நெல்லையை நோக்கிய ஒரு அழகான பயணம்!

>> Thursday, April 26, 2012பிசரின் மெயில் பார்த்ததும் கார்ல போகலாம் என முடிவு செய்தது, ஆனால் காரில் போவது சிரமம் என்று டிரைன் புக் செய்தோம், சிபி, சம்பத், நான் என மூவருக்கும் முன் பதிவு செய்யலாம் என முடிவெடுப்பதில் ஏற்பட்ட குளறுபடியில், சிபி எங்களுக்கு முன்னே பதிவு செய்ய, கடைசி நேரத்தில் எப்படியோ அடிச்சி புடிச்சு தனித்தனியாக பதிவு செய்தோம் தமிழ்பேரண்ட்ஸ் சம்பத் கோவையில் ஏறிக்கொள்ள திருப்பூரில் மாலை 8.30க்கெல்லாம் இரயில் நிலையம் வந்தேன். "நெல்லை வெயிலை சமாளிப்பது எப்படி...?" என்ற சிந்தனையில் இருக்கும் போதே லேசாக தூறல் வீசத் தொடங்கியது, குளிர் காற்றும் வீச... அடடா இயற்கைக்குதான் பதிவர்கள் மீது என்ன அக்கறை என மழையை ரசித்துக் கொண்டுருந்தேன்.

கம்பார்ட்மெண்ட் தேட அவசியம் இல்லாமல் வாசலில் நின்று கைகாட்டினார் சம்பத், எதிரதிரே அப்பர் பர்த் மேல ஏறி படுத்து பதிவுலகத்தினை பற்றி பேசிக் கொண்டு இருந்தோம், சிபி ஈரோட்டில் தான் இரயில் ஏறிவிட்டதாக SMS அனுப்பினார்,(அவர் என்னைக்குத்தான் போன் பண்ணியிருக்கிறார்) சிபி இருந்த பெட்டியில் பிகர்கள் கொஞ்சம் அதிகமாக இருந்தது! "சிபி வாங்க எங்க கம்பார்ட்மெண்ட்ல சீட் இருக்கு..!" என்று கையை பிடித்து இழுத்தோம், நான் வரமாட்டேன்...வரமாட்டேன்...என்று அழுதார். டிடிஆர் கூட "அட போங்க... தம்பி பிரண்ட்ஸ் கூப்பிடுறாங்க...!நான் ஒன்னும் சொல்ல மாட்டேன் என்றார்!", "நான் ஒரு இந்தியக் 'குடி மகன்' ரூல்ஸ் படிதான் நடப்பேன் " இரயில்வே மந்திரி வந்து சொன்னாலும் போகமாட்டேன் என்று அந்த இருட்டிலும் கண்ணாடி போட்ட தலையை ஆட்டி ஆட்டி விஜய்காந்த் மாதிரி பேசினார். அந்த கடுப்புலதான் டிடிஆர் பற்றி தன் டுவிட்ட பதிவுல போட்டிருக்கிறார் பார்த்திருப்பிங்க....

சரி இனி அவரு வரமாட்டார் என்று தெரிந்து நடந்து எங்க பெட்டியிருக்கும் இடத்திக்கு வந்தோம், பதிவுலகை பற்றியும் அதையும் இதையும் பேசியதில் நாங்கள் தூங்கவில்லை, ஆனால்! எங்க பெட்டியில் இருந்த கும்பகர்ணன்ஸ் மின்சார வண்டியை... கரி வண்டியாக மாற்றி குறட்டை விட இரவு தூக்கம் இல்லாமலே போனது, சிலுசிலுவென்ற காற்றும் மழைதூறலும் இதமாக இருக்க வாசலில் வந்து நின்று கொண்டோம் இரயில் நெல்லையை நோக்கி பயணித்தது.

நாங்கள் செல்லும் போது ராஜபாட்டை ராஜாவுக்கு போன் செய்தோம், "நக்கீரன் என்ன செய்து கொண்டு இருக்கிறார்?" என்று கேட்டோம், நெல்லையில் இறங்கி விட்டதாவும், நக்கீரன் இரயிலை விட்டு இறங்கியதும் மன்டியிட்டு "வீரம்விளைஞ்ச பூமி வீரபாண்டியகட்டபொம்மன், தேசம்.." "பாரதியாரின் கால்பட்ட இடம்" என உணர்ச்சி பெருக்கில் மண்ணை முத்தமிட்டதாகவும் ஆகா மண் உப்பு கரிக்கிறது எல்லாம் அந்த தலைவர்களின் வியர்வை என்றாராம்! வியர்வை இல்லையப்பா அங்க பாரு என்று ராஜா காட்டிய இடத்தில் ஒரு குழந்தை உச்சா போய்கொண்டிருந்ததை காட்டினாராம்...நெல்லையில் இறங்கியதும் முதல் பல்ப்பை வாங்கினார் நக்ஸ்.

நாங்கள் நெல்லையை காலையில் அடைந்ததும் மனோவுக்கு போன் செய்தோம், அவருக்கு சரியாக எங்களுக்கு எந்த அறை ஒதுக்கப்பட்டுள்ளது என்கிற விபரம் தெரியவில்லை...பிறகு ஆபிசருக்கு போன் போட்டோம், பரணி ஹோட்டல், அறை என் 109 என்று கூற அங்கு சென்று சாவியை வாங்கிக் கொண்டு அறைக்குச் சென்றோம், அறை என் 107ல் கருன், சௌந்தர், தமிழ்வாசி மூன்று உருவங்களும்... ஏ.சியை ஹையில் வைத்து விட்டு போர்த்திக் கொண்டு தூங்கிக்கொண்டு இருந்தது, அவர்களை எழுப்பிவிடவே காஃபி ஆர்டர் செய்தார் கருன் வாத்தியார், சூடாக காஃபி வரவே நாங்க குடிக்க சிபி வேண்டாம் என்று மறுத்தார்..., "சிபி பதிவுலதான்யா காஃபி பேஸ்ட் நிஜத்தில எந்த பழக்கமும் இல்லை.." என்று அனைவரும் ஓட்டவே..தன்னுடைய ஆன்ட்ராய்'டை தூக்கிக்கொண்டு தனியறைக்கு ஓடிவிட்டார்....அங்கு டுவிட்டிக் கொண்டு இருந்தார்.அனைவரும் குளித்து விட்டு ஒரு கோயிலுக்கு போனோம் போகும் வழியில் கேமராவுக்கு செல் வாங்கனும் என்று மெடிக்கல் ஷாப் போனார். ஆனா அவர் கேமரா செல் போடக்கூடியது அல்ல சார்ஜ் ஏற்றக்கூடியது, ஈரோடு பதிவர் சந்திப்பில் இதே மாதிரி செய்தார் அது என்ன? என்பது மர்மமாகவே இருக்கிறது. கோவிலில் நல்ல புள்ளைகளாக சாமி கும்பிட்டனர் அனைவரும். காரணம் பிகர் ஒன்று கூட இல்லை!

ஒரு பஸ்ல ஏறி திருமணமண்டபத்தை அடைந்தோம், ஆபிசர் அனைவரையும் வரவேற்றுக்கொண்டு இருந்தார், நக்கீரனும் உள்ளே வர நக்கீரரை அனைவரும் வரவேற்றார்கள்,கவுசல்யா அறிமுகமானார் பசுமை விடியல் இயக்கம் சார்பாக அனைவருக்கு மரக்கன்று கொடுக்கப்போவதாக கூறினார், ஒவ்வொருவருடைய பெயரையும் ஆர்வமாகக் கேட்டுக்கொண்டார்.அப்புறம் சுறுசுறுப்பாக வரவேற்றுக் கொண்டுருந்தார் பலேபிரபு, நான் பலே பிரபுவுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டுருந்து விட்டு உணவருந்தப் போனோன். இட்லி,பூரி,வடை, இனிப்பு என திவ்யமாக சாப்பிட்டு விட்டு மறுபடியும் அறைக்கு வந்தோம் அப்பொழுதுதான் நக்கீரன் எங்களிடம் சிபியைப் பற்றி ஒரு உண்மையை கூறினார், அது என்னவென்றால்...ஹிஹி! நாளைக்குச் சொல்கிறேன்...

புகைப்படங்கள் : தமிழ்வாசி பிரகாஷ்

19 comments:

தமிழ்வாசி பிரகாஷ் 1:28:00 AM  

எலேய் மக்கா சிங்கம் எதுக்காக புறப்பட்டுச்சுன்னு நமக்கு தெரியுமே....

விக்கியுலகம் 1:31:00 AM  

சார் கதை நல்லா இருக்கு...உண்மைய எழுதுங்க...ஏன்னா..ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரியா எழுத இது என்ன கதை சொல்லும் பாங்கா...சார்...விசயம் திருமண விழா பத்தியதுன்னு நெனைக்கிறேன் ஹெஹெ!

வீடு சுரேஸ்குமார் 1:34:00 AM  

@விக்கியுலகம்
விக்கியுலகம் said...
சார் கதை நல்லா இருக்கு...உண்மைய எழுதுங்க...ஏன்னா..ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரியா எழுத இது என்ன கதை சொல்லும் பாங்கா...சார்...விசயம் திருமண விழா பத்தியதுன்னு நெனைக்கிறேன் ஹெஹெ!////

உண்மைய எழுதறதா....?
பிம்பிளிக்கி பிளாக்கி மாமா பிசுகோத்து....

வீடு சுரேஸ்குமார் 1:35:00 AM  

@தமிழ்வாசி பிரகாஷ்
தமிழ்வாசி பிரகாஷ் said...
எலேய் மக்கா சிங்கம் எதுக்காக புறப்பட்டுச்சுன்னு நமக்கு தெரியுமே....
////////////////////////////
பெரிய ராணுவ ரகசியமா....? புல் கட்டு கட்டத்தான்..........

விக்கியுலகம் 1:36:00 AM  

வீடு சுரேஸ்குமார் said...
@விக்கியுலகம்
விக்கியுலகம் said...
சார் கதை நல்லா இருக்கு...உண்மைய எழுதுங்க...ஏன்னா..ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரியா எழுத இது என்ன கதை சொல்லும் பாங்கா...சார்...விசயம் திருமண விழா பத்தியதுன்னு நெனைக்கிறேன் ஹெஹெ!////

உண்மைய எழுதறதா....?
பிம்பிளிக்கி பிளாக்கி மாமா பிசுகோத்து....

>>>>>>>>>

வெரி குட்...இப்படியா உங்க உண்மைகளை வெளியில் சொல்லோனும் ஹெஹெ!

மௌனகுரு 1:36:00 AM  

Super experience bro:)

NAAI-NAKKS 1:41:00 AM  

Mmm....
Mano-vin....
Cellai.....
Pudungave.....
Mudiyalaippa.....!!!!!!

மனசாட்சி™ 2:14:00 AM  

தொடரா வருமா...ம் ம் ம்

மயிலன் 2:52:00 AM  

பதிவு போடறதுக்காகவே கல்யானுதுக்கு போயிருப்பீக போல ? வெளங்கிரும் :)

Gobinath 3:54:00 AM  

பேச்சிலர் மாதம் எண்டதுக்காக ஊர் சுத்துறீகளோ?

எல்லாரும் வாங்கின பல்பைப் பற்றி எழுதுறதோட நீங்க வாங்கின பல்புகளையும் எழுதுங்க. அதுதானே நல்ல பதிவருக்கு அழகு :P

இராஜராஜேஸ்வரி 4:01:00 AM  

கவுசல்யா அறிமுகமானார் பசுமை விடியல் இயக்கம் சார்பாக அனைவருக்கு மரக்கன்று கொடுக்கப்போவதாக கூறினார்,

நல்ல விஷயம்.. பாராட்டுக்கள்,,

Esther sabi 5:01:00 AM  

உங்கள் பணம் மட்டுமல்ல உங்கள்
பயணம் பற்றிய பதிவும் அழகாக இருந்தது சுரேஷ் அண்ணா

ராஜி 5:33:00 AM  

இத்தனை பதிவர்கள் போய் இருக்கீங்க. ஒரு பதிவராலயும் மெடிக்கல் ஷாப்பில் சிபி சார் என்ன வாங்குனார்ன்னு கண்டுப்பிடிக்க முடியலைன்னா..., தம்பி நீங்கள்லாம் இன்னும் வளரனுமோ?!

koodal bala 6:20:00 AM  

\\\இட்லி,பூரி,வடை, இனிப்பு என திவ்யமாக சாப்பிட்டு விட்டு மறுபடியும் அறைக்கு வந்தோம்\\\ அதுக்கு முன்னாடி பரணி ஹோட்டல்ல என்னல்லாம் சாப்பிட்டீங்க ?

புலவர் சா இராமாநுசம் 8:21:00 AM  

பயணக் மதை சுமையாக இல்லை சுவையாக உள்ளது சா இராமாநுசம்

மனசாட்சி™ 9:31:00 AM  

//ராஜி said...

இத்தனை பதிவர்கள் போய் இருக்கீங்க. ஒரு பதிவராலயும் மெடிக்கல் ஷாப்பில் சிபி சார் என்ன வாங்குனார்ன்னு கண்டுப்பிடிக்க முடியலைன்னா..., தம்பி நீங்கள்லாம் இன்னும் வளரனுமோ?!//

ஹா ஹா ஹா எனக்கும் மட்டுமே தெரியும் ஆனா சொல்ல மாட்டேன் ஹி ஹி ஹி சித்தப்பு திட்டும்

மோகன் குமார் 10:56:00 AM  

ஈரோடு சங்கமம் வந்த போதும் உங்களை பார்த்து பேசவில்லை Suresh. இன்னொரு சந்தர்பத்தில் சந்திப்போம் என நினைக்கிறேன்

திண்டுக்கல் தனபாலன் 3:19:00 AM  

நல்ல சஸ்பென்ஸ் ! தொடருங்கள் நண்பரே !

More Entertainment 1:25:00 AM  

hii.. Nice Post

Thanks for sharing


For latest stills videos visit ..

www.ChiCha.in

www.ChiCha.in

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP