முள்ளும் புதர்களும் இருந்த காட்டை சோலை வனமாக்கிய மண்ணின் மைந்தன்
>> Monday, April 9, 2012
திருநெல்வேலி மேலச்சேவல் கிராமத்தில் புல்லும் புதருமாக எதற்கும் பயனற்றுக் கிடந்த நூறு ஏக்கர் தரிசு காட்டை வாங்கி சோலை வனமாக மாற்றியுள்ளார் இலியாஸ் என்னும் மலையாளி நண்பர். இலியாஸ் கேரள மாநிலம் கொல்லத்தில் மையநாடு கிராமத்திலிருந்து B.tech படித்து நல்ல அரசு வேலையில் இருந்த அவருக்கு அதில் விருப்பம் இல்லை. விவசாயத்தில் நாட்டம் ஏற்படவே, கைநிறைய வருமாணம் தந்த வேலையினை துறந்து பதினைந்து வருடங்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம் மேலச்சேவலில் நூறு ஏக்கர் தரிசு நிலத்தை வாங்கி விவசாயம் செய்து இன்று தமிழகத்தின் சிறந்த விவசாயி என்கிற விருதையும் பெற்றிருக்கிறார்.
தரிசு நிலத்தை சோலைவனமாக மாற்றும் சவாலான வேலையினைத் சிறப்பாக செய்துள்ளார். பெய்யும் மழை நீர் சிறிதளவு கூட வீணாக்காமல் வாய்க்கால் மூலம் 7ஏக்கரில் ஒரு பெரிய குளம் வெட்டி வருடம் முழுவதும் பெய்யும் மழைத் தண்ணீரை கொண்டு சென்று தேக்கி வைத்து பயன்படுத்துகிறார்.
தோட்டத்தில் பத்து ஏக்கரில் நேந்திரம் வாழைத் தோப்பும், 5 ஏக்கரில் நெல் வயலும், 5ஏக்கரில் தென்னை மரமும், 10 ஏக்கரில் சவுக்கு மரமும், 5ஏக்கரில் கருவேப்பிலையும், 3ஏக்கரில் சுவையான மாம்பழமும், வேலிகளைச் சுற்றி இரத்தசந்தனம் மரமும், வேப்ப மரமும் வைத்து மூலிகை வாசத்துடன் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருக்கிறார்.
சிறிது இடத்தை ஒதுக்கி 50 பசுமாடுகளும், 60 ஆடுகளும் வைத்திருக்கிறார் அவைகளில் பால் கறப்பதில்லை! இயற்கை உரத்திற்காக மட்டுமே பயன்படுத்துகிறார், காய்கறிகளும், கீரை தோட்டமும் வைத்து இருக்கிறார்.
விவசாய பயன்பாடுகளுக்கு தேவையான இயந்திரங்கள், டிரேக்டர்கள் சுயமாக வைத்து பயன்படுத்துகிறார். குளக்கரையில் பூந்தோட்டமும் வைத்திருக்கிறார் அவை பூத்து குலுங்குவது அழகு மட்டுமல்ல நல்ல வருமாணமும் கூட, அவைகளுக்கு இராசாயண உரம் பயன்படுத்தாமல் சாணி காய்ந்த இலைகளை பயன்படுத்துகிறார்.
நெல் அறுவடை முடிந்த பிறகு "சன்ஹஸ்" செடிகளின் விதைகளைத் தூவி சிறிது வளந்த பிறகு உழுது நல்ல மக்கிய உரமாக பயன்படுத்துகிறார். இது நல்ல பயனை தருவதாக கூறுகிறார். நல்ல விளைச்சலையும், இராசயண கலப்பில்லாத உணவையும் வழங்குகிறது.
வாழை பழத்தை விட வாழைஇலை மிகப்பெரிய வருமாணத்தைத் தருவதாக கூறுகிறார். வாழை மரத்தை சுற்றியுள்ள சிறிய வாழைக்கன்றுகளின் இலையை மட்டும் வெட்டி விற்பனை செய்வதில் மாதம் 30,000வரை வருமாணம் கிடைக்கிறது ஒரு வாழைஇலை துளிர்க்க 14 நாள் ஆகும் சுழற்சி முறையில் வெட்டி வருகிறார். இது மிகச்சிறந்த திட்டமிடல் ஆகும்.
கருவேப்பிலை கிலோ 25லிருந்து 35 ரூபாய் வரை விற்பனையாகிறது. சீசனில் ஒரு ஏக்கருக்கு ஒரு நாளைக்கு 15 டன் அறுவடை செய்யப்படுகிறது இவை மிகப்பெரிய சாதனையாகும். இந்த கறுவேப்பிலை செங்காம்பு வகையை சேர்ந்தது. ஒரு செடிக்கு ஒரு செடி இடைவெளி இரண்டு அடி குறுக்காக மூன்று அடி இடைவெளி விட்டுள்ளார் களை எடுப்பதுக்கு வசதியாக இருக்கின்றது.
ஒரு சதுர அடி அகலத்தில் ஒரு அடி ஆழத்தில் குழிவெட்டி காய்ந்தசாணி மண்ணையும் கலந்து இரண்டு அடி உயரமுள்ள கறுவேப்பிலை நாற்றை நட்டு வளர்க்கிறார். இது நன்கு வளர்கிறது. நட்டு ஒரு மாதம் கழிந்த பிறகு ஒரு செடிக்கு டிஏபி களைக்கொல்லி மட்டும் இட்டு, அதன் தண்டு நன்கு வளர 9 மாதம் ஆகும் முக்கால் அடி உயரத்திலேயே வெட்டி விற்பனை செய்து வருமாணத்தை ஈட்டலாம்.
