உயர்திரு420
>> Saturday, August 20, 2011
உயர்திரு420
நடிகர் : சினேகன்
நடிகை : மேக்னாராஜ்
ஜெயபிரகாஷ், ராஜ்கபூர், தயாரிப்பாளர்சந்திரசேகர்,
தீபக், பாஸ்கி, ரமேஸ்கண்ணா
இயக்கம் : பிரேம்நாத்
இசை : மணிசர்மா
பாடல்கள் : சினேகன், அறிவுமதி, வாலி, கிருதயா, சுந்தர்,
பாடியவர்கள் : ஹரிகரன், ராகுல்நம்பியார், முகேஷ், ரஞ்சித், ஸ்வேதாமோகன், கார்த்திக்
தயாரிப்பு : ரிச் இந்தியா டால்க்கிஸ்
பாரதிராஜாவிடம் பாடம் பயின்று சில விளம்பர படங்களை இயக்கிய பிரேம்நாத் முதன்முதலாக சந்திரசேகரின் தயாரிப்பில்
இயக்குனராக களம் இறங்கியுள்ளார் நீண்ட இடைவெளிக்கு பின் வசீகரன் (கண்களால் கைது செய்) இன்னும் அதே இளமையுடன் நடித்திருக்கின்றார்
நெம்பர் ஒன் பிராடாக வரும் சினேகன் (அவர் பெயர் "தமிழ்" இயக்குனருக்கு தமிழ் பிடிக்காதோ)
அது இது என சின்ன பிராடு வேலை செய்யும் சினேகன் வசீகரன் நடத்தும் ஹோட்டல் (நஸ்டத்தில் இயங்கும் பைவ் ஸ்டார் ஹோட்டல் லாஜிக் இல்லையே) GM போஸ்ட்க்கு இண்டர்வியுக்கு போகிறார் நினைச்ச மாதிரியே வர்றவங்க எல்லாரும் அட்டு கேள்விக்கு மொக்கையா பதில் சொல்றாங்க நம்ம நாயகன் (வழக்கம் போல) செலக்ட் ஆயிடுறார்ங்க
மேக்னாராஜ் ஆரம்ப கால நயன் மாதிரி சும்மா கும்முன்னு இருக்காங்க குளோஸ்அப் ஷாட்லதா கொஞ்சம் பயமா இருக்கு
கார் ஷோரூம் சேல்ஸ் கேர்ளாக வரும் அம்மணியை சினேகன் ஒரு ஹோட்டலில் பிராடு பண்ணி பில் கட்டவைத்து விடுகிறார் பின்பு காதல் வருகிறது (பாடல் காட்சிகளுக்கு தியேட்டரில் ஒரு ஆள் கூட உள்ள இல்லை)
GM ஆன நம்ம நாயகன் அதிரடியா செய்த மாற்றத்தில் ஹோட்டல் வருமானம் உயர்கிறது இதனால் வசீகரனுக்கும் சினேகனுக்கும் நட்பு பலமாகிறது ஒரு நடிகையை காதலிக்கும் வசீகரன் ரகசியமாக திருமணம் செய்கின்றார் அவர்களின் முதலிரவு அறையில் கேமரா வைத்து ஜெயபிரகாஷ் நியூஸ் போடுகிறார் விபச்சாரம் செய்ததாக எதிர்பாராதவிதமாக வசீகரனை தூக்கில் போடுகிறார் சினேகன் மருத்துவமனையில் உயிருக்கு போராடுகிறார் வசீகரன்
ஜெயபிரகாஷ் மேல் வழக்கு தொடுத்து 64கோடி பணம் வாங்குகிறார் அதை எடுத்துக்கொண்டு மலேசியா போகிறார் சினேகன் வசீகரனின் கனவான அரண்மனையை வாங்குவதற்க்கு நினைவு மீன்ட வசீகரன் சினேகனை துரத்திக் கொண்டு மலேசியா
செல்கிறார் பிறகு மீதி திரையில் காணுங்கள்
1. கோ படத்திற்க்கு பிறகு சீட் நுனியில் உக்காரவைக்கும் படம்
2. ராமகிருஷ்ணன் அவர்களின் வசனம்
3. சினேகனின் புது முகம்
4. சிறந்த ஒளி/ஒலிப்பதிவு
படத்தின் MINUS
1. பாடல்கள் எடுத்த விதம்(கேட்பதுக்கு நன்றாக உள்ளது)
2. சரியான பிண்ணணி இசை இல்லாதது
3. நிறைய இடங்களிள் லாஜிக் இல்லாதது
4. படத்தின் எடிட்டிங்கில் சரியான Fillter graphics இல்லாமல் இருப்பது சாதரண படங்களிலேயே கலக்குறாங்க Action movie யில் இருந்தால் இன்னும் சிறப்பு
வசனம்
-------------------------------------------------------------------------------------------------------------
பாஸ்கி : முடியுள்ளவனைத்தான் மூளையுள்ளவன்னு நினைச்சுக்குறாங்க
இன்னோருவர் : சாருக்கு ரண்டும் இல்லை
-------------------------------------------------------------------------------------------------------------
ராஜ்கபூர் : ஆண்டவன் நாக்கையும் இதயத்தையும் கல்லா இருக்கக்கூடாதுதான் எலும்பு இல்லாம படைச்சிருக்கான் உடம்புல இருக்கிற வேற ஒரு போன்லெஸ் பத்தி எழுதறத இதோட நிறுத்திக்குங்க
-------------------------------------------------------------------------------------------------------------
அவ உன்னை புரிஞ்சுக்காம போறா அவளுக்காக நீ தற்கொலை பண்ணிக்கலாமா
எனக்காக நீ ஏன் தற்கொலை பண்ணிக்கலைன்னு கேப்பா
-------------------------------------------------------------------------------------------------------------
உங்க பேரு
தமிழ்
நான் தெலுங்கு
GM ஆகுறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா
கஷ்டம்ன்னு நினைக்கரதுனாலதான் நீங்க இன்னும் GM ஆகலயோ
-------------------------------------------------------------------------------------------------------------
காதலிக்கறவன் அதிர்ஷ்டசாலி காதலிக்காதவன் புத்திசாலி
-------------------------------------------------------------------------------------------------------------
3 comments:
aahaa!! ஆஹா
உங்கள மாதிரியே முயற்சி பண்ணி இருக்கேன் அதுக்கு தான் இந்த ஆஹாவா.........?
hi .. Nice Post ..
www.chicha.in
Post a Comment