மல்லி என்கின்ற ராதா!
>> Tuesday, April 9, 2013
இரவு நேரப் பனி குளிர்ச்சியாக கொட்டிக் கொண்டிருந்தது. சாலையின் இருபுறமும் புளியமரங்கள் வானில் கைகோர்த்துக் கொள்ள குகை மாதிரியிருந்தது அந்தச் சாலை. மையிருட்டாக இருந்த போதிலும் நிலா வெளிச்சம் புளியமர இலைகளைத் தாண்டிக் கொண்டு மரத்தோடு ஒட்டிக் கொண்டு தலையை மட்டும் எட்டிப் பார்த்து எதாவதொரு வாகனம் தென்படுகின்றதா என பார்த்துக் கொண்டிருந்த மல்லியை ஒரு கறுப்புதாளில் வரைந்த புகை ஓவியம் போல காட்டிக்கொண்டிருந்தது இரவு.
அவள் மூக்கில் இருந்த மூக்குத்தியை திருகிக் கொண்டிருந்தாள், மெலிதான உருவம் மாநிறமாக இருந்தாள், பழைய நூல் சேலை, கூந்தலில் நான்கு முழம் மல்லிகையை வைத்திருந்தாள், ஏதோ மட்டமான பவுடரை தீட்டியிருந்தாள், ரவிக்கையை தாண்டி வெள்ளைநிற உள்ளாடை வெளியே தெரிந்தது, தொப்புளைத் தாண்டி சரிவாக புடவையை தளர்வாக கட்டியிருந்தாள் அந்த நிலவொளியில் ஒரு மாதிரி கிறங்கடிக்கும் விதமான விதத்தில் மல்லி அவ்வழியே ஆந்திரா போகும் லாரிக்காக காத்திருக்கின்றாள். நீண்ட பயணமாக செல்லும் லாரி ஓட்டுநர்களுக்கு இந்தச்சாலை ஒரு தன் உடல் இச்சை தீர்க்கும் இடமாகும். புளியமரங்களைத் தாண்டி இருக்கும் வயல்களில் முளைத்திருக்கும் ஆளுயற புல்களுக்கு நடுவே சுத்தப்படுத்தி வைத்திருப்பார்கள். உடற்சூட்டைத் தணிக்க வருபவர்களுக்கு விவசாயம் பொய்த்துப் போன இந்த ஊரில் சில பெண்கள் தங்கள் வயிற்றுச் பாட்டைத் தணிக்க உடல் விற்பனையை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் ஒருத்திதான் மல்லி!
இதோ இந்த வயலுக்கு நடுவே ஒரு ஒற்றையடிப்பாதை தெரிகின்றதே இதில் சில அடிகள் நடந்தால் பத்து பதினைந்து குடிசைகள் தெரியும், அதுதான் மல்லியின் வாழ்விடம், பத்தாவது வரை நன்றாக படித்தவள்தான் மல்லி, குடும்ப வறுமையை கணக்கில் கொண்டு அவசரஅவரமாக பள்ளி விடுமுறை முடிந்து அடுத்த பதினொன்றாவது போகும் கனவில் இருந்தவளை மாரிக்கு கட்டிவைத்தார்கள். “பொம்பளைப் புள்ள படிச்சு என்ன ஆவப் போகுது” என்று வியாக்கியானம் பேசிய மல்லியின் அப்பன் மல்லியின் கழுத்தில் தாலி ஏறுவது கூடத்தெரியாமல் சாராய போதையில் கிடந்தான். இனம்இனத்தோடு சேரும் என்பதைப் போல மாரி மகாக்குடிகாரன், வேலை முடிந்து வரும்போது இதே புறவழிச்சாலையில் இருட்டில் தள்ளடியபடி சைக்கிளில் வந்தவனை அரைத்தூக்கத்தில் வந்த வாழைக்காய் ஏற்றி வந்த லாரி அரைத்துக் கூழாக்கி விட்டுப் போய்விட்டது. அவன் இறந்த போது கையில் ஆறுமாதக் குழந்தை...குடிகார தகப்பன், தாயுமில்லை, கட்டிட வேலைக்குப் போனாள் வேலியுள்ள பயிரே மேயப்படும் இந்த உலகில் இது வேலியில்லாத காடு சும்மா விடுவார்களா...? மேஸ்திரி யாருமற்ற ஒரு வேளையில் இடுப்பைக் கிள்ளினான், மார்பை உரசினான் இவள் செருப்பைக் காட்ட வேலையும் போனது.
பல வேலைகள், பல தீண்டல்கள், கூட வேலை செய்த பாபு அன்பாக பேசினான் குழந்தைக்கு பால், பிஸ்கட் வாங்கிக் கொடுத்தான் இவள் நம்பினாள், ஒரு நாள் இரவில் வந்து குடிசைக்குள் புகுந்து இச்சைக்கு அழைக்க இவள் மறுக்க முரட்டுத்தனமான அவனிடம் தோற்றுப் போனாள், அவன் வீசிவிட்டுப் போன சில நூறு ரூபாய்கள்...நல்லவர்கள் என்று நம்பியவர்கள் எல்லாம் அவள் உடலை பயன்படுத்த இதையே தொழிலாக செய்தால் என்ன என்று கேள்வி கேட்டு இந்தப் பகுதியில் தொழில் செய்து வரும் தேவி இந்த பகுதிக்கு மல்லியை அழைத்து வந்து ஆயிற்று ஆறு ஏழு வருடங்கள்.
ஏதோ யோசனையில் இருந்தவள் லாரி வெளிச்சம் தூரத்தில் தெரிந்ததும் உற்சாகமானாள் மரத்தின் மறைவில் இருந்து வெளிப்பட்டாள் ஒரு கையினாள் சேலையை முட்டிவரைக்கும் தூக்கி கட்டிக் கொண்டாள், லாரி வெளிச்சத்தில் அவளின் தொடை பளபளத்தது லாரி நெருங்க....நெருங்க....மார்பகச் சேலையை ஒரு புறம் ஒதுக்கி ஒரு அரைநிர்வாண சிலையாக நி்ன்றாள், அவளைக் கடந்து லாரி ஒரு ஓரமாக ஒதுங்கியது அதிலிருந்து லுங்கியை தூக்கிக் கட்டியபடி வாயில் பீடியுடன் இறங்கினான் அதன் ஓட்டுநர்! நடந்து வந்து அவளை நெருங்கினான்.
“எவ்வளவு ரேட்டு” என்றான்
“என்ன ஆயிரமா கேட்கப் போறேன்...!”
“இடம் இருக்கா...?” என்றான் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு.
“வாங்க உள்ள போலாம் இடம் இருக்கு..!” என்றபடி புல் புதருக்குள் நடந்தாள் அவனும் பின்னால் சென்றான்
“உம் பேரு என்ன..?” என்றான் அவன் “ராதா” என்றாள் யாரிடமும் உண்மைப் பெயர் அவள் சொல்லுவதில்லை. வயலுக்கு நடுவில் புற்களை வெட்டி சுத்தப்படுத்தியிருந்த இடத்துக் சென்று அங்கே சென்று கீழே கிடந்த பழைய துணியைப் கீழே விரித்துப் போட்டு அதில் படுத்துக் கொண்டாள் மல்லி. அவன் நிலா வெளிச்சத்தில் அவளை ஒரு முறை ரசித்து விட்டு அவள் மேல் படர்ந்தான்.
****
இரண்டு நூறு ரூபாய் தாளை அவளிடம் கொடுத்துவிட்டு கிளம்பினான். ''ஒரு நிமிசம் இருங்க நானும் வர்றேன்'' என்றாள் மல்லி ''எதுக்கு..?'' என்றான் ''இல்லங்க குழந்தைக்கு இரண்டு நாளா காய்ச்சல் மருந்து வாங்கணும்..! என்னைப் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டுடுங்க...! நான் வரும்போது எதாவது வண்டி படிச்சு வந்துக்கறன்'' என்றபடி அவனின் பதிலை எதிர்பார்க்காமல் அவன் கூடவே நடந்தாள்.லாரியில் இருவரும் ஏறி அமர்ந்து கொள்ள லாரியை கிளப்பினான்...!
“உங்களை எனக்குத் தெரியும் நீங்க.....ரவிதானே...?”என்றாள்!
“ஆமா எம் பேர் ரெவிதான் உனக்கு எப்படி...தெரியும்..?”
நான்தான் மல்லி உன்கூட பத்தாவது படிச்சனே..! ஞாபகம் இருக்கிறதா..? நீ கூட என் நோட்டில ஜ லவ் யூன்னு எழுதி நான் முருகசாமி வாத்தியார்கிட்டச் சொல்லி அவரு உன்னை அடி பின்னி எடுத்தாரே..?
“நீ..... எப்படி மல்லி இப்படி....? என்னை எப்படி அடையாளம் கண்டுபிடிச்சே...?”
“நீ படிக்கும் போது மாடு முட்டி ஆஸ்பத்திரியில் இருந்தப்ப நாங்க ஸ்கூல் பசங்க புள்ளைக எல்லாம் பாக்க வந்தமே....!அப்ப உன்ற இடுப்புல ஒரு தையல் போட்டிருந்தாங்க....அந்த தழும்புதான் எனக்கு உன்னைக் காட்டிக் கொடுத்ச்சு! நீ புழங்கி எந்திரிச்சு சட்டையப் போடும் போதுதான் பார்த்தேன்...அப்புறம்தான் உம்மூஞ்சிய நல்லா பாத்து நீதான்னு தெரிஞ்சுக்கிட்டேன்....நீ நல்லா இருக்கியா...? கல்யாணம் பண்ணிட்டியா..?”
ம்ம்ம்.....!இரண்டு குழந்தைக...! உன்னை இந்த நிலையில் பார்க்க மனசு கஸ்டமா இருக்கு மல்லி...! அதுவும் இல்லாம உன்னை நானும் என்றான்..!
“அடப் போடா...! நீ சின்ன வயசுல என்னை விரும்பினே..! இன்னிக்கு உனக்கு கிடைச்சிருக்கேன். சந்தோசப்பட்டுக்கோ..!எல்லா ஆம்பளையும் யோக்கியனாகிட்டா நாங்க எப்படிப் பிழைக்கறது.....!மனசப் போட்டு குழப்பிக்காத இந்தப்பக்கம் வந்தா வா..!” பேருந்து நிலையம் வரவே லாரியை நிறுத்தினான்
மேலும் ஒரு இரண்டு நூறு ரூபாயை எடுத்துக்அவள் கையில் திணித்தான் ரவி. “வேண்டாம் நீ கொடுத்ததே அதிகம்தான்...!வச்சுக்கோ..!” என்று திரும்ப அவன் கையிலேயே கொடுத்து விட்டு இறங்கி கையசைத்தாள் அவன் மல்லியை இறக்கிவிட்டு மறைந்தான்...! மருந்துக் கடையைப் பார்த்து நடந்தாள்....அன்னிக்கு மட்டும் வாத்தியார்கிட்ட சொல்லாம இருந்திருந்தா லாரிக்காரன் பொண்டாட்டியாயிருப்பேன்...! என்று சற்று உரக்கவே சொல்லிவிட்டாள்..! பிறகு உணர்ந்து தலையில் தட்டிக் கொண்டு சிரித்தாள்..! வாய்விட்டுச் சிரித்தாள்...!
9 comments:
காலையில் மனசு கனக்க.................ஹூம்!
அட நீங்க சிறுகதை கூட எழுதுவீங்களா... நா.மணிவண்ணன் கதைய படிச்சிட்டு இந்தக் கதைய படிச்சேன்.... எங்க ரெண்டு பெரும் ஒரே மாதிரி எழுதி இருப்பீங்கன்னு நினைச்சேன்.... இதுவும் ஒரு வித்தியாசமான களம்...
வாழ்வியல் எதார்த்தம் மிககொடியது சார்.
@Yoga.S.
//////////////////
நன்றி யோகா சார்..!
@சீனு
ஏதோ...அப்பப்ப எழுதுவேன் சீனு. நன்றி சீனு!
@விமலன்
உண்மைதான் சார் நன்றி விமலன்!
வீடு நீ லாரி கூட ஓட்டுரியா ??????
வறுமையினால் வந்த வினை
மெய்யாலுமா
@நாய் நக்ஸ்
அண்ணே உங்க கருத்துக்கு நான் தன்யனாவேன்..! இது புனைவுண்ணே!!
தீ சுடும்ன்னு தொட்டுப்பாத்துதான் தெரிஞ்சுக்க வேண்டியதில்ல....!
@முத்தரசு
நன்றி மாம்ஸ்!
/////////////////////
மெய்யாலுமா..?
நக்கீரனுக்கு சொன்ன பதில்தான் மாம்ஸ்!
Post a Comment