வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா!

>> Monday, April 30, 2012


ஒரு மழைக்காலத்தில் என் வீட்டு
முற்றத்தில் ஒதுங்கிய தாவனிக் குயிலே
உனைக் கண்ட நாள் முதல்..
சுற்றம்,சுகம் மறந்து
உன் வட்ட முகம் மட்டும்தானடி
எப்பொழுதும் என் மனதில்
முத்தமிழாய் இருப்பவளே!

ஆற்றில் நீரெடுக்க நீ
வரும் போது அச்சம்
ஏதுமின்றி என் காதலை
உரைத்தேன்...
பணம், பவுசு எல்லாம்
விட்டு விட்டு என்னோடு நீ
வரமுடியுமா? என வினவினாய்!
வறுமை பிடியில் நீயிருந்தாலும்
உன் தரம் தாழாத...குணம் கண்டு
வியந்துதான் போனேனடி!

உறவுகளா? உயிரான நீயா? என்று
இருதலைக் கொள்ளி எறும்பு போல்
நான் துடித்ததில் உறவுகளே
என்னை தின்றதடி...!
என்னுடல் மட்டுமே அங்கே
சென்றதடி!

மறுபடியும் பார்க்க மாட்டோமா....?
என ஏங்கிய எனக்கு!
உன்னைக் காணும் வாய்ப்பு வந்தது
ஓடோடி வந்தேன் கண்மணியே!
உன் வீடு தேடி விரைந்தேன்!
அடிப்பாவி மகளே!
மங்காத தங்கமே!
உனக்கு நானில்லை என அறிந்ததும்
உன்னை அழித்துக் கொண்டாயா?
ஐய்யோ! உன்னுடல் தின்ற
சாம்பலும் என்னைத் தூற்றுமே!

அழியாத நம் காதலும்...
ஆரத்தழுவிய அக்கணமும்...
மட்டுமே என் நினைவில் நிழலாக...
இப்பொழுதும் மிச்சம் இருக்கின்றதடி...!
மிச்சம் இருக்கின்றதடி...! கண்மணியே!
*********************************************************************************
சகோதரன் துஷ்யந்தன் அவர்களுடைய தொடராக வந்த "வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா!" நாற்று குழுமத்தில் மின்நூலாக வெளியிடப்பட்டது கதையை படித்தவுடன் ஒரு கனத்த சோகம் மனதில் ஏற்படுகிறது, சோகத்தில் எழுதிய கிறுக்கல்தான் இது 
*********************************************************************************
"வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா" தொடரின் மின்நூலை தரவிறக்க
கிளிக் செய்யவும்/ இணைய வேகம் குறைவாக இருப்பவர்கள் கிளிக் செய்யவும்.
*********************************************************************************
நிகழ்வில் கலந்து கொண்ட, கொள்ளாத அனைத்து தமிழ் உறவுகளுக்கும் நன்றிகள்!

இந்த படத்திக்கு வசனம் எல்லாம் தேவையில்லை......

>> Friday, April 27, 2012


கல..கல...கல்யாணம்!பதிவர்களின் அட்டகாசம்!

>> Thursday, April 26, 2012


ககபோ....!

நெல்லையை நோக்கிய ஒரு அழகான பயணம்!


நல்ல கோழி புடிப்பது எப்படி?

>> Monday, April 23, 2012


ணக்கம்,வந்தனம், நம்ஸ்கார் எப்படியிருக்கிங்க நேற்றைக்கு ஞாயிற்றுக்கிழமை எல்லாம் ஜாலியா தூங்கியிருப்பிங்க... சினிமா போயிருப்பிங்க.. கறி சமைச்சிருப்பிங்க சாப்பிட்டுருப்பிங்க, ஓகே..ஓகே...நான் நேற்றைக்கு வீட்டுல ஊர்ல இல்ல அதனால ஐயம் பேச்சிலர் இன்னும் ஒரு மாதம் நான் பேச்சிலர்..பேச்சிலர்...பேச்சிலர்...,ஜனகராஜ் கணக்கா எம் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா....எம் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு சந்தோசத்தில திக்குமுக்காடிட்டேன்.

"மை" திரைப்படம் வலிக்காமல் ஒரு சாட்டையடி...!

>> Sunday, April 22, 2012



அடுத்(த)து திரை விமர்சனம்

>> Friday, April 20, 2012


நாளையமனிதன்,அதிசயமனிதன், போன்ற பல திகில்,திரில்லர் படங்களை எடுத்த தக்காளிசீனிவாசன் நீண்டநாட்களுக்குப் பிறகு இயக்கிய ஒரு வித்தியாசமான திரில்லர் திரைப்படம்தான் அடுத்(த)து. இந்த படத்தில் ஸ்ரீமன், இளவரசு, வையாபுரி, ஆர்த்தி, மற்றும் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில்  சிவாஜிசந்தானம்அண்ணன்  நடித்துள்ளார். அது போக நாலு பிகருக இருக்கு....

திண்டுக்கல்'ல சரக்கடிச்சா திண்டிவனத்தில மப்பு ஏறும்..எப்படி?

>> Wednesday, April 18, 2012


வரு பெரிய அப்பாடக்கர் எல்லாம் கிடையாது, பதிவுல கிங்கெல்லாம் கிடையாது, அவர் பொழுது போகலையினா வெட்டக்கூடிய ஒரு ஆடு, ஆனா கொஞ்சம் நல்ல மனுசன் நிறைய கெட்டமனுசன். விவரம் இல்லாத ஆளு, பதிவுலகம் என்றால் என்ன அது எப்படிபட்ட இடம் என்று தெரியாத பொங்குறதெல்லாம் பீருன்னு  நினைக்கிற மனுசன் மொத்தத்தில் வில்லங்கமான அப்பாவி.

ஒரு கல் ஒரு கண்ணாடி....முன்னாடி பின்னாடி

>> Monday, April 16, 2012


எச்சரிக்கை பன்றி காய்ச்சல்(Flu A H1N1)

>> Sunday, April 15, 2012


ப்ளு காய்ச்சல் போன்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவரால் பரிசோதிக்கப்பட்டு அவர்களை கீழ்கண்ட வகைகளாக பிரிக்கப்படவேண்டும்.

எங்க தலை யாரு தெரியுமா?

>> Wednesday, April 11, 2012


ணக்கம் மக்கள்ஸ் நான் சின்ன வயசுல இருந்தே செமையான ஆளு! எனக்குள்ள ஒரு வுட்டாலக்கடி சக்தி இருக்கு! அது என்னான்னு சொல்றேன்... கேளுங்க ஒரு முறை கிட்டிபுல் விளையாடிட்டு இருந்தேன், நான் அடிச்ச அடியில கிட்டிபுல்லு ஒரு காக்காய்(காகம்) மேல லைட்டா ஒரசிருச்சு காண்டான காக்கா முடியும், மூளையும் இல்லாத என் மண்டையை கொத்துச்சு அடிங் ங்கொய்யால இன்னா தெகிரியம் ஒனக்கு அப்படின்னு சொன்னென் காக்கா எதிர்ல இருந்த பில்டிங்ல மோதி தன் மூக்கை ஒடைச்சி அநியாயமா செத்துப்போச்சு.

முள்ளும் புதர்களும் இருந்த காட்டை சோலை வனமாக்கிய மண்ணின் மைந்தன்

>> Monday, April 9, 2012


இது இந்தியா!

>> Sunday, April 8, 2012



ஒரு திருவிழாக் கூட்டத்தில்
குரங்கு பொம்மை வேண்டும் என்று 
அடம் பிடித்த குழந்தைக்கு 
பேரம் பேசி வாங்கிக் கொடுத்த 
ஏழைப் பெற்றோர்கள் 
விழா முடிந்து திரும்பிய போது
தூங்கிய குழந்தையின் கைகளில் இருந்து
தவறிவிழுந்த பொம்மையின் மீது 
பல வாகணங்கள் ஏறி நசுக்கிச் சென்றன...


குப்பையில் வீசியெறிந்த ஆரஞ்சுத் தோல்களைக்
கிளறி ஒட்டியிருக்கும் சில துண்டுகளைத்
தேடித் தின்றபடி சில சிறுவர்கள்...


நூறு ரூபாய் பணத்திக்காக பதினாறு
கிலோமீட்டர் சுமந்து வந்து
நகர தேனீர் கடைகளில் விறகு
விற்கும் மலைவாழ் மக்கள்...


நெரிசலான சாலையின் நடுவே இடைஞ்சலாய்
மேடைபோட்டு ஆளும்கட்சி 
அரசியல்வாதியொருவன்
குரைத்துக் கொண்டு இருந்தான்
இந்தியாவை ஒளிரச் செய்வோம் என்று.....

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP