VALAIபாயுதே......!28-12-12!

>> Thursday, December 27, 2012

அன்புள்ள மக்காஸ்

வணக்கம் இப்பொழுதெல்லாம் அதிகமாக பதிவு போடுவதில்லை (சந்தோசம்) முகப்புத்தகத்தில் ஒன்றோ...இரண்டோ இடுகையிடுவதோடு சரி!(அதுக்கென்ன இப்ப.....) சரி அதுல ரசிச்ச....விரும்பிய.....புன்னகைக்க வைத்த, ஆத்திரப்பட வைத்த எதாவது ஒன்று என்னை தீண்டியவைகளை இங்கு பதிகின்றேன் விருப்பமுள்ளவர்கள் படிக்கலாம்...! ஏற்கனவே படித்தவர்கள் அப்பீட் ஆயிக்குங்க........!

அப்புறம் முக்கியமான விசயம் (என்ன...?)இந்த முயற்சி என் வாசகர்கள் பதிவு போடுங்க என்று கதறி அழுதார்கள் அதனால் போடுகின்றேன் என்று பொய் சொல்ல விரும்பல (கர்ர்ர்ர்ர்தூ...உனக்கு வாசகர்களா....இதெல்லாம் ஓவர்) காலையில் கழிவறையில் தோன்றிய கண நேரச் சிந்தனை மட்டுமே!

Bhakkiyam Ramasami Jarasu
நிறைய எழுத்தாளர்கள் எழுதுவதை நிறுத்தி விட்டு முகப்புத்தகத்தில் தன் மனதுக்கு பிடித்த விசயங்களை எதாவது எழுதிக் கொண்டிருப்பார்கள்..!அப்படி கண்ணில் பட்டவர்தான் அய்யா பாக்கியம் ராமசாமி! வாரமலர்ல வருகின்ற அப்புசாமி,சீதா பாட்டி கதையதான் முதல்ல படிப்பேன்! அன்றைய காலக்கட்டத்தில் நாங்க பசங்க கூட்டாக இரண்டு பேர் மூன்று பேர் புத்தகத்தை இழுத்து இழுத்து படித்து சிரிப்போம்....! அவர் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்

எண்ணக் கிணறு!

இளமையில்

பொற் சால்வைகள்

நிறைய வந்தன

குளிரவில்லை

கொடுத்துவிட்டேன் தானம்.

இப்போது -

பார்வையும் இல்லை

போர்வையும் இல்லை.

- ஜ

ஒரு கணினி நிபுணரால ஒரு கணினி நிபுணரைத்தான் உருவாக்க முடியும்! ஒரு விஞ்ஞானியால ஒரு விஞ்ஞானிய உருவாக்க முடியும்! ஆனால் ஒரு எழுத்தாளரால் மட்டுமே ஒரு நல்ல சமூகத்தையே உருவாக்க முடியும்! அவர்களை மறந்து விடாமல் நம்ம ஆளுக சென்னையில் எதாவது விழா, சந்திப்பு வைத்தால் இந்த மாதிரி மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கலாம்! நம்மால் முடிந்த ஒரு பொன்னாடை...ஒரு புத்தகம் கொடுக்கலாம்..! அவர்கள் தமிழ் மக்களின் பொக்கிஷங்கள்!

-------------------------------------------------------------------------------------------------------------------------------


பச்சைக்குறி காட்டப்பட்ட இந்த பெரியவரை நாம் போற்ற வேன்டும்,ஏனென்றால்,மதுரை அண்ணா பேருந்துநிலையம் அருகில் இவர் ஒரு சிறிய ஓட்டல் வைத்துள்ளார்,அவரிடம் சாப்பாடு வெரும் ரூபாய் 10 மட்டுமே! (சாதம்,சாம்பார்,கூட்டு,ரசம்)இதில் அடங்கும்,மேலும் இந்த வயதில் அவருடைய வீட்டில் இருந்து தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.சில மாதங்களுக்கு முன்புவரை இதே சாப்பாட்டை ரூபாய் 6க்கு விற்பனை செய்தார்,கடுமையான விலைவாசி ஏற்றத்தால் தற்பொழுது ரூபாய் 10க்கு விற்பனை செய்து வருகிறார்.நான் நேரில் பார்த்தேன், பலதரப்பட்ட மக்கள் அவரிடம் பயனடைகிறார்கள்,அந்த பெரியவரிடம் கேட்டபோது;"லாபம் அதிகம் கிடைக்காது,இங்க வர்ரவுங்க நிறைய பேரு கஷ்டப்படுரவுங்கதான்,அவுங்களோட சேர்த்து என் குடும்பத்துக்கும் சோறு கிடைக்குது அவ்வளவுதான்" என்று கூறுகிறார்... இப்ப சொல்லுங்க நன்பர்களே...(இதை SHARE செய்து மத்தவங்களுக்கும் சொல்லுங்கப்பா.

நன்றி : · நான் ஒரு தமிழனாக இருப்பதில் பெருமை படுகிறேன்

~தமிழ்ப்பொடியன்

----------------------------------------------------------------------------------------------------------------------------

13 hours ago நல்லா கருத்தா பேசுவாப்ல........!

-----------------------------------------------------------------------------------------------------------
நம்ம சாப்பாட்டு கடை அதிபர் கேபிள்ஜியின்! புதிய கெட்டப்பு

----------------------------------------------------------------------------------------------------------
பல நுகர்வோர் பிரச்சனைகளின் தீர்வுகளுக்கு வழிகாட்டியாக இருப்பது முகப்புத்தகத்தில் உள்ள கேட்டால் கிடைக்கும் குழுமம்! அதில் மின்சார துறைக்கே சாக் ட்ரீட்மெண்ட் கொடுத்த திருப்பூர் சரவணபிரகாஷ் அவர்களின் அனுபவம்! 


டிஸ்கி : இந்த பதிவு முகப்புத்தகத்தில் இல்லாத நண்பர்களுக்கான பகிர்தலே! இந்த ஆக்கங்களை படைத்த நண்பர்கள் விரும்பாத பட்சத்தில் கருத்துரையில் தெரிவித்தால் நீக்கப்படும்

அன்புடன், நட்புடன்....

வீடு.சுரேஸ்குமார்

5 comments:

rajamelaiyur 10:26:00 PM  

கருணா மேட்டர் சூப்பர்.

கிரிஸ்மஸ் விழால பேசிருப்பார்.
இதுவே பக்ரித்தா இருந்தா முஸ்லிம் தான் காரனம் என சொல்லிருப்பார்

rajamelaiyur 10:27:00 PM  

நன்றாக உள்ளது. அடிகடி இதுபோல பகிரவும்.

சீனு 7:57:00 PM  

உங்கள் கைவண்ணத்தில் வந்த கேபிள் ஜி போட்டோ மட்டும் பார்த்திருந்தேன்..
தம்பி கருத்தா பேசுவாப்ள ... அருமை ஹா ஹா ஹா ஹா

குட்டன்ஜி 11:23:00 PM  

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Unknown 9:20:00 PM  

.//// இந்த ஆக்கங்களை படைத்த நண்பர்கள் விரும்பாத பட்சத்தில் கருத்துரையில் தெரிவித்தால் நீக்கப்படும்..///
சுரேஷ் அண்ணே.....
விரும்பாத அளவிற்க்கா நீங்க பதிவீங்க
நல்லாயிருக்கு தொடருங்கள்.....

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP