வெப்பம் ஒரு கண்ணோட்டம்
>> Saturday, July 30, 2011
கௌதம்மேனன் தனது உதவியாளர் அஞ்சனாவை தனது தயாரிப்பு மூலமே இயக்குனராக்கி இருக்கின்றார் அது மட்டும் இல்லாமல் ஒரு கேரக்டருக்கு குரல் கொடுத்து இருக்கின்றார் (காக்க காக்கவில் ஒரு ஹஸ்கி வாய்ஸ் வருமே கௌதம் மேனனின் குரல் இதிலும் கொடுத்து இருக்கின்றார்)
நித்யா மேனன் 180௦படத்தில் ல் அழகான தேவதை யாக வந்தவர் இதில் மூன்றுநாள் காய்ச்சலில் இருந்து வந்தவர் போல் இருக்கின்றார் இருந்தாலும் பாடல் காட்சிகளில் சுருட்டை முடியுடன் அழகாக இருக்கின்றார்
கார்த்திக் குமார் நடனம் ஆடும்போது கேமராவையே பார்த்துகொண்டு ஆடுகின்றார் நடிப்பு ஓகே
நானி சிறந்த நடிகர் இயல்பாய் இருக்கின்றார் காதல் காட்சிகளில் நித்யா அளவுக்கு இல்லாமல் இருக்கமாய் இருக்கின்றார்
அண்ணனாய் வரும் அவர் பெயர் தெரியவில்லை ராஜ்கிரனை ஞாபகப் படுத்துகின்றார் புதுமுகம் என்று தெரியவில்லை
பிந்துமாதவி விலை மாதுவாக வரும் அவர் கண்களில் கவிதை வாசிக்கின்றார் சில்க் போன்று உடல் கட்டு உதடு கடித்து உறவு கொள்ளும் காட்சிகளில் விரசம் இல்லை கிளுகிளுப்பும் இல்லை முறையாக அவரை பயன்படுத்தவில்லை
அம்மச்சியாக வருபவர் வில்லி கேரக்டருக்கு ஒட்டவில்லை மாமி போல் இருக்கின்றார் (தூள் சொர்ணாக்கா போல் இருக்கணும்)
இயக்குனர் அஞ்சனா கதைக்காக மெனக்கெடவில்லை (புதுபேட்டையை மீண்டும் பார்த்தமாதிரி இருக்கு) ஆனால் ஓம்பிரகாஷின் ஒளிப்பதிவு அருமை படத்தில் எதிர்பாராத காட்சிகள் என்று எதுவும் இல்லை ஒரு வேகம் இல்லை.
ரசிக்கும்படி இருப்பது நா முத்துகுமார் அண்ட் ஜோஸ்வா ஸ்ரீதரின் பாடல் காட்சிகள் பாடல் கேட்கும் போது இருக்கும் இனிமை விசுவலில் இல்லை!
இயக்குனர் ஒரு பெண் என்பதை நம்ப முடியவில்லை! ரத்தம், அருவாள், கஞ்சா என சகலமும் இருக்கின்றது இதையெல்லாம் விட்டு விட்டு வரும் காலத்தில் மென்மையாய் ஒரு படம் இயக்குவார் இயக்குனர் கண்டிப்பாக வெற்றி பெரும் அதற்கான திறமை அவருக்கு உண்டு என சில காட்சிகள் இந்த படம் உணர்த்துகின்றது
2 comments:
நல்ல விமர்சனம்
மிகவும் நன்றி உங்கள் பதிவுகள் என்னை கவனிக்க வைக்கின்றன
Post a Comment