ஒரு கல் ஒரு கண்ணாடி....முன்னாடி பின்னாடி

>> Monday, April 16, 2012SMS, பாஸ் என்கிற பாஸ்கரன், படங்களை இயக்கிய ராஜேஸ் இயக்கிய படம்தான் ஒரு கல் ஒரு கண்ணாடி. இயக்குனர் Ok Ok என்று எதற்க்கு வைத்தார் என்று எனக்கு தெரியலை ஆனா படம் எப்படி என்று கேட்டா Ok Ok பார்க்கலாம் என்று சொல்லும் வகையில் இருக்கிறது. கதை என்று ஒன்றும் இல்லை ஒன் லைன் கதைதான் 

ஏர்ஹோஸ்டல் பயிற்சியில் இருக்கும் ஹன்சிகாவை கல்லூரில் படிக்கும் உதயநிதி ரோட்டில் பார்த்துவிட்டு துரத்தி துரத்தி லவ்வுகிறார், தன் காதலை சொல்லிய பிறகும் இடைவேளைக்கு பிறகு வரை ஹன்சிகா மறுக்க, கடைசியில் படத்தை முடிக்க வழிதெரியாமல் ஓகே சொல்லுகிறார்,வழக்கம் போல சந்தானம் சொதப்ப காதல்பிரிய கிளைமாக்ஸில் வழக்கம் போல ஆர்யா வந்து கல்யாணத்தை நிறுத்துகிறார், காரணம் வழக்கம் போல மாப்பிளை ஒரு பெண்ணை ஏமாற்றிவிடுகிறார், வழக்கம் போல வேறு வழியில்லாமல் உதயநிதியிடம் வந்து "நீங்க லைசன்ஸ் இல்லாம வண்டி ஓட்டலாம்" என்கிறபோது அப்பாடா படம் முடிஞ்சிருச்சா? என்கிற மாதிரி இருக்கிறது.

சந்தானம் காமடியில் படத்தை கொண்டு போயிருக்கிறார். அதனால் சந்தானம் இல்லாத சீன்களில் படம் தொய்வு அடைகிறது. ஒரு நாடக தன்மையோடு படம் இருப்பதை மறுக்க முடியாது. “ஆனால் சிரிப்பதற்கு நிறைய” விழுந்து விழுந்து சிரித்து விட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் ஏனோ எதிர்பார்த்தது இல்லை என்கிற ஏமாற்ற மனநிலையே மிஞ்சுகின்றது. அதுவும் பிளைட் காமடியும் சரக்கு அடிக்கும் காமடியும் செமசெம....... புதிய அறிமுகமான உதயநிதி முதல் படத்திலேயே இயல்பாக நடித்துள்ளார், இயக்குனரின் திறமையா? இல்லை இவரின் திறமையா? என அடுத்த படங்களில் தெரிந்து விடும். ஜீவா இவருக்கு டப்பிங் கொடுத்து இருப்பாரோ? என்கிற சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. சந்தானத்திக்கு அஞ்சு ரூபாய் பெல்ட்டும் டைட்டான திக்பிக் லோக்கல் பனியனும் கொடுத்து வெளிச்சத்தை குறைத்து' இவருக்கு கட்டம் போட்ட வுவன் சட்டையும் கொடுத்து பிரைட் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள் ஆனாலும் சந்தானமே மிளிர்கிறார்.

சந்தானத்தின் ஜோடியாக வரும் டிவி நடிகை அத்திபூக்கள் நாடகத்தில், ஒரு சில காமடி சீரியல்களில் தலைகாட்டியது, 'பாப்பா நல்ல பிகர்தான்' காமடிக்காக கெடுத்து வைத்திருக்கிறார்கள், ஆனால் கலக்கியிருக்கு இனி வெள்ளி திரையில் அடிக்கடி காணலாம். சந்தானத்தை பார்த்து "ரொமாண்டிக் லுக்" விடுவதும் ஸ்டைலாக நடப்பதும் செமசெம....குரலும் கட்டையான கனீர் குரல்தான், ஆச்சி, சரளாக்கா மாதிரி, ஒரு ரவுண்டு வரும் என்றே நினைக்கிறேன்.

ஹன்சிகா மோத்வானி 'நீ எந்த கடையில அரிசி வாங்குற....என்கிற நிலமையில இருந்து' "பீசா" வாங்குற எனக் கேட்கும் நிலமையில் இருக்கிறார். அதனால் படத்திலேயே நக்கல் அடித்து நம்மை அந்த வேலையில் இருந்து கழட்டி விட்டுவிட்டார்கள். ஆனாலும் ஒருத்தர் ஆண்டி மாதிரின்னு சொல்லுறத கேட்டு நிறைய கண்மணிகள் அழுதார்கள். மைதா மாவில் பாதாம்பால் ஊற்றி செய்த பால்கோவா மாதிரி வருது பாப்பா. ஏர்ஹோஸ்டல் சீன்களில் சரோஜாதேவி மாதிரி லிப்ஸ்டிக் போட்டு பயமுறுத்துறாங்க செவப்புக்கே எதுக்குடா செவப்பு பெயிண்ட் ஏண்டா அடிக்கிறீங்க....அப்படின்னு கத்தலாம் போல் இருக்கிறது. தனக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துவிட்டு நிறைவு செய்திருக்கு அம்மணி...ஓகே....ஓகே....

அம்மாவாக வரும் சரண்யா மிக எதார்த்தமான படிப்பறிவு இல்லாத அம்மான்னா சரண்யாவ கூப்பிடு என்கிற மாதிரி டெம்ளட் அம்மா, முகத்தை சுழிச்சு அழுது சிரிச்சு தான் ஒரு திறமையான நடிமை என காட்டுகிறார். அழகம்பெருமாள் டம்மி அப்பாவாக வருகிறார் ஒரு சில சென்டிமெண்ட் காட்சியில் மனுசன் வழக்கம் போல....கசகசவென்று நடிகர்கள் இல்லாமல் ஒரு சில நடிகர்களை வைத்தே படத்தை முடித்துவிட்டார்கள் படம் முழுவதும் ஆக்கிரமிப்பது சந்தானம், உதயநிதி, ஹன்சிகா மூவர் கூட்டணி மட்டுமே..

படம் பார்க்கலாமா? என்கிற கேள்விக்கு மொக்கை என்று சொல்லுகிற மாதிரி இல்லை! சில பல குறையிருந்தாலும் சும்மா டைம் பாஸ்க்கு பார்க்கலாம். மோசமில்லை குடும்பத்துடன் குழந்தைகளுடன் பார்க்கலாம்.இயக்குனர் ராஜேஸ்க்கு...

மச்சி! உங்க பேட்டனை மாற்றுங்க....கடைசியில லாலாலாலா..ன்னா விக்கிரமன் மாதிரி உங்க மேல முத்திரை குத்திருவாங்க, சந்தானம் இல்லையினா ராஜேஸ் இல்லையின்னு....ஓகேவா மச்சி!
நண்பேன்டா...!

15 comments:

பாலா 8:18:00 PM  

வெளிப்படையான விமர்சனம். சந்தானம்தான் உண்மையான ஹீரோ. விமான காட்சியில் பின்னி எடுத்திருப்பார்.

மனசாட்சி™ 8:18:00 PM  

இப்ப என்ன பார்க்கணும்..... அம்புட்டுதானே சரிங் நண்பரே

Esther sabi 8:56:00 PM  

படம் என்னும் பாக்கல. நீங்கள் கூறியது போல் ராஜேஸ் சந்தானத்தை வைத்தே படத்தை ஓட்டுகிறார் இது நிலைக்குமா என்பது சந்தேகம் சுரேஸ் அண்ணா.

மோகன் குமார் 8:58:00 PM  

யோவ் என்னையா இது அக்கிரமமா இருக்கு அஞ்சலி போட்டோ போட்டு பக்கத்திலே உம்ம போட்டோவா? பிச்சுடுவேன் பிச்சு இதில் பாலையா " நல்ல ஜோடி" அப்படின்னு வேறு சொல்றார் மாத்திடுங்க. இல்லாட்டி அறப்போராட்டம் வெடிக்கும் :))

மோகன் குமார் 9:01:00 PM  

// சந்தானத்தின் ஜோடியாக வரும் டிவி நடிகை அத்திபூக்கள் நாடகத்தில், ஒரு சில காமடி சீரியல்களில் தலைகாட்டியது//

ஒரு சீரியல் விட்டு வைக்கிறதில்லையா?

**
ராஜேஷ் பேட்டன் மாற்ற மாட்டார் என நினைக்கிறேன் இது தான் அவருக்கு successful பேட்டன். சந்தானம் இல்லாமல் படம் எடுத்து இவர் ஓட வைப்பாரா என்பது ??

நிரஞ்சனா 9:04:00 PM  

Good Comedy Filmன்னு சொல்றீங்க... சில பேர் சீரியஸா எடுக்கற படமே காமெடி ஆகும் போது காமெடிக்குன்னு வர்ற படத்தை நான் ஆதரிப்பேன்பா. Thanks for a nice review Fried!

Kumaran 9:16:00 PM  

படம் சந்தானத்தோட காமெடிக்காக பார்க்கலாம் போல..அதுக்கென்ன பார்த்திட வேண்டியதுதான்.
ரசித்தவற்றை குறைகளை ரொம்பவும் தெளிவாக பதிவு செய்திருக்கீங்க சகோ..அருமை.மிக்க நன்றி.

கணேஷ் 9:30:00 PM  

அழகான விமர்சனம் சுரேஷ். பல பேர் ப்ளாக்ல சினிமா விமர்சனம் படிக்கறப்ப ’சந்தானம் காமடி படத்தை காப்பாத்துது’, ‘சந்தானம் தான் ரியல் ஹீரோ’ன்னுல்லாம் பாக்கறேன். எல்லாருமா உசுப்பேத்தி அவரை ஹீரோவாக்கி கவுத்துடாம இருக்கணும். காமெடி நல்லாருக்குன்னு சொன்னதுக்காக ஒரு தடவை பாக்கறேன்..,

Yoga.S.FR 11:57:00 PM  

வணக்கம் ஹவ்ஸ் ஓனர்,சார்!"நடு" நிலையோட விமர்சிச்சிருக்கீங்க!நல்லாருக்கு,அட்வைசும் கூட!பொண்டு புள்ளைங்களோட பாக்கக் கூடிய படம்.

மதுமதி 12:29:00 AM  

இயக்குனர் ராஜேஷ்க்கு சொன்னது 100/100 உண்மை..விமர்சனம் சிறப்பு..

மகேந்திரன் 1:36:00 AM  

ஒருசில நகைச்சுவை காட்சிகள் பார்த்தேன் ..
சந்தானம் தான் படத்தின் ஹீரோ போல தோணுது...
நல்ல விமர்சனம் நண்பரே...

T.N.MURALIDHARAN 7:34:00 AM  

நகைச்சுவை விரும்பிகளுக்கு ஏற்ற படம். கவிதை நடையில் விமர்சனம் காண என் வலைப்பதிவிற்கு வருகை தரவும்

ஆளுங்க (AALUNGA) 8:44:00 AM  

ஓகே.. ஓகே!!
போய் படம் பார்க்கிறேன்!

More Entertainment 8:28:00 AM  

hii.. Nice Post

Thanks for sharing

Best Regarding.

More Entertainment

For latest stills videos visit ..

www.chicha.in

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP