எச்சரிக்கை பன்றி காய்ச்சல்(Flu A H1N1)

>> Sunday, April 15, 2012


ப்ளு காய்ச்சல் போன்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டு அவர்களை கீழ்கண்ட வகைகளாக பிரிக்கப்படவேண்டும்.

வகை-A


 1.  மிதமான காய்ச்சலுடன் இருமல் தொண்டை வலி அதனுடன் சேர்ந்து உடம்புவலி தலைவலி, வாந்தி பேதி நோயாளிகள் இந்த வகையில் அடங்கும்.
 2. மேற்குறிப்பட்டுள்ள அறிகுறிகளுக்கு டாமிப்ளு மாத்திரை தேவையில்லை. அறிகுறிகளுக்கு ஏற்றவாறு சாதாரண மாத்திரைகளே போதுமானது.
 3. மேலே குறிப்பிட்டள்ள அறிகுறிகள் மேலும் மோசமடைகிறதா என 2 நாள் கழித்து மீண்டும் மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.
 4. இது போன்று அறிகுறியுள்ள நோயாளிகளுக்கு பரிசோதனை செய்ய தேவையில்லை.

வகை-B


 1. வகை A-வில் குறிப்பிட்டுள்ள அறிகுறியுடன் மேலும் அதிக்காய்ச்சல் மோசமான தொண்டை வலி இருந்தால் அவர்களை வீட்டில் தனி அறையில் வைத்து கவனத்துடன் பாதுகாக்கபட வேண்டும்.
 2. வகை A-வில் குறிப்பிட்டுள்ள அறிகுறியுடன் கீழ்கண்ட பிரிவினருக்கு டாமிப்ளு மாத்திரை அளிக்க வேண்டும்.

 •  5வயதிற்குட்பட்ட குழந்தைகள்
 •  கருவுற்ற தாய்மார்கள்
 • 65 வயதை கடந்த முதியவர்கள்
 • நுரையீரல் இருதய கோளாறு, கல்லீரல் கோளாறு
 • சிறுநீரக கோளாறு, சர்க்கரை வியாதி
 • நரம்பு தளர்ச்சி, புற்றுநோய் மற்றும் எச்.ஐ.வி(HIV)

 1.  இது போன்ற அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்கு HIN1 பரிசோதனை தேவையில்லை.
 2. மேலே குறிபிட்டுள்ள இந்த வகையான அனைத்து நோயாளிகளுக்கும் வீட்டிலேயே தனி அறையில் பாதுகாப்பாக கவனிக்கப்படவேண்டும். மேலும் வெளிநபர்களோ அல்லது வீட்டில் உள்ள இதர நபர்களோ அவருடைய அறைக்கு செல்வதை தவிர்க்கவும்.

வகை-C

மேற்குறிப்பிடுள்ள வகையான A மற்றும் B –ல் உள்ள அறிகுறிகளுடன் மூச்சு தினறல், நெஞ்சு வலி, மயக்கம், இரத்த அழுத்தம் குறைதல், சளியுடன் கூடிய இரத்தம், நகத்தில் நீலநிற மாற்றம் ஏற்படுதல், குழந்தைகள் உணவு உண்ண மறுத்தல், அசாதாரண நிலையில் அழுகை போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு HIN1 பரிசோதனை செய்து டாமிப்ளு சிகிச்சை அளித்து தொடர் நடவடிக்கை எடுக்கலாம்

பன்றிக்காய்ச்சல் (Flu A H1N1)

பன்றிக்காய்ச்சல் (Flu A H1N1)எச்சில் மற்றும் சளி மூலம் மனிதனிமிருந்து மனிதனுக்கு அதிகப்பட்சமாக 2-3 மீட்டர் தூரத்திற்கு பரவக்கூடியது. நேரிடையாக பன்றிகள் மூலம் பரவுவது இல்லை.

பன்றி காய்ச்சல் அறிகுறிகள்

முதல் 3 நாட்களுக்கு ஏற்படும் ஆரம்ப அறிகுறியான தொடர் காய்ச்சல் (102 டிகிரிக்கு மேல்) தும்மல், மூக்கில் நீர்வடிதல், இருமல், தொண்டைவலி மற்றும் எரிச்சலுக்கு மருத்தவ சிகிச்சைக்கு முழு நிவாரணம் அளிக்காத நிலையில் தொண்டை தடவல்(Throat Swab) பரிசோதனை செய்து கொள்ளலாம்.

4 நாட்களுக்கு பின் தோன்றக்கூடிய நிமோனியா, மூச்சு திணறல், வயிற்றுப்போக்கு, வாந்தி, சோர்வு, தோள் தடிப்புகளுக்கு மருத்துவ பரிசோதனை/ஆலோசனை படி  டாமிப்ளு சிகிச்சை அளிக்க வேண்டும்.

சாதரண ஜலதோசம் (Seasonal Flu)

ஆரம்ப அறிகுறியான தும்பல், இருமல், தொண்டை கட்டுதல் சாதரண சிகிச்சையில் குணமடையும்.

சிகிச்சை அளிக்கும் இடங்கள்

பரிசோதனையில் H1N1 உறுதி செய்தபின் டாமிப்ளு மாத்திரைகள் அனைத்து அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும்

பன்றி காய்ச்சலை தவிர்க்க


செய்ய வேண்டியவை
செய்யகூடாதவை
1.இருமல் தும்மலின் போது கைக்குட்டை திசுப்பேப்பர் மூலம் முகத்தை மூடுதல்
1.பொது இடங்களில் இருமுதல், தும்முதல் துப்புதல்
2.மூக்கு, கண்கள், வாய்தொடுவதற்கு முன்பும் பின்பும் கைகளை சுத்தமாக கழுவுதல்
2.மேற்கூறிய அறிகுறி உள்ளவர்களிடம் கை குலுக்குதல் அணைத்தல், அணைத்தல் முத்தமிடுதல்.
3.கூட்டமான இடங்களில் பஸ், இரயில், மார்கெட் மருத்துவமனை, சினிமா தியேட்டர்களில் தும்மல், இருமல் உள்ளவர்கள் முககவசம் அணிந்து செல்லுதல்
3.அறிகுறி உள்ளவர்களிடம் ஒரு மீட்டர் தூரத்திற்குள் நின்று பேசுதல்.
4.மிதமான சுடு நீருடன் உப்பு கலந்த கரைசலை பயன்படுத்தி ஓரிரு நிமிடங்கள் வாய் கொப்பளித்து தொண்டையையும் தூய்மையான நீரினால் மூக்கு துவாரங்கள், கண்கள் மற்றும் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல்
4.மருத்தவரின் ஆலோசனையில்லாமல் மருந்துகளை உட்கொள்ளுதல்
5. வெதுவெதுப்பான குடிநீரை அடிக்கடி பருகுதல்
5.சாதரண காய்ச்சல் இல்லாத ஜலதோஷத்திற்கு உடனடி மருத்துவ சிகிச்சை பெற்று குணமடையாமல் போனால் பன்றிக் காய்ச்சல் என்ற பீதியுடன் பரிசோதனைக்கு அணுகுதல்.
6.குளிர் சாதன பெட்டிகளை வாரம் ஒருமுறை கிருமி நாசினியால் சுத்தம் செய்தல்
6.போலியான(அரசு அங்கீகாரம் பெறாத) இடங்கள் நபர்களிடமிருந்து மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை பெறுதல்

பரிசோதனை செய்யும் இடங்கள்

 1. தொண்டை தடவுதல்(Throat swab) மற்றும் இரத்தபரிசோதனை கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இலவசமாக செய்து கொள்ளலாம்
 2. கோவையிலுள்ள தனியார் ஆய்வுக்கூடங்களான மைக்ரோ லேப்(Micro lab)மற்றும் இம்மினோ லேப்பில் (Immuno lab) கட்டணம் செலுத்தி செய்து கொள்ளலாம்.

நன்றி : தமிழ்நாடுஅரசு மருத்துவதுறை சார்பில் கொடுக்கப்பட்ட அறிவிப்பு 

27 comments:

வீடு சுரேஸ்குமார் 12:35:00 AM  

உங்கள் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து கொடுத்துவிட்டீர்களா?

மகேந்திரன் 12:53:00 AM  

வணக்கம் நண்பரே,
இன்றைய சூழலில் அவசியம்
தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு
நோயின் தன்மையை
விழிப்புணர்வு ஊட்டும் வகையில்
பகிர்ந்தமைக்கு நன்றிகள் பல...

நிரஞ்சனா 1:15:00 AM  

எல்லாரும் அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய ஒரு விஷயத்தைப் பகிர்ந்திருக்கீங்க பிரதர்! Thanks!

NAAI-NAKKS 1:33:00 AM  

Paarrrraaaa......
Hum.....
Ippa...
C&P......
Appa padikkuren.....

NAAI-NAKKS 1:34:00 AM  

Paarrrraaaa......
Hum.....
Ippa...
C&P......
Appa padikkuren.....

மனசாட்சி™ 1:50:00 AM  

நல்ல அறிய பல தகவல்.. நன்றி

மனசாட்சி™ 1:51:00 AM  

அது சரி எப்ப இருந்து சொல்லவே இல்ல....அஞ்சலியோடு நல்ல ஜோடியப்பா....ம்ம்

நடத்துங்க

"என் ராஜபாட்டை"- ராஜா 2:47:00 AM  

தேவையான நேரத்தில் மிக பயனுள்ள பதிவு .. நன்றி

"என் ராஜபாட்டை"- ராஜா 2:48:00 AM  

நடிகர் ஜெய் உங்களை அருவாளுடன் தேடுகின்றர்ராம் ....

"என் ராஜபாட்டை"- ராஜா 2:48:00 AM  

//
Blogger வீடு சுரேஸ்குமார் said...

உங்கள் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து கொடுத்துவிட்டீர்களா?
//

கொடுத்துடோம் ..

"என் ராஜபாட்டை"- ராஜா 2:49:00 AM  

//
Blogger வீடு சுரேஸ்குமார் said...

உங்கள் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து கொடுத்துவிட்டீர்களா?
///

உங்க பேரனுக்கு குடுத்தாசா ?

வீடு சுரேஸ்குமார் 3:01:00 AM  

@மகேந்திரன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மகேந்திரன் அவர்களுக்கு...

வீடு சுரேஸ்குமார் 3:04:00 AM  

@நிரஞ்சனா
எல்லாரும் அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய ஒரு விஷயத்தைப் பகிர்ந்திருக்கீங்க பிரதர்! Thanks!/////

வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிங்க...!

வீடு சுரேஸ்குமார் 3:05:00 AM  

@NAAI-NAKKS
Paarrrraaaa......
Hum.....
Ippa...
C&P......
Appa padikkuren.....///////

மெதுவாவே வாங்க..சார்!

வீடு சுரேஸ்குமார் 3:07:00 AM  

@மனசாட்சி™
மனசாட்சி™ said...
நல்ல அறிய பல தகவல்.. நன்றி///

நன்றி தல...

அது சரி எப்ப இருந்து சொல்லவே இல்ல....அஞ்சலியோடு நல்ல ஜோடியப்பா....ம்ம்

நடத்துங்க/////

எங்க தலைவியுடன் அப்ப இருந்தேதான் இது நடக்குது...ஹிஹி!

வீடு சுரேஸ்குமார் 3:12:00 AM  

@"என் ராஜபாட்டை"- ராஜா

தேவையான நேரத்தில் மிக பயனுள்ள பதிவு .. நன்றி////

வருகைக்கு நன்றி...!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

நடிகர் ஜெய் உங்களை அருவாளுடன் தேடுகின்றர்ராம் ..../////////

எதுக்கு இளனி வெட்டி கொடுக்கவா...?
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

//
Blogger வீடு சுரேஸ்குமார் said...

உங்கள் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து கொடுத்துவிட்டீர்களா?
//

கொடுத்துடோம் ..///

அப்படியா சந்தோசம்....
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

//
Blogger வீடு சுரேஸ்குமார் said...

உங்கள் குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து கொடுத்துவிட்டீர்களா?
///

உங்க பேரனுக்கு குடுத்தாசா ?/////

ம் எங்க அப்பாவோட பேரனுக்கு கொடுத்தாச்சுங்க பெரியவரே...!

விச்சு 3:42:00 AM  

சுரேஷ் அருமையான தகவல் எளிமையான அட்டவணையோடு சூப்பர்..

Esther sabi 4:07:00 AM  

வணக்கம் சுரேஷ் அண்ணா என் முதல் வருகை.. அவசியமான தகவல்..

மயிலன் 5:41:00 AM  

நல்ல தகவல்.. சாமானியர்களுக்கு புரியும் வகையில் எளிமையாய் சொல்லியுள்ளீர்கள்...
வார்டுல ஒரு பேஷன்ட் இருக்காரு.. நல்ல முன்னேற்றத்துடன்...:)

ஆளுங்க (AALUNGA) 12:04:00 PM  

நல்லதொரு தகவல் வழங்கி உள்ளீர்கள். நன்றி!

Vairai Sathish 8:02:00 PM  

தேவையான தகவல் நண்பா

பாலா 1:22:00 AM  

இந்த அறிகுறியை எல்லாம் படிக்கும்போது எனக்கும் அவை இருப்பது போல தோன்றுகிறது, இது உண்மையா பிரமையா?

fcrights 9:01:00 AM  

அவசியமான நல்ல விழிப்புணர்வுள்ள பதிவு
இதையும் கொஞ்சம் பார்க்கலாமே நண்பர்களே

மக்கள் உரிமை மையம் என்ற நமது இயக்கம் மக்களுக்காக, மக்களின் அடிப்படை உரிமைகளைக் காப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஓர் இயக்கம். உணவு, உடை, உறைவிடம், கல்வி மற்றும் மருத்துவம் இவைகளே ஒரு மனிதனின் வாழ்வாதாரமாக, அடிப்படை உரிமைகளாக இன்று அனைத்து உலக நாடுகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தகைய அடிப்படை உரிமைகள் இன்று அனைத்து தரப்பு மக்களுக்கும், அவர்கள் எந்த சாதி, மத, இன,மொழியினை சார்ந்தவர்களாயினும் மறுக்கப்படுகின்றது. மேலும் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் அனைத்தும் இன்று வர்த்தகமாக மாறி விட்ட சூழலில் அவை தரம் குன்றிய நிலையிலோ அல்லது பொருள் படைத்தவர்களுக்கு மட்டும் என்ற நிலையிலோ தான் அவர்களை சென்றடைகிறது.

கலப்படம் மிகுந்த உணவுப்பொருட்கள், சுகாதரமற்ற சுற்றுப்புறம், எதிர்கால வாழ்விற்கு உதவாத கல்விமுறை, புதிய நோய்களை உருவாக்கும் மருத்துவமுறை இவைகளாலும், இது தொடர்பான துறைகளில் ஈடுபட்டுப் பொருளீட்டுவதையே குறிக்கோளாகக் கொண்ட சுயநல கூட்டங்களாலும் மக்கள் இன்று பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

பல்வேறு வழிகளிலும், தங்களுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இத்தகைய சுயநலவாதிகளை எதிர்த்துப் போராட இயலாத வாழ்க்கைச் சூழ்நிலைகளிலும், போராட வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாத நிலையிலும் தான் இன்று நம் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

மக்கள் தங்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளைப் பற்றியும், அவற்றை தரமான வகையிலே பெறுவதற்கு வழிவகை செய்யும் சட்டங்கள் பற்றியும், அவற்றில் குறைகள் இருப்பின் அக்குறைகளைக் களைவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் பற்றியும் அறியாமலிருப்பதே இந்நிலை தொடர்ந்து கொண்டிருப்பதற்கான காரணங்களாகும்.

மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும், அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்து தர வேண்டிய கடமையை மேற்கொண்டிருக்கும் அரசு நிர்வாகமும், ஆட்சி நிர்வாகமும் இந்த அவல நிலையை மாற்றுவதற்குப் பதிலாக, தம்மை மக்களின் எசமானர்களாகக் கருதிக்கொண்டு, அவர்கள் மீது தம்முடைய அதிகார பலத்தைப் பிரயோகப்படுத்துவதும், எங்கும் விதிமீறல் எதிலும் லஞ்சம் என மக்களைப் பெரும் துன்பத்திற்கு ஆளாக்குகின்றனர்.

இவ்வாறாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, தங்களின் நிலையினைப் பற்றியும், தம் நாட்டின் நிலையினைப் பற்றியும் விளக்க வேண்டிய, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய செய்தித்துறையும், ஊடகத்துறையும் செயலிழந்த நிலையில் உள்ளன.

ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்வுகளை, ஒரு செய்தியாக தருவதோடு செய்தித்துறை தன்னுடைய வேலையை நிறுத்திக் கொள்கின்றது. மேலும் தனிநபருக்கோ, ஒரு அமைப்பிற்கோ அல்லது ஒரு அரசியல் கட்சித் தலைமைக்கோ ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, நிகழ்வுகளின் உண்மைத் தன்மையை சீர்குலைத்து ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கின்றது.

இது போன்றே திரைத்துறையும், நல்ல பல முற்போக்கு கருத்துகளையும்,நம் முன்னோர்களின் நாகரிகம் மிகுந்த, பண்பு மிகுந்த வாழ்க்கை முறைகளையும் நம் கண் முன்னே காட்சிகளாக கொடுத்துக் கொண்டிருந்த தன் உயர்ந்த நிலையினின்று மாறி, இன்று வெறும் காதல், வன்முறை, ஆபாசம் மற்றும் அர்த்தமற்ற நகைச்சுவை என இவற்றை மட்டும் கொண்டு, நம் இளைஞர் சமுதாயத்தை நல்ல சிந்தனைகளிலிருந்தும், நற் செயல்களிலிருந்தும் விலக்கி அவர்களுக்கு ஒரு தவறான பாதையைக் காட்டி கெடுத்துக் கொண்டிருக்கின்றது.

சீரழிவான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நம் நாட்டைச் சீர்படுத்தவும், பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கும் நம் நாட்டு மக்களைப் பாதுகாக்கவும், அவர்களை அந்நிலையிலிருந்து மீட்டெடுக்கவும், அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாம் அனைவரும் சாதி, மத, இன, மொழி என எந்த விதமான பாகுபாடுகளுமின்றி ஓரணியில் திரண்டு, பாதிக்கப்பட்டவர்க்குத் தகுந்த நியாயம் கிடைக்கவும், பாதிப்பை ஏற்படுத்தும் கயவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்கவும் சட்டத்தை துணையாகக் கொண்டு, நியாயமான வழியில் செயல்படவேண்டியது அவசியமாகின்றது.

இத்தகைய அவசியமான சூழ்நிலையில், இதனையே தன்னுடைய உயரிய நோக்கமாகக் கொண்டு, மக்கள் உரிமை மையமும் அதனுடைய தோழமை இயக்கமான உட்டோபியன் சட்ட மையமும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவ்விரு இயக்கங்களிலும் மருத்துவர்கள்,வழக்கறிஞர்கள்,மாணவர்கள்,இளைஞர்கள்,அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும், தங்களால் இயன்ற வகையில், இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
for readmore www.fcrights.in

Anonymous,  5:30:00 PM  

anaivarukkum payanulla padhivu nandri
surendranath1973@gmail.com

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP