மதுரை ஹோட்டல் போகலாம் வாங்க.......!

>> Sunday, August 5, 2012


வணக்கம் நண்பர்களே! இன்னைக்கு உங்களை நான் கூட்டிட்டுப் போறது ஹோட்டல்  மரண விலாஸ்,   என் பின்னாடியே வாங்க....! அதோ கல்லாவுல உக்காந்து  இருக்காரே அவருதான் முதலாளி.சத்தம் போடாம என் பின்னாடி வாங்க...!ரொம்ம வருசமா இந்த ஹோட்டலை நடத்திட்டு வருகிறார்.

சரி....! என் பின்னாடியே வாங்க....! உங்களை நான் சமையல் செய்யும் இடத்துக்கு கூட்டிட்டுப் போகிறேன், இந்த ஹோட்டல் டைனிங் ஹாலுக்கு பின்னாடிதான் இருக்கு வாங்க அப்படி ஓரமா நின்னுட்டு நடப்பதை பார்க்கலாம்!

இப்ப மணி மூனாச்சு..! புரோட்டாவுக்கு மாவு பிசையிற நேரம்...! ஆங் அதோ வந்திட்டார் பாருங்க...! அவருதான் புரோட்டா மாஸ்டர், பாருங்க அவர் குளிச்சு ஒரு மாதம் ஆச்சு...! வெறும் உடம்பு, ஒரு அழுக்கு லுங்கி, நைந்து போன ஒரு சிகப்புத் துண்டு, இதுதான் அவர் யூனிபார்ம்..! சரி மாவு மூடைய தூக்கி தோள்ல போட்டுட்டு வெளிய போகிறார், வாங்க..! நாமளும் வெளிய அவர் பின்னாடியே போவோம்....!

எப்பவும் புரோட்டாப் போடுற இடம், கடைக்கு வெளியதான் இருக்கும்! இரவு ஊர் சுத்தும் தெருநாய்கள் இந்த புரோட்டா கல்லு மேல படுத்துதான் தூங்கும்...!அதுல படுத்திருந்த நாய்களை விரட்டிவிட்டு லைட்டா தண்ணீரை தெளிச்சு ஒரு கழுவு...! கழுவி விடுறாரு!


மாவை அதுல கொட்டி, நடுவுல குழி பறிச்சு, தண்ணீர் அழுக்கு டிரம்ல இருந்து கொஞ்சம் ஊற்றி, எண்ணெய், டால்டா, முட்டை, எல்லாம் உடைத்து ஊற்றி பிசையறார்! நல்ல பக்குவமா மாவு வருது.....இடையில் மண்டைய வேறச் சொறிஞ்சுக்கறார். அப்பப்ப கொசுவையும் அடிப்பார்.

மாஸ்டருக்கு வாய் நமநமங்க.. அண்டர்வேர் பாக்கட்ல இருக்கின்ற பான்பராக் பாக்கெட்டை எடுத்து கையில கொட்டி, தூ...ன்னு ஊதி வாயில போட்டுக்கிறார். கைய சும்மா அப்படி..இப்படின்னு தட்டிட்டு மறுபடியும் மாவை பிசையிறாரு..!

ஓனர் பக்கத்துல வருகிறார் என்ன சொல்றாருன்னு கவனமா கேளுங்க மக்கா..!

“ஏம்பா இன்னிக்கு எத்தனை கிலோப் போட்டிருக்கே....”

“ஐஞ்ழ்சு கிழ்லோ  முதழ்லாளி”

“எலேய் அந்த கருமத்தை துப்பிட்டுத்தான் வேலை செய்யுல....”

முதலாளி பான்பராக் எச்சில் மாவுல தெரிச்சதைப் பார்த்தாரு ஆனா கண்டுக்கலை...! மாவை மறுபடியும் பிசைஞ்சான், அடுத்தது அவன் செய்வதை நல்லாப் பாருங்க...! மாவை அப்படியே உருட்டி விக்கிரமாதித்தன் வேதாளத்தை தூக்கிட்டு போகிற மாதிரி தோள்ல போட்டுட்டு உள்ள போகிறான்....! என்ன... மக்கா இதுக்கே அதிர்ச்சி ஆனா எப்படி!? வாங்க உள்ள அவன் பின்னாடி போவோம்.

அங்க கிடந்த ஒரு அழுக்குத் துணிய எடுத்துப் நனைச்சுப் புழிஞ்சு புரோட்டா மாவுக்கு முக்காடு போட்டுட்டுப் போயிட்டான், இன்னும் ஒரு மணி...நேரம் இல்ல இரண்டு மணி நேரம் கழிச்சு வந்து மாவை உருட்டி புரோட்டாப் போடுவான். அதுல இடையில் பீடி குடிப்பான்! பான்பராக போடுவான்!, சிறுநீர் கழிக்கப் போவான்! ஆனால் நல்ல மனுசன் கை மட்டும் கழுவமாட்டான்!?


அடுத்தது நான் உங்களுக்கு காட்டப் போவது இட்லி சுடும் இடம்! வாங்க..! அதோ இட்லி பாத்திரத்துக்கிட்ட....கரண்டி தேடிட்டு இருக்காரு...பாருங்க அவர்தாம் இட்லி மாஸ்டர்..! “அண்ணே! இதுக்கெல்லாம் கைதட்டக் கூடாது சைலண்டா வாங்கண்ணே! நாம பாக்கறமுன்னு தெரிஞ்சா நம்மளை கைமா பண்ணிருவானுக!”

அதே சேம்! புரோட்டா மாஸ்டர் யூனிபார்ம் இவருக்கும், அவரு மண்டைய சொரிஞ்சாரு இவரு அக்குள்ளச் சொரியறாரு...! எங்க கரண்டிய காணம் அப்படின்னு தேடுறாரு கிடைக்கல....தன் கையே தனக்குதவி அப்படிங்கிற மாதிரி கையில மாவ எடுத்து இட்லி தட்டு குழியில அழகா விடறாரு பாருங்கண்ணே! மாவ ஊத்தி முடிச்சதும் பக்கத்துல இருந்த பக்கெட் தண்ணியில கைகழுவுறாரு...! இட்லி வெந்ததும் அதே தண்ணீரை தெளிச்சு இட்லிய பூப்போல எடுக்கிறாரு. பூப்போலதான் எடுக்கிறாரு ஆனால் இட்லி ஓங்கியடிச்சா ஒன்ரை டன் வெயிட்டு!

ஆங்...!அங்க பாருண்ணே...!இட்லிக்கு சாம்பார் எப்படி ரெடி பண்றாங்க பாருண்ணே! பூசணிக்காயச் சீவி கிரைண்டல்ல அரைச்சுப் பருப்புக்கு பதிலா போடுறாங்க, சாம்பார் கெட்டியா புளிப்பும் இனிப்பும் சுவையா இருக்கும்! 

இங்க பாருண்ணே இங்க தேங்காய் துருவற அழக...! காலை V மாதிரி வச்சுக்கிட்டு..!காலுக்கு நடுவுல தேங்காய் துருவி....துருவி...போட்டிருக்காண்ணே தேங்காய் துருவலை அவன் கால்ல அணைக் கட்டி வச்சிருக்காண்ணே!

அங்க பாருண்ணே டீ வடிக்கிறதுக்கு ஒரு வேட்டியப் பயன் படுத்துவாங்க..அது பாதையில கிடக்கு, எல்லாரும் அதை மிதிச்சிட்டு போறாங்க.., அதையே எடுத்து ஒரு பெரிய அண்டாவுல டீ வடிக்கிறாங்க...!

புரோட்டா குருமாவுல கார எசன்சஸ ஊத்தி, பச்சை கடலை எண்ணெய கலந்து வச்சிறாங்க....நாம பார்சல் வாங்கி வந்தா எண்ணையா நிற்குமே! அதுதான் காரணம்! இது அல்சர்ல கொண்டு போய் விட்டிடும்!

சரி...!போதும் வெளிய போலாம் வாங்க குமட்டிக்கிட்டே நிக்கிறீங்க....!முதலாளி பார்த்திருவான் வாந்தி கீந்தி எடுத்து வச்சிறாதிங்க....நம்மளையே முதலாளி பார்க்கிறான் வாங்க மெதுவா வாங்க.....“என்ன அண்ணாச்சி சாப்பிடலையா...?” (பயபுள்ள முதலாளி..! சாப்பிடாம போறவங்களை எப்படித்தான் கண்டுபிடிக்கிறானோ!)

“இதோ வருகிறோம் அண்ணாச்சி! வெளிய ஒருத்தரு இருக்கிறாரு... காணம் கூட்டிட்டு வருகிறோம்...”

“சீக்கிரம் கூட்டிட்டு வாங்கண்ணாச்சி! புரோட்டா சூடா போட்டிட்டு இருக்கம்ல.....”

“என்னாது புரோட்டாவா...?”

“அட ப்புரோட்டா வேணாமா...? இட்லி சூடா இருக்கு..! வாங்க...!”

“எது இட்லியா.......!”

”அட இட்லி சாப்பிட்டு டீ குடிங்க நல்லாயிருக்கும்....”

“டீ......யா..? சரி இதோ இந்தப் பதிவ படிச்சிட்டு இருக்காரே அவருக்கு கொடுங்க.....!” 

நன்றி : (ஒரு ஹோட்டலை துப்பறிந்து நமக்கு சொன்ன) தமிழ்வாசி! பிரகாஷ்


படம் : கூகுள் தேடல்!

30 comments:

மயிலன் 7:05:00 PM  

ஒரு ப்ளேட் வாந்தி பேதி பார்சல்ல்ல்...

மயிலன் 7:07:00 PM  

//ஆனால் நல்ல மனுஷன் கை மட்டும் கழுவமாட்டான்...//

யாருய்யா நக்ஸ் மாமாவ கலாய்க்கறது....?

மகேந்திரன் 7:07:00 PM  

ஹோட்டல் சாப்பிட்டே உயிர்வளர்க்கும் ஆட்கள் நிறைய...
இதுபோன்ற பதிவுகளை அவர்கள் பார்க்கவேண்டும்..

NAAI-NAKKS 7:16:00 PM  

Een intha kolai very...????
Oru maarkkamaa thaan...
Irukkeeru.....

Naanum....post-i...
Pla murai padichchi....
Parthutten....


Yaar...ezhuthuna...mathiriyum....
Theriyalaiye......!!!!?????

Yaar-nu...solluya...?????

திண்டுக்கல் தனபாலன் 7:20:00 PM  

வீட்டில் எவ்வளவு நன்றாக செய்தாலும் குறை சொல்லும் நபர்கள் இந்தப் பதிவை படிக்க வேண்டும்...
நன்றி…
(T.M. 4)

என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

மனசாட்சி™ 8:15:00 PM  

ஹோட்டல் பக்கம் தலை வைக்க பயமா கீதுப்பா - நகைசுவையாக சொன்னாலும் சில இடங்களில் நடப்பு தானே

உலக சினிமா ரசிகன் 8:19:00 PM  

நண்பரே!

அப்படியே பைவ் ஸ்டார் ஹோட்டல்களில் நடக்கும் அக்கிரமங்களை பதிவு செய்யவும்.

நான் ரோட்டோரக்கடைகளில் சாப்பிடும் போது... இது வரை பாதிப்புக்குள்ளானது இல்லை.
ஆனால் பைவ் ஸ்டார் ஒட்டலில் சாப்பிட்டு புட் பாய்ஸன் ஆகி அவஸ்தை பட்டிருக்கிறேன்.

சங்கவி 10:11:00 PM  

மதுரை ஹோட்டலா... ஓடு ஓடு ஓடு...

! சிவகுமார் ! 10:18:00 PM  

இனிமே யாரு ட்ரீட் கேட்டாலும் இங்கதான் கூட்டிட்டு போகணும்.

! சிவகுமார் ! 10:19:00 PM  

இது மதுரை மணிவண்ணனின் பினாமி ஹோட்டலாம்.

! சிவகுமார் ! 10:19:00 PM  
This comment has been removed by the author.
வவ்வால் 10:34:00 PM  

சுரேஷ் மே/பா உணவு விடுதி கண்காணிப்பாளர்,

கையாள மாவு பிசைஞ்சதுக்கே இம்புட்டு அலுத்துகிறிங்களே, காலால் மாவு பிசையிறதை எல்லாம் கண்ணால பார்த்தவன் நான் என்னத்த சொல்ல.

பெரும்பாலான கல்லூரி விடுதிகளில் ஒரு அலுமியன தட்டில் மாவு கொட்டி தண்ணீர் ஊத்தி சாணி மிதிக்கிறாப்போல காலல் மிதிச்சு தான் பரோட்டா,சப்பாத்தி செய்யுறாங்க.

ஆயிரம் பேருக்கு மாவு பிசையிறதுன்னா சும்மாவா :-))

அது என்ன கார எசன்ஸ் புதுசா இருக்கு, கேசரி பவுடர் போட்டு ரத்த சிவப்பா கறி குழம்பு செய்வாங்க. நீங்க சொல்றது புதுசா இருக்கே.

தமிழனுக்கு எதையும் தாங்கும் இதயமும் ,எதையும் செரிக்கும் குடலும் இருக்கும் போது என்னையா கவலை :-))

வவ்வால் 10:40:00 PM  

அப்புறம் ஹோட்டல் பெருக்க பயன்ப்படுத்தின பழைய தென்னம் தொடைப்பம் வச்சு தோசைக்கல்லை வறட் வறட்டுன்னு கூட்டி பெருக்கிட்டு, கல்லு சூடாச்சான்னு சோதனை செய்ய நெத்தி வேர்வையை வழிச்சு கல்லு மேல சுண்டி விடுவார் ,சொய்ங்குன்னு சத்தம் வந்தால் சூடான கல்லுன்னு சுட சுட தோசை போடுவாரே சரக்கு மாஸ்டர் அதை சொல்லவேயில்லை :-))

இரவு வானம் 12:45:00 AM  

இப்படி எல்லாம் பண்ணுனாத்தான் டேஸ்ட்டா இருக்கும் மாம்ஸ் :-) வாரத்துக்கு நாலு நாள் ஹோட்டல்ல பார்சல் வாங்கி சாப்பிடுறீங்க உங்களுக்கு தெரியாதா?

மோகன் குமார் 1:09:00 AM  

ஏனுங்க இப்படி தொடர்ந்து மிரட்டுறீங்க ?

தமிழ்வாசி பிரகாஷ் 2:25:00 AM  

ஏன்யா.... இதுக்கு தான் எப்ப போன் போட்டாலும் வேறென்ன விஷேசம்... ஏதாவது சேதி இருக்கான்னு நச்சரிக்கறது இப்படி பதிவு தேத்ததானா??????

தமிழ்வாசி பிரகாஷ் 2:27:00 AM  

கோவை நேரம் பிளாக்குக்கு எதிர்பதிவாவே போடறிங்களே!!! ஏன்யா... அவரு உங்களை எங்கயாவது சாப்பிட கூட்டிட்டு போகலியா?

தமிழ்வாசி பிரகாஷ் 2:28:00 AM  

நன்றி : (ஒரு ஹோட்டலை துப்பறிந்து நமக்கு சொன்ன) தமிழ்வாசி! பிரகாஷ்///

ஒரு ஹோட்டல் இல்லை... பலப்பல.... ஹி..ஹி...

காட்டான் 2:45:00 AM  

ஏன்யா உமக்கும் இந்த ஹோட்டல் முதலாளிகளுக்கும் ஆகமாட்டேன்குதே..!

அஞ்சா சிங்கம் 2:49:00 AM  

அடடே இந்த ஆளு ஓட்டல் ஒனராதான் இருப்பாரு போல .

வேடந்தாங்கல் - கருண் 2:58:00 AM  

மச்சி இனி ஓட்டலுக்கு பொய் சாப்பிட தோணாத மாதிரி பதிவு போட்டுடியே...

koodal bala 6:36:00 AM  

நெறைய எடத்துல இந்த மாதிரிதான் ...இருந்தாலும் என்ன செய்ய ஒரு ஆஃப் அடிச்சிட்டு உள்ள போயி உக்காந்தா ஒரு கருமமும் தெரியிறதில்ல...

சென்னை பித்தன் 6:56:00 AM  

நல்லவற்றையே சொன்னால் எப்படி.இப்படியும் எழுதி எச்சரிக்க வேண்டியதுதான்.ஆனால் எந்த ஓட்டல்?

சென்னை பித்தன் 6:59:00 AM  

வவ்வால் சொன்னது

//கல்லு சூடாச்சான்னு சோதனை செய்ய நெத்தி வேர்வையை வழிச்சு கல்லு மேல சுண்டி விடுவார் //

பாதி சரி. எந்த வேர்வை என்பதே கேள்வி!

s suresh 7:32:00 AM  

எஸ்கேப்!

இன்று என் தளத்தில் மழை!ஹைக்கூக்கள்!http://thalirssb.blogspot.com/2012/08/blog-post_6.html

வரலாற்று சுவடுகள் 3:08:00 PM  

@வவ்வால்
///
தமிழனுக்கு எதையும் தாங்கும் இதயமும் ,எதையும் செரிக்கும் குடலும் இருக்கும் போது என்னையா கவலை :-))///

செம செம ஹி ஹி ஹி!

வரலாற்று சுவடுகள் 3:16:00 PM  

@தமிழ்வாசி பிரகாஷ்

///
நன்றி : (ஒரு ஹோட்டலை துப்பறிந்து நமக்கு சொன்ன) தமிழ்வாசி! பிரகாஷ்///

ஒரு ஹோட்டல் இல்லை... பலப்பல.... ஹி..ஹி...
///

என்ன பாஸ் என்னை மாதிரியே நீங்களும் வெள்ளந்தியா இருக்கீங்க.. இதுல இருக்குற உள்குத்து தெரியாம!

இனிமே நீங்க மதுரையில ஏதாவது ஒரு ஓட்டளுக்குள்ள நுழைஞ்சா என்ன ஆகும்னு நினைச்சு பாருங்க! மதுரைக்காரய்ங்க சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவாய்ங்க, இவரு வேற நீங்க இன்பார்மர்ன்னுட்டாரு இனிமே என்ன நடக்குமோ!

உங்களை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு பாஸ் :D :D

devadass snr 11:05:00 PM  

என்ன சார் பன்றது?டிரிங்ஸ் சாப்பிடறவங்க,ஒரு குறிப்பிட்ட அளவு பணத்துக்குள் வயிறு நிறைய சாப்பிடறவங்க அங்க போயி சாப்பிடறாங்க.காசு கூட போனாலும் பரவாயில்லை என தரமான ஹோட்டல் தேடி சாப்பிட வேண்டும்.இதற்க்கெல்லாம் ஒரே தீர்வு
வீட்டைத் தவிர எதையும் எங்கும் சாப்பிடக்கூடாது.

வா.கோவிந்தராஜ், 12:59:00 AM  

இனிமே நீங்க மதுரையில ஏதாவது ஒரு ஓட்டளுக்குள்ள நுழைஞ்சா என்ன ஆகும்னு நினைச்சு பாருங்க! மதுரைக்காரய்ங்க சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவாய்ங்க, இவரு வேற நீங்க இன்பார்மர்ன்னுட்டாரு இனிமே என்ன நடக்குமோ!

உங்களை நினைச்சா எனக்கு பாவமா இருக்கு பாஸ் :D :Dதமில்வாசியை ஓட்டல் ஓனர் தேடிக்கிட்டு இருக்கார்

Post a Comment

வீடு சுரேஸ்குமார். Powered by Blogger.

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP