தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ...?

>> Sunday, May 12, 2013


இது கொஞ்சம் அசைவப் பதிவு கலாச்சார காவலர்கள் அப்பீட்டு!


மீபமாக வெளிவந்து வெற்றிகரமாக?! ஓடிக்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் திரைப்படத்தில் நாயகனின் பெயர் "குஞ்சிரபாதம்" இந்த பெயர் அவனை சங்கடப்படுத்துகின்றது என்பதால் தன்னுடைய பெயரை 'ஹரிஷ்' என்று மாற்றிக் கொள்கின்றான். ஆனால் ஊர்ப்பெயரே இப்படி இருந்தால்...? அவனின் நிலை என்னவாகும்..! தன் பெயரை மாற்றிக் கொள்ளலாம் ஊர்ப்பெயரை மாற்ற முடியுமா..? "சின்னக்கவுண்டன்பாளையம்" என்கின்ற ஊர்ப் பெயரை கலைஞர் ஆட்சியில் "சின்னப்பாளையமாக" மாற்றியமைத்தது போல எதாவது நடந்தால்தான் உண்டு. ஆனால் அம்மா ஆட்சியில் மீண்டும் "கவுண்டன்" வந்து ஒட்டிக்கொண்டது வேறு விசயம். அத வுடுங்க அது அரசியல்! நாம மேட்டர்க்கு வருவோம்!

நான் வேலை பார்த்த ஒரு இடத்தில் செந்தில் என்று ஒருவர் இருந்தார். வேலை செய்யுமிடத்தில் தன்னுடைய ஊர் அரியலூருக்குப் பக்கத்துல ஒரு கிராமம் என்று சொல்லி வைத்திருக்கின்றார். அவருடைய கெட்ட நேரம் ஊர்க்காரர் ஒருவர் செந்திலைப் பார்க்க அலுவலகம் வர இருவரும் சூழல் மறந்து பேசிக்கொண்டிருந்ததை அனைவரும் கேட்டதில் அவர் ஊர்ப்பெயர் "குஞ்சுவெளி" என்பதை அறிந்துகொண்டார்கள்.

அடுத்தநாள் செந்திலை "ஏம்ப்பா... உங்க ஊர்காரங்க பேண்ட்ல ஜிப்பே வைக்க மாட்டாங்களா...? அதனாலதான் இப்படி ஊர்ப் பேரா..?'' என்று கேட்டு அவமாணப்படுத்தினார்கள். புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களிடம் நாங்க "சார்கிட்ட உங்க ஊர்ப் பேரு என்னன்னு கேட்டுட்டு வாங்க" என்று சொல்லிவிடுவோம். அவர்கள் கேட்டதும் செந்திலுக்கு கண்கள் சிவக்கும், பிறகென்ன எங்களை வண்டவண்டையாக திட்டுவது வாடிக்கையான வேடிக்கையாகிப் போனது. 

இதுல பாருங்க பாரதியார் பாட்டு எல்லாருக்கும் உத்வேகத்தைக் கொடுக்குன்னா, இவருக்கு கொலைவெறியக் கொடுக்கும்! ஆமா! இந்த பதிவு தலைப்பையே சாதாரண விசயத்திற்கு உதாரணமா சொல்லுவோம் எறும்பு கடிச்சிட்டாக் கூட "இங்க பாருங்க சின்ன எறும்பு! 70கிலோ ஆளை கடிச்சா என்ன பாடுபடுறோம்...!" அப்படிம்பாரு ஒருத்தர், உடனே இன்னொருவர் "தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ" அப்படிம்பார்.

"செந்தில் சார் நான் வண்டியில வந்துட்டு இருந்தேன், ஒரு கோழிக்குஞ்சு மேல வண்டிய விட்டுட்டேன்! அது கொடலே வெளிய வந்திருச்சு" இப்படின்னு சில பேர் வெறியேத்துவாங்க...! சில பேரு "அடேங்கப்பா எவ்வளவு பெரிய காக்கா குஞ்சு வெளிய" அப்படிப்பாங்க..! 

ஜூராசிக்பார்க் படம் பார்த்துட்டு வந்த டீக்கடைப்பையன் என்கிட்ட  கதை சொல்றான் "சார்....! ஒரு பெர்ர்ர்ர்ர்ர்ய டைனேசர் சார்...! முட்டை போடுது சார்..! அதிலிருந்து டைனேசர் குஞ்சு வெளிய வருது சார், "இல்ல தலைதானே முதல்ல வெளிய வரும்" இது நான். "சார் நான் குட்டின்னு சொன்னேன் சார்..!" கடுப்பான செந்தில் "டேய் ஓட்ரா....!" என்று அவன் பொடனியில் அடிக்க "போய்யா குஞ்சுவெளி" என்று சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.

இந்த நேரத்தில் வேலைக்கு வந்த மலையாளி பையன் உன்னிக்கிருஷ்ணன் வயநாட்டைச் சார்ந்தவன், தமிழ் சுத்தமாக தெரியாது தட்டுத் தடுமாறி கொஞ்சம் தமிழ் பேசக் கற்றுக் கொண்டான், எங்க ஆபிஸ்ல ஒரு டிவிஎஸ் 50, பஜாஜ் கம்பனியின் "Sunny" என இரண்டு வண்டி இருந்தது அதன் பெயரை அவன் எந்த வித கூச்சநாச்சமின்றி அழைப்பது செந்திலை கிண்டல் செய்வது போலவே இருந்தது.

