திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 20,000௦௦௦௦ கோடி தங்க வைர இரத்தின ஆபரணங்கள்
>> Thursday, June 30, 2011
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் 20,000௦௦௦௦ கோடி தங்க வைர இரத்தின ஆபரணங்கள் கிடைத்துள்ளது இந்த கோவிலில் கடந்த ஒரு வாரமாக நிலவறையில் தொல்பொருள் துறையினர் மிகுந்த சிரமங்களுக்கு பின் பிராணவாயு உருளைகள் மூலம் உள் நுழைந்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர் 16 அடி உயரமுள்ள தங்க மாலையில் வைரம்,ரத்தினம் பதிக்கப் பட்டு இருந்தது அது போக வெள்ளிகுடம், தங்ககுடம், ஆபரணங்கள் இருந்தது மொத்தம் ஆறு நிலவறைகள் அதில் ஒவ்வொன்றிலும் கிளை அறைகள் என கோவில் முழுவதும் சொர்ண புதையல் உள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது அனைத்து அறைகளும் திறந்தால் மதிப்பிடமுடியாத ஆபரணங்கள் இருக்கலாம் என தெரிகின்றது கோவிலை சுற்றி 2கிலோ மீட்டருக்கு 144 தடையுத்தரவு பிரபிக்கப்பட்டுள்ளது
கோவிலின் வரலாறு
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற விஷ்ணு கோயில் ஆகும். இக் கோயில் விஷ்ணுவுக்கு உரிய 108 திவ்ய தேசங்கள் எனப்படும் புனித வழிபாட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இக் கோயிலில் உள்ள இறைவன் விஷ்ணுவின் தோற்றங்களில் ஒன்றான அனந்தசயனக் கோலத்தில் காணப்படுகிறார். இது ஒரு பழைய கோயில் ஆகும். திருவனந்தபுரம் என்னும் பெயரும் இக்கோயிலில் உள்ள இறைவனின் பெயரைத் தழுவியே ஏற்பட்டது. திருவிதாங்கூர் அரசர்கள் காலத்தில் இக் கோயில் பெரும் புகழுடன் விளங்கியது.
இக்கோயில் நம்மாழ்வாரின் பாடல்களிலிலிருந்து பத்தாவது நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. பின்னர் சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி, பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் ஏற்பாடுகள் செய்ததாகவும் ஓலைச்சுவடிகள் வாயிலாக அறிய முடிகிறது. தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 1686-ல், தீப்பிடித்துக் கோயில் அழிந்து விட்டதால், மீண்டும் திருவிதாங்கூர் அரசின் மன்னரான மார்த்தாண்ட வர்மரின் முயற்சியால் 1729-இ அது புதுப்பிக்கப்பட்டது. அச்சமயத்தில்தான் மரத்தாலான மூல மூர்த்தி அகற்றப்பட்டு, 12000 சாளக்கிராமத்தினாலும் "கடுசர்க்கரா" என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது "அனந்தசயன மூர்த்தி" பிரதிஷ்டை செய்யப்பட்டது.[1]
1750 ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மா தனது அரசை இக்கோயிலின் இறைவனான பத்மநாபசாமிக்குத் தன் ராஜ்யம், செல்வம் அனைத்தையும் தானமாக ஸ்ரீ அனந்த பத்மநாபருக்கு பட்டயம் எழுதித் தந்து, தன் உடை வாளையும் அவர் திருப்பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டு பரிபூரண சரணாகதியடைந்தார். அன்று முதல் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் "பத்மநாபதாசர்" என்று அழைக்கப்பட்டனர்.[2]இதனால் பத்மநாபசாமியே திருவிதாங்கூரின் தலைவர் என்ற நிலை உண்டானது. குடியேற்றவாத ஆட்சிக் காலத்துப் படைத்துறை மரபுகளின்படி பத்மநாபசாமிக்குப் பிரித்தானிய ஆட்சியாளர் 21 குண்டுகள் மூலம் மரியாதை செய்யும் வழக்கம் இருந்தது. இந்தியாவில் மன்னர் மானிய முறை நீக்கப்படும் வரை இந்திய இராணுவமும் இவ் வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தது.
ஐயப்பன் கோவில் வருமானத்தை கண்டபடி செலவு செய்து கோவிலுக்கு என்று எதுவும் செய்யாத கேரள அரசு இதை என்ன செய்யும் என வினவுகின்றனர் கேரள இந்துக்கள்
நன்றி : மாத்ருபூமி,விக்கி பீடியா
நன்றி : மாத்ருபூமி,விக்கி பீடியா
0 comments:
Post a Comment