சிறுவனின் கவிதை(பழைய நினைவுகள்)
>> Monday, November 7, 2011
அன்பு செலுத்துபவர்களிடம் மிருகமும் நட்பாகும்
ஆத்திரம் கொள்ளுவர்களிடம் நல்ல நட்பு எப்பொழுதும்
இல்லாமல் இருந்துவிடும்
ஈரமான உள்ளத்தோடு செயலாற்றி
உள்ளத்தூய்மையோடு இருப்பவரே...
ஊற்றுநீர் போன்றோர்
எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்
ஏற்றம் இல்லாதோர் கழிவுநீர் போல்
ஐம் புலனை அடக்கியாள்பவர்களே
ஒவ்வொரு செயலையும் சிந்தித்து
ஓதுவார்களின் சொல்லை மறுத்து
ஔவ்வைக்கு அதியமான் கொடுத்த நெல்லிக்கனி போன்று
அஃதேயீகை செய்வார்
(இது நான் ஏழாம்வகுப்பு படிக்கும் போது எழுதியது
பரிசாக சோப்பு டப்பாவும்,ஸ்ரீபெட் தண்ணீர்ப்பாட்டிலும் கிடைத்தது)