எங்க ஓனர் சிவகாசிக்காரர் அவர் காலையில் வந்தவுடன் 'உன்னி'க்கு ஒரு வேலை கொடுக்கிறார், 

"அண்ணாச்சி நம்ம "Sunny" ரிப்பேர் ஆச்சு!  ஸ்டார்ட் ஆக மாட்டிங்குது!" 

"எண்ணை எரங்கலையோ நல்லா பாத்தியாடா..? டூப்பு அடைச்சிருக்கும்" 

"அண்ணாச்சி நல்லா ஞான் ஸ்டார்ட் செஞ்சும் ஆகலையில்லோ"

"கவுத்து படுக்கப் போட்டுப், பிறகு எடுத்து ஸ்டார்ட் பண்ணுடா ஆவும்" 

"ஆகலை அண்ணாச்சி "Sunny"-ய சர்வீஸ் விடணும்" 

"சரி அப்புறம் விட்டுக்கலாம் டிவிஎஸ் எடுத்துட்டு போ அப்படிங்கிறார்...." 

இந்த உரையாடல் ஆபிஸ்ல இருக்கிற ஆண்கள் விழுந்து..விழுந்து சிரிக்கிறாங்க....! பெண்கள் கூச்சத்தில் நெளியிறாங்க....! அதை கவனித்த அண்ணாச்சி "எலேய்...! இவனை மொதல்ல பஜாஜ் கம்பனி வண்டிப் பேரச் சரியா சொல்ல சொல்லுங்கடா...! எழவு எடுக்கவே கேரளாவில் இருந்து வராணுக" என்றார். ஆனால் அதே ஓனர் உன்னிகிருஷ்ணன் தம்பி குஞ்நுண்ணியையும் வேலைக்கு சேர்த்துக் கொண்டார் என்பது வேறு விசயம். இவங்க இரண்டு பேரையும் மாறி மாறி எல்லாரும் கூப்பிட வேலையை விட்டு ஓடியே போனார் செந்தில்.

"பிடிக்காத என்
பெயரை மாற்றிய
பின்னும்...
சாலையில்,
அஞ்சலகத்தில்,
வங்கியில்,
சிற்றுண்டிச் சாலையில்,
என யாராவது என் பெயரழைத்து
கூவும் போது
அனிச்சையாக
திரும்பிப் பார்க்கின்றேன்!"

7 comments:

Anonymous,  10:04:00 PM  

மூணாருக்கு பக்கத்துல ”குஞ்சுத்தண்ணி”ன்னு ஒரு ஊர் இருக்கு அங்க இருந்து சில பொண்ணுங்க எங்க காலாஜ்ல படிச்சாங்க டெய்லி காலைல அவ்ங்ககிட்ட


குஞித்தண்ணில தான் பொறந்தியா?

குஞ்சித்தண்ணி பிடிக்குமா?

குஞ்சித்தண்ணி குடிச்சியான்னு?

அவங்களுக்கே தெரியாம 3 வருஷம் ஓட்டுனோம்
=============================
வருண் பிரகாஷ்

Sivakumar 10:59:00 PM  

இதுக்கும் கேப்டன் படத்துக்கும் என்ன ஓய் சம்மந்தம்? வாய்லயே குத்துவேன்.

திண்டுக்கல் தனபாலன் 12:00:00 AM  

ஹா... ஹா... ஹா... ஹா...

ஆனாலும் பாவங்க அந்த தம்பி... செந்தில் நிலைமை அதை விட...

ஜோதிஜி 9:20:00 AM  

இதுக்கும் கேப்டன் படத்துக்கும் என்ன ஓய் சம்மந்தம்? வாய்லயே குத்துவேன்.

பெரியவங்க மட்டும் வந்து படிக்கனும்ன்னு சொன்னவுடன் ஆவலாய் வந்தேன்.

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆவ்

மகேந்திரன் 7:26:00 PM  

நண்பர்கள் மத்தியில் எப்போதும்
இதுபோல ஒருவர் மாட்டிக்கொள்வார்....
அவர் கண்ணீர்விட்டு அழும்வரை
கிண்டிக் கிழங்கெடுப்பது வழக்கம்...
--
குஞ்சுவெளி.. அருமையான கிராமம்...
என் நண்பர் ஒருவரின் அப்பா பெயர் "குஞ்சு""
அவரையும் இப்படித்தான்
கிண்டலடிப்போம்...
ஹா ஹா ஹா

Unknown 5:46:00 AM  

@வருண்

ஆஹா...! இது இதைவிட பயங்கரமா இருக்கே..! நன்றி!


@சிவகுமார்
அதுக்காக மேட்டர்க்கு சம்மதப்பட்ட படத்தையா போட முடியும் ஊரே வாயுல குத்துமேய்யா...!

@திண்டுக்கல் தனபாலன்
நன்றி தனபாலன்..! நமக்கு பொழுது போகணுமே...?

@ஜோதிஜி திருப்பூர்
ஆமாம்..!ஜோதிஜி..! இதே போன மாசமா இருந்தா நீங்க படிக்கமுடியாது....அவ்வ்வ்வ்வ்...

@மகேந்திரன்

உண்மைதான் அது ஒரு அழகிய கிராமம் ஒருமுறை போயிருக்கின்றேன்
சுற்றிலும் முந்திரிகாடுகள் வயல்வெளிகள் என அருமையான கிராமம்..!

திண்டுக்கல் தனபாலன் 6:58:00 PM  

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_22.html) சென்று பார்க்கவும்... நன்றி..

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP