”X” திரைப்படம் - விலைமகள்களின் வாழ்க்கை!

>> Saturday, November 30, 2013


இரண்டு மாறுபட்ட குணாதிசியங்கள் கொண்ட பெண்கள் சந்திக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள்; இருவரும் ஒரு பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் போது இருவரின் மனநிலைகள் என்ன..? என்பதை மிக நுட்பமாக எடுக்கபட்ட திரைப்படம் "எக்ஸ்"! ஆஸ்திரேலியத் திரைப்படம் என்று மட்டும்தான் தெரியும். படம் பார்த்த பிறகு கூகிளிட்டதில் ஆஸ்திரேலியாவில் உருவான சிறந்த உலக திரைப்படங்கள் பத்தில் இது ஒன்று! என அறிந்த போது வியப்படைந்தேன். http://blog.quickflix.com.au/2011/12/01/the-10-best-australian-films-of-2011/

வெறும் பத்து நபர்கள் மட்டுமே அரங்கில் அமர்ந்திருக்க, ஒரு சாதனை படைத்த படம்! கொசுக்கடியோடு திருப்பூரில் ஒரு தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது. அதிலும் இரண்டு முறை மின் தடை வேறு, ஜெனரேட்டர் போட்டு வேறு ஓட்டினார்கள், கண்டிப்பாக நஸ்டமடைந்திருக்க வேண்டும்... அந்த காட்சியில் திரையரங்கு உரிமையாளர்.


அந்த பத்துப் போரிலும்... என்னையும் என் நண்பரையும் தவிர சிலர் போதையில் வீட்டுக்கு போக முடியாமல் ஒதுங்கியவர்கள் சிலபேர், பிட்டை எதிர்பார்த்து வந்த ஒரு சிலர். நாங்களும் மழைக்கு ஒதுங்கியவர்கள் போலத்தான் ஒதுங்கினோம் ஏதோ ஒரு படத்தின் போஸ்ட்டரைப் பார்த்து தவறுதலாக நுழைந்த நாங்கள் மிகச்சிறந்த படத்தினை எந்த ஆரவாரமின்றி காண்போம். என்று எதிர்பார்க்கவில்லை சரி இனி படத்தைப் பற்றிப் பார்ப்போம்.



முதல் காட்சியிலேயே ஷாலி(Viva Bianca) என்கின்ற மேட்டுக்குடி விலைமகள். லைவ் செக்ஸ் நிகழ்ச்சியில் ஒரு அரபியை அதுவும்  அரபிக் குதிரை போன்றவன் என்று அறிமுகப்படுத்தி பல வயது மேட்டுக்குடி யுவதிகள் அமர்ந்திருக்க இருவரும் உடலுறவு கொள்கின்றார்கள். 

அதே நேரத்தில் போக்கிடமின்றி அலையும் ஒரு இளம் விலைமகள் Hanna பதினேழு வயது செம அழகு, காமம் கொப்பளிக்கும் கண்கள், இதழில் எந்த நேரமும் தேன் வழியும் ஒரு பாவனை சூடேற்றுகின்றாள் பார்வையாளனை. தொந்தரவு இல்லாத வயதான வாடிக்கையாளர்களாக தேடிப் போகின்றாள். அப்படி சம்பாரித்த செற்பத் தொகையையும் அந்த ஏரியாவின் வேறொரு தாதா விலைமகள் பிடிங்கிக் கொள்கின்றாள். போகும் போது காரி உமிழ்ந்து விட்டுப் போகின்றாள்.



ஷாலி இரண்டு பெண்கள் வேண்டும் என்று கேட்ட அரபி ஒருவனுக்காக சாலையில் எதிர்பாராமல் சந்தித்த நடைபாதை விலைமகளை முன்நூறு டாலர் தருவதாக கூறி அழைத்துச் செல்கின்றாள்.



அங்கு கொண்டாட்டமாக இருந்த பொழுதில் அந்த அரபி இளைஞன் ஒரு போதை வியாபாரியின் அடியாள் என்று தெரிய வருகின்றது. அவன் தன்னுடைய பாஸை ஏமாற்றுகின்றான் ஆத்திரத்துடன் வரும் பாஸ் அவனை சுட்டுக்கொல்கின்றான் அதைப் பார்த்த சாட்சிகளான இருவரையும் கொல்ல துரத்துகின்றான் அந்த போதை வியாபாரி. அவனிமிருந்து தப்பிக்க ஓடுகின்றார்கள் இருவரும். அப்பொழுது அவர்களுக்கு உதவுகின்றான் ஒரு டாக்ஸி டிரைவர் இளைஞன், அவன் Hanna வை விரும்புவதாக சொல்கின்றான்....! அதை ஒரு புன்சிரிப்புடன் மறுக்கின்றாள் அவள். "ஏன் நான் உனக்கு தகுதியானவன் இல்லையா..? " என்கின்றான். அவளோ "நான் உனக்கு தகுதியாவள் இல்லை!" என்கின்றாள் மெல்லிய சோகம் அவள் முகத்தில் இழையோட....புன்சிரிப்புடன் சொல்லும் காட்சி ஒரு கவிதை! 

நடைபாதையில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சக விலைமகள், முடியாத நிலையிலும் தொழில் செய்துகொண்டேயிருக்கின்றாள், கடைசியில் ஒரு காண்டம் பாக்கட் கொடு என்று கேட்கும் போது அதிர்கின்றது நம் மனது. போதை பழக்கத்திற்கு அடிமையான ஆண், பெண் இரண்டு நண்பர்கள் ஒருவருக்கொருவர் ஊசி கூட போட முடியாமல் தடுமாறுமிடம் மனதை அதிர வைக்கின்றது. சின்ன அதிர்வலைகளையும் அழகியலையும் கலந்து படைத்த இப்படைப்பு சிறந்த ஒரு படைப்பு என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. 

Director: Jon Hewitt
Actors: Viva Bianca, Hanna Mangan Lawrence, Peter Docker, Stephen Phillips, Belinda McClory


படத்தின் டிரைலர்  : http://www.youtube.com/watch?v=NIZD7mPli9s 

----------------------------------------------------------------------------------------------------------
நண்பர்களே வலைப்பதிவர்களுக்கான பேஸ்புக் குழுமம் வெட்டி பிளாக்கர் என்று ஒன்று இருப்பதை அறிவீர்கள். அதில் வலைப் பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி நடத்துகின்றோம்.

முதல் பரிசு 5000

இரண்டாம் பரிசு 2500


மூன்றாம் பரிசு 1500


மற்றும் சிறப்புப் பரிசாக சிறந்த கதைகளுக்கு 500 வீதம் ஐந்து நபர்களுக்கு என்று தரப்படுகின்றது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகின்றோம்.
எழுதுங்கள் வெல்லுங்கள்

கதை போட்டி தொடர்பான தகவல்

கதை வெளியாகும் வலைத்தளம்
------------------------------------------------------------------------------------------------------------

Read more...
வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP