எங்க தலை யாரு தெரியுமா?

>> Wednesday, April 11, 2012


ணக்கம் மக்கள்ஸ் நான் சின்ன வயசுல இருந்தே செமையான ஆளு! எனக்குள்ள ஒரு வுட்டாலக்கடி சக்தி இருக்கு! அது என்னான்னு சொல்றேன்... கேளுங்க ஒரு முறை கிட்டிபுல் விளையாடிட்டு இருந்தேன், நான் அடிச்ச அடியில கிட்டிபுல்லு ஒரு காக்காய்(காகம்) மேல லைட்டா ஒரசிருச்சு காண்டான காக்கா முடியும், மூளையும் இல்லாத என் மண்டையை கொத்துச்சு அடிங் ங்கொய்யால இன்னா தெகிரியம் ஒனக்கு அப்படின்னு சொன்னென் காக்கா எதிர்ல இருந்த பில்டிங்ல மோதி தன் மூக்கை ஒடைச்சி அநியாயமா செத்துப்போச்சு.


செத்த பாம்புடன் நான்!?

ஒருக்கா பாம்பு அனகோன்டா சைஸ் இருக்கும் என்னை கடிச்சிருச்சு! எங்க அப்பாரு எம்மவனையே கடிச்சன்னு தடிய எடுத்துட்டு வர்றாரு பாம்பு வின்னர்
படம் வடிவேலு கணக்கா இல்லாத காலை பரப்பிக்கிட்டு செத்துக் கிடக்கு, அப்புறம் தேளு ஒன்னு என்னை கடிச்ச ஸ்பாட்லியே கண்ணீர் வுட்டு அழுதபடியே செத்துப்போச்சு! அதுகப்றம் எங்க அப்பாரு,வாத்தியாரு எல்லாரும் குச்சியிலதான் அடிப்பாங்க....அதுவும் பத்து அடி குச்சியில தூரமா நின்னுகிட்டு.அம்புட்டு டேன்ஜரான ஆளு நானு!

அப்புறம் என் அருமை பெருமையெல்லாம் தெரிஞ்சு இந்திய அரசு என்னை வேலைக்கு வெச்சிக்கிச்சு....என் வேலை எதிரி நாட்டுக்காரன் குரல்வளையை
கடிக்கிறது!? நல்லா கடிச்சா செத்துபூடுவான்! லைட்டா கடிச்சா மெண்டல் ஆயிருவான். இப்ப போர் எதுவும் இல்லாததலால நான் உகாண்டாவுக்கு போயிட்டேன் அங்க லைப் டெய்லி ஒரு ஆப்பு, ஆம்லெட் உகாண்டா பிஏ என்று ஜாலியா போயிட்டு இருக்கிறது. 

பிஏவுடன் ஜல கிரீடையில் நான்!?

சரி நம்ம நாட்டுக்கு போயி ரொம்ம நாள் ஆச்சு போலாம் என்று முடிவு எடுத்தேன். சுனாமி வந்திருச்சு எனக்கும் இதுக்கும் சம்மதம் இருக்கு என்று வரவேண்டாம் என்று நம்மை மொம்மை பிரதமர் மெயில் அனுப்புகிறார் "யோவ்! இப்பத்தான் நான் செங்கலு சுண்ணாம்பு வெச்சு கூடங்குளம் ஒலை கட்டியிருக்க நீ வந்து எம் பொழப்புல ஒலை வெச்சிருவே போல...."அப்படின்னு இன்னா நியாயம் சார்..........! 

அது மட்டும் அல்ல அம்மா ஒரு மெயில் அனுப்பியிருக்காங்க "நீங்க வரவும் பிளீஸ்....! வந்தா சுனாமி வரும்! சுனாமிக்கு காரணம் விசயகாந்துன்னு அறிக்கை விட வசதியா இருக்கும் டீலா நோ டீலா...."இப்படியிருக்கு அம்மாவின் மெயில். அப்புறம் நம்ம பிளாக்கர்ஸ் நிறைய நண்பர்கள் மெயில் அனுப்பி தயவு செய்து வரவேண்டாம் என்று கெஞ்சியும் மிரட்டியும் மெயில் அனுப்பிறாங்க....ஆனாலும் நான் வருகிறேன்....! எதுக்கு வருகிறேன் தெரியுமா?

என் நண்பனை...! என் மாப்ளைய! ஒரு பிராப்பலம்! நீ வெட்டி ஆளு! வேலை வெட்டியில்லை (இவருக்கு ஏகப்பட்ட வேலை இருக்கிறது) ஸ்கைப்புல பேசுவீங்க...! போன்ல பேசுவீங்க....!ஒன்னா கூடி கும்மியடிப்பீங்க போங்கங்கோ! போக்கத்த பசங்களா! அப்படின்னு திட்டி புட்டாருங்க.....மனோ கெஞ்சியும் நான் இங்கு வருவதற்கு காரணம் 

அந்த பிராப்லத்தை லைட்டா குரல்வளையை கடிச்சு வைக்க போகிறேன்....இந்த பதிவுலகத்தை காக்க இதை தவிர வேறு வழியில்லை மக்களே! 
நான் இந்தியா வருகிறேன்! 
நான் இந்தியா வருகிறேன்!
நான் இந்தியா வருகிறேன்! 
இது அந்த பிராப்ல பதிவரின் ஆண்ட்ராய்டு மொபைல் மேலயும்.... மனோ அருவா மேலயும் சத்தியம்!


பிராப்ல பதிவரின் புதிய மொபைல்

15 comments:

வெளங்காதவன்™ 9:15:00 PM  

Vicky statement against Naai Nakks?

கணேஷ் 9:24:00 PM  

எதுக்கும் நான் கொஞ்சம் தள்ளியே நிக்கறேன் சுரேஷ்... ஹி... ஹி...

மனசாட்சி™ 10:50:00 PM  

உள்குத்து எப்பூடீ எல்லாம்......ம்

நடத்துங்க.....வேடிக்கை பாக்றேன்.

goundamanifans 11:22:00 PM  

'செத்த பாம்புடன் நான்'...இத்தனை கில்மா படம் பாத்தா பிறகுமா..!!

NAAI-NAKKS 11:35:00 PM  

வெளங்காதவன்™ said...
Vicky statement against Naai Nakks?//////

போயா......

NAAI-NAKKS 11:36:00 PM  

இவரு நம்ம....நம்பர் 1...யா....

NAAI-NAKKS 11:37:00 PM  

இன்னும் எதனை பேர்....
செத்த பாம்பை ....
அடிப்பீங்க......?????

கைப்புள்ள.....சிபி....

NAAI-NAKKS 11:38:00 PM  

இவரு ரொம்ப பிஸி....
போஸ்ட் கூட வேற யாராவது....தான் ...போடுறாங்க....

நாங்க எல்லாம் சும்மா....வெட்டி ஆபீசர் ....

விக்கியுலகம்,  4:42:00 AM  

மாப்ளை வந்திட்டே இருக்கிறேன் எங்காவது போயிடப்போறான் புடிச்சு வை வெங்காயம்.....குரல்வளையை கடிச்சு துப்புல எம் பேரை மாத்திக்கிறேன்.....ங்கொய்யால......

மயிலன் 7:52:00 AM  

கொஞ்ச நாள் கேப்ல ஏதோ நடந்திருக்கு ஒன்னும் புரியல... விக்கி, நக்ஸ் ப்லாகேல்ல்லாம் பாத்தா தான் புரியுமுன்னு நெனைக்கிறேன்...
ஆனாலும் தல... உங்க மொதல் இரண்டு பத்தி இன்ட்ரோ ஜூப்பரு....:)

"என் ராஜபாட்டை"- ராஜா 10:22:00 PM  

என்ன நடக்குது இங்கே ?

"என் ராஜபாட்டை"- ராஜா 10:23:00 PM  

//அந்த பிராப்லத்தை லைட்டா குரல்வளையை கடிச்சு வைக்க போகிறேன்....இந்த பதிவுலகத்தை காக்க இதை தவிர வேறு வழியில்லை மக்களே!
//
பதிவுலகை காக்க வந்த ரத்த காட்டெறியே ன்னு பேனர் வைக்கட்டா ?

தமிழ்வாசி பிரகாஷ் 12:48:00 AM  

ஊருக்கு வர்றவர செம ரகளையா தான் வரவேற்கரிங்க சுரேஷ்.

அன்பை தேடி,,,அன்பு 3:04:00 AM  

செத்த பாம்புடன் நான்,அது உண்மையிலே நீங்களா ?

ராஜி 4:07:00 AM  

அந்த பிராப்ளம் யாருன்னு எனக்கு தெரியும்.தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய
தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் சகோ.

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP