இயர் ஆப் ஸ்பெசல் மீல்ஸ் 2011 TO 2012
>> Tuesday, November 27, 2012
ஆடு திரும்பல் பேட்டிகுமார்
என்னை மாதிரியே வீட்டம்மாகிட்ட ரொம்ம பயப்படுவாரு, முக்கு கடை முனியம்மா பாட்டியில் இருந்து, சரவணபவன் அண்ணாச்சி ஹோட்டல் வரைக்கும் அலசி, ஆராய்ஞ்சு எழுதறதுல இவரை மிஞ்ச ஆள் கிடையாது! இவர் இருக்கிற வீதியில் யாரும் இப்ப வாக்கிங் கூட போவதில்லையாம்…..! வாக்கிங் போகின்றவர்கள் : அறியாத தகவல்கள் அப்படின்னு ஒரு பதிவு தேத்த துரத்துவதால்..! பின்னங்கால் பிடறியில் அடிக்க கோமாவில் இருந்த 105 வயது பெரியவர் எழுந்து ஓடுனாறாம் இவர் வீட்டுத் தெருவே பெருமையாக பேசிக் கொண்டிருக்கின்றது.
பலாசக்கை காப்பிபெவிக்கால்குமார்
என்னை மாதிரியே வீட்டம்மாகிட்ட ரொம்ம பயப்படுவாரு, முக்கு கடை முனியம்மா பாட்டியில் இருந்து, சரவணபவன் அண்ணாச்சி ஹோட்டல் வரைக்கும் அலசி, ஆராய்ஞ்சு எழுதறதுல இவரை மிஞ்ச ஆள் கிடையாது! இவர் இருக்கிற வீதியில் யாரும் இப்ப வாக்கிங் கூட போவதில்லையாம்…..! வாக்கிங் போகின்றவர்கள் : அறியாத தகவல்கள் அப்படின்னு ஒரு பதிவு தேத்த துரத்துவதால்..! பின்னங்கால் பிடறியில் அடிக்க கோமாவில் இருந்த 105 வயது பெரியவர் எழுந்து ஓடுனாறாம் இவர் வீட்டுத் தெருவே பெருமையாக பேசிக் கொண்டிருக்கின்றது.
இவர் தன் கையில்
இருக்கும் பஸ் டிக்கட்டின் பின்புறம் கூட ஜோக் எழுதி பல பத்திரிக்கைக்கு அனுப்பி வெளியிடாமல்
திருப்பி அனுப்பியது மட்டும் திருப்பதி மலையை விட உயரமாக இருக்கும். முன்னால்
ஆல்ரவுண்ட் பிளாக்கர் இப்பொழுது டுவிட்டரில் மட்டும் கவனம் செலுத்துகின்றார். ஒரு
நாளைக்கு 3 அல்லது 5 போஸ்ட் போட்டிருவார் அதுல 100க்கு 175 சதவீதம் காப்பி பேஸ்ட்…..இவர்
போன்ல ஒன்லி மிஸ்டு கால் மட்டும் போகும். இவரது சமீபத்திய ஸ்டேட்மெண்ட "சண்டைன்னாலும் சம்சாரம்ன்னாலும் கால்ல விழுந்திருவேன்..!" அப்படின்னு உண்மைய சொல்லுற நல்ல மனுசன்.
'அநியாயத்துக்கு நல்லவன்' தமன்னாகுமார்
சென்னை பாஷையில் எழுதி
படிப்பவர்களை அவ்வப்போது நாக்கு சுளுக்கவைக்கும் வித்தையில் வல்லவர். அநியாயத்துக்கு நல்லவர், போஸ்டர் ஒட்டும் முனுசாமி! ஷகிலா படத்தின் போஸ்டரை
தெரியாத்தனமாக இவர் வீட்டுக்கு எதிரே ஒட்டியதால் அவரை திருத்துகின்றேன் பேர்வழி
என்று பேசியே திருத்தி இப்பொழுது அவர் வேலையில்லாமல் இருக்கின்றார்…..! "என் கைல
மாட்டுனா படவா பிச்சுவாவ.. வாயில வுட்டு ஆட்டப் போறேன்" என்று சொல்லிக் கொண்டு போஸ்டர் முனுசாமி காண்ட்ல கீரார் நைனா அந்தாண்டை போய்க்கினாத..ஆங்!,
அப்ப..அப்ப…அரசியல் உள்குத்து எழுதி கிச்சுகிச்சு மூட்டுவார்,
ஸ்பெஷல் மீல்ஸ் என்று பழைய சாதத்தை ஊறுகாய் வைத்து படைப்பார்! கேட்டால் ஐஸ்
பிரியாணி என்பார். பிரபல பதிவர் ஒருவர் இவருக்கு குழந்தைக்கோமணவாயர் என்கின்ற
பட்டத்தைக் கொடுத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பீடாஷாப் பீதாம்பரகரன்
அஜித் படம் மொக்கையாக
இருந்தால் இயக்குனர் தவறென்றும், விஜய் படம் மொக்கையாக இருந்தால் விஜய் தவறென்றும்
மாற்றி மாற்றி விமர்சனம் போடுவதில் வித்தகர். புல் டைட்ல படத்துக்கு போயிட்டு
காஜல் வரும் சீன்ல மட்டும் முழிச்சு…. முழிச்சு… பார்த்திட்டு காஜால் வரும் சீனை
மட்டும் குறிப்பிட்டுட்டு தலைவி, அம்முக்குட்டிக்காகத்தான் போனேன் என்று
பதிவிடுவதில் ஜகஜால கில்லாடி…
புனுகு பூனை கக்கா
ஆராய்ச்சியில் நீண்ட நாட்கள் இருந்ததால் எப்படிப்பட்ட கப்பையும் எதிர் கொள்ளும்
தீரம் மிக்கவர். சில கமெண்ட்ல எதிராளியின் டவுசரை முழுக்க கழட்டுவதால் நிறைய
பிரபலங்கள் இவரிடம் ஜாக்கிரதையாகவே பழகுகின்றனர். கேப்டனின் அதிதீவிர
கிராம்டன் கிரீவ்ஸ் பேன்! என்பது குறிப்பிடத்தக்கது..!
பெட்டிக்கடைக்காரன் வால்மார்ட்டில் குஜய்குமார்
இரண்டு வருடம் ஓய்வில்
இருந்து விட்டு காய்ந்த மாடு கம்பில் பூந்தது போல பேஸ்புக், பிளாக், பிளஸ், பின்ட்ரெஸ்ட்,
யாகு, வெயான், லின்க் இன், பிளிக்கர், அலேக்சா, சரோசா, நிரோசா எனக்
கிடைக்குமிடமெல்லாம் அக்கவுண்ட் ஓப்பன் செய்து……அங்க வச்சு தெளிய…தெளிய…..அடிச்சாலும்
நானும் ரௌடி, மதுரைக்காரன், தேனிக்காரன், கரகாட்டக்காரன் என்று பில்டப் கொடுக்கும் ஆல் ரவுண்டர். எல் கே ஜியில குழந்தைய
சேர்க்க பட்ட பாட்டை பதிவா போட்டு நிறைய பெற்றோர் வயித்துல புளிய கரைச்ச பதிவுலக
பேதி டாகுடர் அண்ணன் குஜய்குமார். இவர் அதி தீவிர ராமராஜன் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஞ்சாபூனை விம்ரின்
மதம் சார்ந்த
விவாதங்களில் விம் மற்றும் ரின் போட்டு வௌக்குவதால் இவர் பெயரே விம்ரின் என்று
ஆகிவிட்டது. வரலாறு, சினிமா என கலந்து கட்டி கருத்து சொல்லும் கருத்து கந்தசாமி. மூக்கு ஸ்ரீதேவி மாதிரியென்று ஒருவர் புகழ்ந்ததால் மூக்குக்கு மட்டும் பேர் அன்
லவ்லி தினமும் நாற்பது தடவை தடவுகின்றாராம், ஆனால் மூக்கு வளரவில்லை. அடிக்கடி
தும்மல்தான் வருகின்றது வேறு நல்ல பிராண்டு மூர் மார்க்கெட்டில்
தேடிக்கொண்டிருக்கின்றார், பல விவகாரமான விசயங்களை பலகாரமாக படைப்பதில் வித்தகர்…..
டிஸ்கி : இந்த பதிவில் வரும் பெயர்களும் சம்பவங்களும் உண்மையே..! நீங்கள் நினைப்பவர்களைத்தான் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அனைத்தும் மொக்கை நகைச்சுவையே..!நோ....பீலிங்ஸ்....நோ....66A
அபாயகரமான அறிவிப்பு
இது தொடரும்.........
:-)