வருடத்திற்கு ஏக்கருக்கு மூன்று குவிண்டால் சாணியை போடுகிறார் இது மிகச்சிறந்த மண் வளத்தை தருகிறது. இவரின் சாதனை நமக்கு வியப்பை அளிக்கிறது நல்ல தண்ணீர் வளம் உள்ள பல ஊர்களில் விவசாயம் செய்யாமல் வீட்டு மனைகளாக விற்பனை செய்து விவசாயத்தை அழித்துக் கொண்டு இருக்கிறார்கள். அது மட்டுமில்லாமல் சாய ஆலைகளும், தோல் பதனிடும் தொழிச்சாலைகளும் பல ஆறுகளை சாக்கடைகளாக்கி சீரழித்து வருவது வேதனையளிக்கிறது இவர் போன்ற சில நல்ல உள்ளங்களால் விவசாயம் செழிக்கின்றது. இவரைப் பார்த்து பலரும் விவசாயம் செய்ய முன் வருவார்கள் என்பது உறுதி.
நன்றி : மாத்ருபூமி
22 comments:
வணக்கம் நண்பா
@மனசாட்சி™
வணக்கமுங்க...
Super thalaiva.....
இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்ளுவோம்... இணைந்தே இன்னும் பல சாதனைகள் செய்யுவோம்....
#நானும் விவசாயி... நானும் விவசாயி....
நல்லதொரு முன்னுதாரண நபர் இவர். சொல்லில் பலர் காட்டுவதை செயலில் காட்டியிருக்கிறார். அரிய தகவலை அறியத் தந்ததற்கு நன்றி சுரேஷ்.
திரு இலியாஸ் அவர்கள் நோபல் பரிசுக்கு தகுதியானவர்!
நல்லதொரு மனிதரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ
விளைநிலங்கள் எல்லாம் பிளாட் ஆகும் வேளையில் இப்படி ஒருவரா? நல்லாயிருக்கட்டும் அவர் !
good person
thanks for sharing
கிடைக்கும் நீர்வளத்தை எப்படி பாதுகாக்க வேண்டும்
என்பதற்கும், தரிசு நிலத்தையும் விலை நிலமாய்
மாற்றலாம் என்பதற்கும் இவர் ஒரு சிறந்த உதாரணம்..
அருமையான பகிர்வை அளித்ததற்கு நன்றி..இவரின் புகழ் மென்மேலும் பரவட்டும்!
வணக்கம் தம்பி!
நல்லதோர் பதிவு நானும் ஈழத்துக்கு திரும்பி செல்லும்போது கட்டாயம் விவசாயம் மாத்திரமே செய்வேன். வியாபார குடும்பம் என்னுடையது என்றாலும்.!!!!!!!
நண்பர்களுக்கு இடம் ஒதுக்குவது நல்ல விடயம்தான் தம்பி, ஆனால் உங்கள் பதிவுகள் அதிகமானவரை சென்றடைவதில் சிரமம் இருக்கும். இதற்கு வேறு நல்ல ஐடியா இருந்தால் செய்யுங்கள் தம்பி .!!!
@விக்கியுலகம்உண்மைதான் விக்கி!!
@காட்டான்
காட்டான் said...
நண்பர்களுக்கு இடம் ஒதுக்குவது நல்ல விடயம்தான் தம்பி, ஆனால் உங்கள் பதிவுகள் அதிகமானவரை சென்றடைவதில் சிரமம் இருக்கும். இதற்கு வேறு நல்ல ஐடியா இருந்தால் செய்யுங்கள் தம்பி .!!!///
அண்ணா கோவிச்சுகாதிங்க...அனைவரும் நம்ம நண்பர்கள்தான் நீங்க பேனர் வசனத்தை தவறா நினைச்சுக்காதிங்க..ஹிஹி! ஒரு பிரபல பதிவர் இந்த பிரபலமாகாத சின்னபையனைப் பார்த்து நீ வேலை வெட்டியில்லாத வெட்டி ஆபிசர்!பதிவு போட்டு குரூப்பா கும்மியடிப்பே...! உன் பதிவ நான் படிக்க மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டாரு....மனசு கஸ்டமா போயிருச்சுண்ணா!
செயல வீரர் வாழ்க!செப்பிய நீரும் வாழ்க! அருமை! புலவர் சா இராமாநுசம்
பசுமை நிரைந்த பகிர்வு..பாராட்டுக்கள்..
Your friend did a good job.
அரசாங்கம் தன் அடிப்பொடிகள் செய்யும் நில ஆக்கிரமிப்புகளை தடுத்து நிறுத்தாதவரை இதற்கு விடிவில்லை. இலியாஸ் வாழ்க!!
//ஹிஹி! ஒரு பிரபல பதிவர் இந்த பிரபலமாகாத சின்னபையனைப் பார்த்து நீ வேலை வெட்டியில்லாத வெட்டி ஆபிசர்!பதிவு போட்டு குரூப்பா கும்மியடிப்பே...! உன் பதிவ நான் படிக்க மாட்டேன் அப்படின்னு சொல்லிட்டாரு....//
Who is that Prabalam???
இலியாஸ் அவர்களின் போன் என் : 9344409263
இவரைப் போன்றவர்களால் தான் இன்னும் நாட்டில் விவசாயம் இருக்கிறது!
Post a Comment