இது இந்தியா!

>> Sunday, April 8, 2012



ஒரு திருவிழாக் கூட்டத்தில்
குரங்கு பொம்மை வேண்டும் என்று 
அடம் பிடித்த குழந்தைக்கு 
பேரம் பேசி வாங்கிக் கொடுத்த 
ஏழைப் பெற்றோர்கள் 
விழா முடிந்து திரும்பிய போது
தூங்கிய குழந்தையின் கைகளில் இருந்து
தவறிவிழுந்த பொம்மையின் மீது 
பல வாகணங்கள் ஏறி நசுக்கிச் சென்றன...


குப்பையில் வீசியெறிந்த ஆரஞ்சுத் தோல்களைக்
கிளறி ஒட்டியிருக்கும் சில துண்டுகளைத்
தேடித் தின்றபடி சில சிறுவர்கள்...


நூறு ரூபாய் பணத்திக்காக பதினாறு
கிலோமீட்டர் சுமந்து வந்து
நகர தேனீர் கடைகளில் விறகு
விற்கும் மலைவாழ் மக்கள்...


நெரிசலான சாலையின் நடுவே இடைஞ்சலாய்
மேடைபோட்டு ஆளும்கட்சி 
அரசியல்வாதியொருவன்
குரைத்துக் கொண்டு இருந்தான்
இந்தியாவை ஒளிரச் செய்வோம் என்று.....

16 comments:

மகேந்திரன் 7:14:00 PM  

வணக்கம் நண்பரே..

பதிவின் படம் பல கதைகள் சொல்கிறது...
அற்புதமான பேசும் படம்..

வாழ்வின் நிலைப்பாட்டிற்காய் நித்தமும்
குருதிக்கசிய உழைத்தாலும்
சிறு நிலக்கடலை மட்டுமே ஊதியமாகப்
பெரும் ஆயிரம் ஆயிரம் பாட்டாளிகள் இவ்வுலகில்..

ஆளும் வர்க்கத்தினர் கொண்ட
மக்களின் துயர்நிலை கலையே வேண்டுமே ஒழிய
பங்கு வர்த்தகத்தின் நிலைகண்டு
நாடு ஒளிர்கிறது என்று
இறுமாப்பு பேசக்கூடாது....

உணர்ச்சியுள்ள கவிதை நண்பரே..

கவிதை வீதி... // சௌந்தர் // 7:27:00 PM  

இந்தியாவில் அனைத்து அரசியல்வாதிகளும் ஒழிந்தால்தான்
இந்தியா ஒளிரும்...

முத்தரசு 8:02:00 PM  

முகப்பில் மாற்றம்...... ம்ம்.

இனம் இனத்தோடு சேரும்.....அப்படி போடு

முத்தரசு 8:03:00 PM  

வடிவேலு அண்ணே தனியா எதோ சொல்றாரு - துணைக்கு ஆள் வேணும் போல

முத்தரசு 8:05:00 PM  

படமும் கவிதையும் நாட்டு நடப்பை வெளிச்சம் போட்டு காட்டுதே

Unknown 8:31:00 PM  

ஏம்பா ஒளிர்வதுன்னா எப்படி...ஊரேல்லாம் ஏமாத்தி ஒன்னுக்கு நாலு கட்டிகிட்டு...பல குட்டி போட்டுகிட்டு வாழுராங்களே...அப்போ அவங்க ஒளிர்லயா..இன்னாயா...ட்ரவுசர் இல்லாம சென்னைக்கு வந்து இன்னைக்கு இந்தியாவோட ஸ்பெக்ட்ரம்ங்கர ட்ரவுசரயே உருவிட்டாரு...இது ஓளிர்ந்ததுல சேராதோ!...

வெளங்காதவன்™ 9:36:00 PM  

வேகாத சோறு சமைத்து,
வேகமாய்க் கரி சமைத்துப்
பலபலவாய்ப் பங்கிட்டு
பாத்திரத்தைத் தேய்க்கையிலே,
பல் குச்சி கேட்டானாம்
பரதேசி!!!!

#யோவ், இதுவும் கவிதைய்யா....

வெளங்காதவன்™ 9:36:00 PM  

தொடரட்டும் தங்கள் பொன்னான பணி!!!!

பால கணேஷ் 9:44:00 PM  

நிகழ்வுகளை வெளிச்சமிட்டுக் காட்டிய நல்ல கவிதை. அரசியல்வாதிகளிடம் இருப்பது எப்போதும் ‘பேச்சு’ மட்டும்தானே... என்ன சொல்ல/செய்ய..?

Anonymous,  11:39:00 PM  

இந்தியாவின் - உலகின் அரசியல தலைகீழாக மாறுகிறது சுயநலத்தால்.புது உருவாக்கம் பெற்றால் தான் பழைய கஞ்சல்கள் மறையும். நல்ல வரிகள்.வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.

நாய் நக்ஸ் 11:39:00 PM  

copy paste illaiyaa....???

naan antha blog thedi poren...???
poyaa...

Anonymous,  11:39:00 PM  

இந்தியாவின் - உலகின் அரசியல தலைகீழாக மாறுகிறது சுயநலத்தால்.புது உருவாக்கம் பெற்றால் தான் பழைய கஞ்சல்கள் மறையும். நல்ல வரிகள்.வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.

aalunga 12:18:00 PM  

வறுமைக்கோட்டை கீழே இறக்க இறக்க இந்தியா ஒளிரத் தான் செய்யும்!

இது தான் நிதர்சனம்!

Unknown 3:51:00 AM  

ஏழைகள் வாழ்வே இன்னல்-அந்த
எத்தர்கள் வாழ்வோ கன்னல்
கோழையே மக்கள் இன்றே-இந்த
கொடுமையும் தீரல் என்றே
பேழைகள் நிரப்பிட அவரும்-நனி
பேதையாய் வறுமையில் இவரும்
வாழவே காண்பதா என்றும்-காலம்
வருமா வாழ்ந்திட நன்றும்!

சா இராமாநுசம்

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP