நமக்கும் வரும் புற்று நோய் (Cancer)

>> Sunday, September 23, 2012


''மாடி வீட்டுச் சன்னல் கூட சட்டை போட்டிருக்கு…..
சேரிக்குள்ள சின்னப் பொண்ணு அம்மணமாயிருக்கு''
என்கின்ற பாடலோடு ஆரம்பிக்கும் ''பாடும் வானம்பாடி'' படத்தில் எனக்கு அறிமுகமாயிருந்த ஆனந்த்பாபுவின் நடனம் ஆச்சர்யப் படுத்தியது !கால்களை எக்ஸ் மாதிரி வைத்து ரப்பர் மாதிரி உடம்பை வளைத்து தன்னுடைய தந்தை நாகேஷ் அவர்களின் நடன அசைவை ஒத்து ஆடிய அவருடைய ஆட்டத்துக்கு பலர் ரசிகர்களாக மாறினார்கள்.


அன்றைய காலகட்டத்தில் இருந்த நடிகர்களில் ரஜினி, கமல், போன்றோரில் கமல் நடனத்தில் சிறந்தவர் என்றாலும் ஆனந்த்பாபுவின்  ''டிஸ்கோ'' நடனத்துக்கு ஒரு தனி "கிரேஸ்" இருந்தது. பல படங்களில் நடித்த அவர் சமீம காலத்தில் அவரை புற்றுநோய் தாக்கி உடல் மெலிந்து, முடிகள் எல்லாம் கொட்டி பார்க்கும் போது மிகுந்த வேதனையளித்தது. ஆனால்...! அந்த நோயை வென்று இப்பொழுது கூட சில படங்களில் வில்லனாக தலைகாட்டினார். இதைப் படிக்கும் போது நமக்கு செய்தியாக இருந்தாலும் அதன் வலி...! உயிர் பிழைப்பதற்கான போராட்டம்..! நாம் அருகில் இருந்தால்தான் உணர முடியும்.


எங்க உறவினரான என் தாத்தாவின் தம்பி ஒருவர் கடுமையான உழைப்பாளி நன்றாகத்தான் இருந்தார், திடீரென்று சிறுநீரில் ரத்தம் கலந்து போக வழக்கமாக பார்க்கும் கோபியில் உள்ள ஒரு கிளினிக்கில் பார்க்க !அந்த மருத்துவருக்கு சந்தேகம் வர... கோவை "யுனைடேட்" மருத்துவமணைக்கு சிபாரிசு செய்ய அங்கு சென்று பல சோதனைகளை செய்ய கேன்சர் கிட்னியில் கேன்சர் இருப்பது உறுதியாகிவிட்டது. "ஒரு சின்ன ஆப்ரேசன் பண்ணிட்டா அவர் உயிர் பிழைப்பார்" என்று மருத்துவர்கள் சொல்ல அவரிடம் உண்மையை சொல்ல வில்லையென்றாலும், டெஸ்ட் எடுக்கப் போகும் அறைகளில் இருக்கும் கேன்சர் சம்மதமான வாசகங்களை வைத்து தெரிந்துகொண்டு அழுதார் .சில லகரங்களை செலவு செய்து அறுவை சிகிச்சையும் செய்து வயிற்றில் ஒரு ஓட்டை போட்டு குழாய் வைத்து ஒரு பையை தொங்க விட்டார்கள் கட்டுமஸ்தாக இரண்டு முரட்டு காளைகளை பூட்டி ஏர் உழுத விவசாயி கிழிந்த நாராக படுக்கையில் விழுந்தார்.


நான் சென்ற போது கண்ணில் நீர் வழிய நான் செத்து போயிருவேன் என்று அழுதார்....!நான் சின்ன வயசில பள்ளி விடுமுறையின் போது நானும் என் மாமா பையனும் கிணற்றில் நீச்சல் அடிப்பதற்காக அவர் தோட்டத்துக்கு போனோம், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் தோட்டம்! விளையாடியதில் நேரம் போனது தெரியாமல் இரவாக அங்கேயே உறங்கி விட்டோம்.


நடு இரவில் யானைக் கூட்டம் கரும்பு காட்டை தேடி துவம்சம் செய்ய படையெடுத்தது சுற்றியுள்ள தோட்டக்காரர்களுடன் சேர்ந்து பட்டாசு கொளுத்திப் போட்டும் ஓடவில்லை! தீப்பந்தங்களை இரண்டு கைகளில் ஏந்திக் கொண்டு காட்டுயானைகளின் அருகில் சென்று விரட்டினார்...!

அப்படிப்பட்ட தைரியம் மிக்க ஒரு விவசாயி! புற்றுநோயின் வீரியத்தையும், வலியையும் தாங்கிக் கொள்ள முடியாமல் குழந்தை போல் அழும்போது எதிரிக்குக் கூட இந்த வியாதி வரக்கூடாது என்று வேண்டிக் கொண்டேன். இறைவன் சில நாட்களிலே அவருக்கு வலியிருந்து விடுதலை கொடுத்து விட்டான் "ஆப்ரேசன் பண்ணாம இருந்திருந்தாக் கூட இன்னும் கொஞ்ச நாளைக்கு உசிரோட இருந்திருப்பார்...." என்று அவரின் காரியத்துக்கு வந்தவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். பண்ணாம இருந்திருக்கலாமோ..?  எனக்கூட தோன்றியது...! ஆனாலும் பல காலம் வேதனையோடு வாழுவதை விட இது மேல்தான் என்று நினைத்துக் கொண்டேன். எழும்புப் புற்று நோய் தாக்கியவர்கள் வலி தாளாமல் டாக்டர் என்னை கொன்னுடுங்க...என்று அழுவார்களாம்! 


நடிகை ஸ்ரீவித்யா பல படங்களில் அழகு பதுமையாக வந்து கடைசிவரை தன் அழகான அக்காவாக.......அம்மாவாக.....பாட்டியாக வந்து நடிப்பை கவர்ந்தவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு முடியிழந்து, முகம் பொலிவிழந்து, பார்க்கவே பரிதாபமான நிலையில் மரணத்தை தழுவினார். கடைசி காலத்தில் யாரையும் பார்க்க விரும்பவில்லை அவர்கள். இந்த புற்று நோய் ஏழை, பணக்காரன் யாரையும் விட்டுவைக்காமல் தாக்குகின்றது. யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் அதனால் வருடத்துக்கு ஒரு முறை ஆண்கள், பெண்கள் அனைவரும் புற்றுநோய் சோதனை செய்துகொள்வது நலம் என்று நினைக்கின்றேன், நீங்க என்ன சொல்றீங்க...? 

12 comments:

CS. Mohan Kumar 9:09:00 PM  

துவக்க நிலையில் ( முதல் ஸ்டேஜ்) கண்டறிந்தால் குணமாக வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.

பட்டிகாட்டான் Jey 9:28:00 PM  

அது சோதனை செய்ற டாக்ட்ரை பொறுத்து இருக்கு. என்னோட மாமாவுக்கு ஈசோபீகஸ்ல(உணவுக்குழாய்) கேன்சர் இருக்கானு பேரியம் ஸ்வாலொவிங் பண்ன வச்சி எக்ஸ்ரே/ஸ்கேன் எடுத்தாரு.... , கேன்சர் உணவுக்குழாய் உணவுப்பையில் சேர்ற கார்னர்ல இருந்திருக்கு...ஆனா ஸ்கேன் அதுக்கு ஜஸ்ட் மேலே வரைக்கும் எடுத்துட்டு ஒன்னும் இல்லை அல்சரா இருக்கும்னு மருந்து குடுத்து அனுப்பிட்டாரு..... அடுத்த வருசம் அது கேன்சர்னு கண்டு பிடிச்சி ....டூ லேட்.

கேன்சர்னு கண்டுபிடிக்கிறதே 2வது அல்லது 3வது ஸ்டேஜ்லதான்... இன்னும் மருத்துவம் கடக்க வேண்டிய தூரம் இருக்கு..., இப்போதைக்கு ஈசியா ரிமோவ் பன்ற ஏரியாவுல கேன்சர் இருந்தா, athuvum பக்கத்து லிம்ப் நோட்ஸுக்கு பரவாம இருந்தா.... குணப்படுத்துற வாய்ப்பு அதிகம் அவ்வளவுதான் :-(((

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி 12:49:00 AM  

ஆனந்த்பாபு..!? அதான் கே.எஸ் ரவிக்குமார் படமொன்றில் மிகுந்த சோர்வாக இருந்தாரா? இப்போ எப்படி இருக்கின்றார்.
ஆய்வுகள் சொல்கின்றன நாம் எல்லோரும் வருங்காலங்களில் எதாவதொரு புற்றுநோயால்தான் இறப்போம் என்று.
இதற்குக் காரணம் சுற்றுச்சூழல் நிலவரம். எதிலிருந்து எப்படி வருமென்று சொல்லமுடியாதாம். தொடர் பரிசோதனை நிச்சயம் வழிகாட்டும் என்கிறார்கள். முன்னெச்சரிக்கை உதவலாம்..வந்தால் என்ன செய்ய.!
பதிவுக்கு நன்றி

கவிதை வீதி... // சௌந்தர் // 1:35:00 AM  

மிகவும் கொடுமையான நோய்...

கவிதை வீதி... // சௌந்தர் // 1:36:00 AM  

ஆனந்தபாபுவின் நானும் ரசித்த நடிகர்களில் ஒருவர்..

தன்னுடைய தந்தையின் பாணியில் அவருடை நடிப்பு நடனம் மிகவும் பிடிக்கும்...

அவருக்கு இப்படிஒரு சோதனையா...

அவர் விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்...

Ramesh 1:46:00 AM  

http://www.dailythanthi.com/article.asp?NewsID=760390&disdate=9/24/2012

Anonymous,  5:10:00 AM  

அறிவியல் ஆராய்ச்சிக்கு பணத்தைக்கொட்டும் அமெரிக்கா கூட புற்று நோயை பணம் பண்ணும் சுரங்கமாய் இதுவரை நடத்தி வருகிறது...

நிலாவுக்கு மனிதனை அனுப்ப எப்படி முயற்சி செய்தார்களோ...அதைபோல் ஐந்து வகை புற்று நோய்களை பத்து வருடத்தில்
விரட்டி அடிக்கும் முயற்சி இப்போது தான் தொடங்கி உள்ளது...இது தான் புற்று நோய்க்கு எதிரான முதல் உண்மையான யுத்தம்..

இதுவரை நடந்து வந்தது எல்லாம் முகத்துக்கு தமிழன் பௌடர் போன்றவையே...

ezhil 6:31:00 AM  

விஜி அவர்கள் சொல்வது போல் இனி வரும் தலைமுறை புற்று நோயால் தான் இறக்கப் போகிறது. ஏனெனில் தலைமுறை இடைவெளியில் இயற்கை உணவின் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது. செல்கள் பெருகி உணவுப் பொருள் நிறைய மற்றும் பெரிதாக உரம் பயன்படுத்தும் போது அதைப் பயன்படுத்தும் போது அதே செல்கள் நம் உடம்பிலும் பெருகத் தானே செய்யும். நீங்கள் சொல்வது போல் வருடத்திற்கு ஒருமுறை பரிசோதித்துக் கொள்வது நலம்

குட்டன்ஜி 8:17:00 AM  

உருக்கும் நோய் இதை ஒழிக்க வழியில்லையோ?

Angel 10:04:00 AM  

நான் கேட்க விரும்பாத ஒரு வார்த்தை ...புற்றுநோய்

எந்த கெட்ட பழக்கவழக்கம் இல்லா அப்பா இறந்தது தொண்டை புற்றுநோய்
அம்மா இறந்தது ...உணவுக்குழாய் புற்றுநோய் .
அழகிழந்து உருக்குலைந்து( இப்படியும் மனிதரை ஒரு நோய் உருக்குமா
கடவுளே இல்லையா என்று வெறுக்குமளவு என்னை நோகடித்த விஷயம் .
அதுவும் உணவுக்குழாய் புற்று ஆரம்பத்தில் கண்டறிய முடியாது ..நெஞ்செரிவு போலதான் தோன்றும் ..சின்ன விடயம்தானென்று தாமதிக்காமல் அனைவரும் முன்ஜாகிரதையுடன் வருடம் ஒருமுறை சோதனைகளை மேற்கொள்ளனும்

MARI The Great 2:19:00 PM  

புற்றுநோய்க்காக இல்லாவிட்டாலும்.. பொதுவாகவே வருடத்திற்கு ஒரு முறை முழுமையான மருத்துவ பரிசோதனை செய்துகொள்ளுதல் நல்லது!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 7:31:00 PM  

புற்று நோய் என்றதுமே ஒரு வித அச்சம் மனதை ஆட்கொள்கிறது.நோய்கள் விஞ்ஞானத்தை வென்று விடுகின்றன பல சமயங்களில்.

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP