறாய்?
தாயின் கருப்பையிலிருந்து!
எங்கே போகின்றாய்?
இறப்பதக்கு!
இங்கே என்ன வேலை போய் சாகவேண்டியதுதானெ!
ஹஹஹ நீ..மட்டும் சாகாமல் வாழப்போகிறாயா?
ஒழுங்காய் பதில் சொல் கேட்பது யாரென்று தொரியுமா?
ஈசனை தவிர யாரையும் எனக்குத்தெரியாது
கடும் கோபம் கொண்ட அரசன் அவரை சிறையில் அடைத்தான்
மாலையில் அரசன் பரதேசிக்கு இவ்வளவு திமிரா? என சிந்தித்தவாறு
சிறைச்சாலை கொட்டிலுக்கு வந்தான் நான் கேட்கின்ற கேள்விக்கு சரியாக பதில் கூறிவிட்டாள் உன்னை விடுவித்துவிடுகிறேன் !"என்றார் அரசன்..
காமத்தைவிட சிறந்த ஞானம் உண்டா?
காமத்தை துறந்தவன்தான் ஞானம் பெறமுடியும்
நான் காமத்தினை படித்தவன் ஆண்மையில்லாதவன்தான் காமத்தை வெறுப்பான்
முட்டாள் நீ...காமத்தில் சிறந்தவன் என்றால் உன் மனைவி கோரமான குதிரைக்காரனுடன் ஏன் உறவு வைத்துக்கொள்கிறாள்?
அரசனின் ஆத்திரம் அதிகமானது எங்கிருந்தோ வந்தவன் தன் மனைவியைக்கேவலமாக பேசியதும் மனதை கோபம் கொள்ள வைத்தது இவனை கழுவிலேற்றுங்கள் என உத்தரவிட்டார் அப்போது பாடினார்
கைப்பிடி நாயகன் தூங்கையி லேயவன் கையெடுத்
தப்புறந்தன்னி லசையாமல் முன்வைத் தயல்வளவில்
ஒப்புடன் சென்று துயனீத்துப் பின்வந்து உறங்குவாளை
எப்படி நானம்புவேன் இறைவா கச்சி ஏகம்பனே
நீ இரவு அவள்தரும் எதையும் குடிக்காதே உறங்குவதைப்போல் நடி என்ன நடக்கின்றது என்று காலை சொல் என்றார் அவர்
"அந்த மூடனை இழுத்துச்செல்லுங்கள்" என்று உத்தரவிட்டு வந்தவரின் மனம் அடியவரின் வார்த்தைகள் காதில் ஒலித்துக்கொண்டேயிருந்தது இராணி பள்ளியறைக்கு வந்தாள் அவள் கொடுத்த மதுவை குடிக்காமல் உறங்குவதுபோல் நடித்தார்
நள்ளிரவில் அவர் கூறியதுபோல் ராணிபக்கத்தில் இல்லை மெதுவாக எழுந்து குதிரை லாயம் பக்கம் போன அரசன் அதிர்ந்தான் முழுநிர்வாணமாய் அருவருப்பான குதிரைக்காரனுடன் படுத்துக்கிடந்தாள் ராணி
ஓடினார் சிறைச்சாலைக்கு அய்யா என்னை மன்னித்துவிடுங்கள் என்று கதறியழுதார் கண்ணீர் விட்டார் நாடு பதவி அனைத்தையும் துறந்து வெறும் கோவணத்துடன் அடியாரின் சீடராய்சென்றார் அவர்தான்
பத்ரகிரியார் அந்த அடியவர் பட்டிணத்தார் எனும் திருவெண்காடர்
நன்றி : அர்த்தமுள்ள இந்துமதம் ஞானம் பிறந்தகதை, செவிவழி கேட்டல்
4 comments:
நல்ல பகிர்வுதான்
உண்மை சொல்லும் உன்னதக் கதை
மாப்ள அருமையா செவி வழி கேட்பு கதை நன்றி!
இது புதுக் கதையா?
நான் தெரிந்து கொள்ள உதவி புரிந்ததற்கு நன்றி
Post a Comment